மாயி சுந்தர்  ட்விட்டர்
சினிமா

வெண்ணிலா கபடி குழு நடிகர் மாயி சுந்தர் காலமானார் - ஒரே மாதத்தில் இரண்டாவது மரணம்!

Keerthanaa R

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த துணை நடிகர் மாயி சுந்தர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரில் சிகிச்சை பெற்று வந்த சுந்தர்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

நடிகர் மாயி சுந்தர், மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் தோன்றி பிரபலமானார்.

கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் இவர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். தனது சொந்த ஊரான மன்னார்குடியில் இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 2.45 மணியளவில் இவரது உயிர் பிரிந்தது.

50 வயதாகும் மாயி சுந்தருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த ஹரி வைரவன் என்ற நடிகரும் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

ஹரி வைரவனின் சிகிச்சைக்கு நடிகர் விஷ்ணு விஷால் உதவி வந்தார். அவர் மறைந்த பிறகு, அவரது குழந்தைகளின் படிப்பு செலவையும் நடிகர் விஷ்ணு விஷால் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஒரே மாதத்தில், ஒரே படத்தில் இணைந்து நடித்த இரு நடிகர்கள் இறந்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதே படத்தில் நடித்த நிதீஷ் வீரா என்ற நடிகரும், கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?