SoulofVarisu ட்விட்டர்
சினிமா

Varisu: இன்று வெளியாகிறது விஜய்யின் 'அம்மா' பாடல் - ட்விட்டர் டிரெண்டிங்கில் #SoulofVarisu

Keerthanaa R

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.

விஜய், ராஷ்மிகா மந்தன்னா, குஷ்பூ, ஷாம், சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் படம் வாரிசு. இந்த திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகிறது.

இயக்குநர் வம்சி இந்த திரைப்படத்தை இயக்குகிறார், தில் ராஜூவின் ஸ்ரீ வென்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த பாடலுக்கு Soul of Varisu எனத் தலைப்பிட்டு புரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு. ”அம்மா, இது உனக்காக!” எனக் குறிப்பிட்டு தன் பதிவை வெளியிட்டிருந்தார் இசையமைப்பாளர் தமன். மேலும் இந்த பாடல் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல் எனவும் தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார்

இந்த பாடலையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். பின்னணி பாடகி சித்ரா இந்த பாடலை பாடியுள்ளார். இன்று மாலை 5 மணிக்கு பாடல் வெளியாகிறது.

இதனையடுத்து ட்விட்டரில் Soul of Varisu என்ற ஹாஷ் டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்த திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ரஞ்சிதமே பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார், தீ தளபதி பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சிதமே பாடல் 100 மில்லியன் பார்வகளை கடந்துள்ளது. தீ தளபதி பாடலும், 25 மில்லியன் பார்வைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?