10 facts about Titanic film  Twitter
சினிமா

Titanic : ரீ-ரிலீஸாகும் டைட்டானிக் - நீங்கள் அறிந்திராத 10 சுவாரஸ்ய தகவல்கள்

பிப்ரவரி 10ம் தேதி 3D-யில் ரீ-ரிலீஸ் ஆகிறது. படத்தை மீண்டும் பார்ப்பதற்கு முன் டைட்டானிக் பற்றிய நீங்கள் அறிந்திராத 10 உண்மைகள் இங்கே பார்க்கலாம்.

Priyadharshini R

டைட்டானிக் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஆடம்பரப் பயணிகள் கப்பலான டைட்டானிக், அதன் முதற் பயணத்தின் போதே பனிப்பாறை மீது மோதிக் கடலுக்குள் மூழ்கி ஆயிரக் கணக்கில் பயணிகள் இறந்து போன உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது.

என்னதான் ஹாலிவுட் திரைப்படமாக இருந்தாலும் உலகம் முழுவதும் இதன் புகழ் பரவி கிடக்கிறது.

இந்நிலையில் 'டைட்டானிக்' மீண்டும் வெளியாகிறது. 25 ஆண்டுகள் கொண்டாட்டமாக பிப்ரவரி 10ம் தேதி 3D-யில் ரீ-ரிலீஸ் ஆகிறது.

படத்தை மீண்டும் பார்ப்பதற்கு முன் டைட்டானிக் பற்றி நீங்கள் அறிந்திராத 10 உண்மைகள் இங்கே பார்க்கலாம்.

  • டைட்டானிக் 1997 இல் முதன்முதலில் வெளியிடப்பட்டபோது சுமார் $1.8 பில்லியன் (£1.45 பில்லியன்) வசூலித்தது. இது தற்போது அதிக வசூல் செய்த மூன்றாவது படமாக உள்ளது. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) மற்றும் அவதார் (2009) ஆகிய 2 திரைப்படங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

  • டைட்டானிக் 14 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது டைட்டானிக்

  • டைட்டானிக் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், விபத்துக்குள்ளான நிஜ கப்பல் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டதால் இப்படம் வந்தது.

  • ரோஸ் கதாபாத்திரத்திற்கு பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். க்வினெத் பேல்ட்ரோ, வினோனா ரைடர், கிளாரி டேன்ஸ், கேப்ரியல் அன்வர் மற்றும் ரீஸ் விதர்ஸ்பூன் ஆகியோர் ரோஸ் பாத்திரத்திற்காக பரிசீலிக்கப்பட்டனர், இறுதியில் கேட் வின்ஸ்லெட் இந்த கதாபாத்திரத்திற்கு செட்டானாராம்.

  • ஜேம்ஸ் கேமரூன் மற்றும் படக்குழுவினர் விபத்துக்குள்ளான நிஜ டைட்டானிக் கப்பலை திரைக்கதையை எழுதுவதற்கு முன்பே 12 முறை ஷூட் செய்துள்ளனர்.

  • படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் அந்த வைர நெக்லஸின் உண்மையான மதிப்பு $300 மில்லியனுக்கும் (£243 m) அதிகமாம். ஆனால் படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த தயாரிப்பதற்கு சுமார் $10,000 (£8,000) செலவானதாம்.

  • டைட்டானிக் முதன்முதலில் நவம்பர் 1, 1997 அன்று, டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் அதன் உலகத் திரையிடலுக்கு முன்னதாகக் காட்டப்பட்டது.

  • ஜேம்ஸ் கேமரூனின் கூற்றுப்படி, வெளியான ஒரே நாளில் அதிக வசூல் செய்த நாள் காதலர் தினமாகும். இதனாலேயே கேமரூன் படத்தை டிசம்பர் மாதம் வரை காத்திருக்காமல், இந்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்.

  • மெக்ஸிகோவில் உள்ள பாஜா ஸ்டுடியோவில் கப்பலின் பிரதி கட்டப்பட்டது. மூழ்கும் காட்சியை ஸ்டண்ட் நடிகர்களுடன் படமாக்க அனுமதித்தாலும் கப்பல் மூழ்கும்போது பாதியாக உடைந்து போவதை படமெடுக்க கப்பலின் மாதிரியும் பயன்படுத்தப்பட்டது.

  • படப்பிடிப்பின் போது பல படக்குழுவினர்களுக்கு படுகாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?