இதுவரை வெளிவந்த படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை வலிமை அடித்து நொறுக்கி உள்ளது.
வெறும் மூன்றே நாளில் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
தமிழ்நாட்டை விட, மற்ற நாடுகளில் வலிமை படத்தை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகிறார்கள்.
படத்தின் நீளத்தை விமர்சகர்கள் பலர் குறையாக கூறியதால் படத்தில் 14 நிமிட காட்சிகள் கத்தரிக்கப்பட்டு, ரன்னிங் டைம் இரண்டரை மணி நேரமாக சுருக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.
இதுவரை வெளியான தகவலின் படி முதல் 5 நாட்ககளில் வலிமை படம் 150 முதல் 160 கோடிகளை வசூல் செய்துள்ளதாம். முதல் நாளில் 59.48 கோடி , இரண்டாவது நாளில் 35.74 கோடி, மூன்றாவது நாளில் 28.30 கோடி, நான்காவது நாளில் 36.23 கோடி என வசூல் செய்துள்ளது.
மொத்தமாக இதுவரை 159 கோடிகளை வசூல் செய்துள்ளாதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் வலிமை படத்தின் வசூல் அதிரடியாக குறைந்து விட்டதாக ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
Valimai
கோலிவுட் வட்டாரம் உற்று நோக்குவது விகடன் விமர்சன குழு அளிக்கும் மதிப்பெண்களைதான்.
விகடன் விமர்சனம் இன்று வெளியாகி உள்ளது. அதில்,
அதில், “இது அஜித்தின் ஒன் மேன் ஷோ. துப்பறியும் காட்சிகளில் ஸ்டைலாக, ஆக்ஷன் காட்சிகளில் மாஸாக, சென்டிமென்ட் காட்சிகளில் பாந்தமாகப் பல பரிமாணங்களில் மிளிர்கிறார் அஜித். ‘ரிஸ்க் எதுக்கு’ என்றெல்லாம் யோசிக்காமல் ஸ்டன்ட் காட்சிகளுக்காக அவர் கொட்டியிருக்கும் உழைப்பு பாராட்டுதலுக்குரியது,” என்று கூறப்பட்டுள்ளது.
விகடன் விமர்சனக்குழு எவ்வளவு மதிப்பெண்கள் அளித்துள்ளது என தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.