Vijay - Rashmika Twitter
சினிமா

Thalapathy 66 : தளபதி விஜயுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா!

Antony Ajay R

கன்னடா, தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் ரசிகர்களின் ஆஸ்தான அன்பைப் பெற்ற நடிகை ராஷ்மிகா. சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு கிரிக் பார்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தவர் ராஷ்மிகா மந்தனா. அவர் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது 4 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் 50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. முதல் படத்திலேயே அதிக ரசிகர்களைச் சம்பாதித்துக்கொண்டவர் ராஷ்மிகா.

அதன் பிறகு விஜய் தேவரகொண்டா உடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். இவரது ரியாக்‌ஷன்களுக்கு 2k ரசிகர்கள் ஹார்ட்ஸ்களை தெரிக்கவிட்டனர். சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. மிஷன் மஞ்சு படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நடித்து வரும் இவர் ‘நேஷனல் க்ரஷ்’ என அழைக்கப்படுகிறார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஹீரோயின் யார் என்ற கேள்வி பல நாட்களாக இருந்து வருகிறது. இந்த படம் பான் இந்தியா படமாக உருவாவதனால் தமிழ் சினிமா நாயகிகளுக்கு வாய்ப்பு வருவது மிக குறைவு தான் என்று சொல்லப்பட்டது. ஹீரோயின் ஆப்ஷன் லிஸ்டில் முதலிடத்திலிருந்தது ராஷ்மிகா தான். ஆனால் அவர் புஷ்பா - 2 உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருப்பதால் டிஷா பட்டானி மற்றும் கீர்த்தி சனோன் போன்றோரிடம் பேசப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் இறுதியில் ராஷ்மிகாவே படத்தின் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளான இன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தை கார்த்தி மற்றும் நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம் இருப்பதால் மற்றொரு நாயகியையும் அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?