சீமான், வெற்றிமாறன்  Twitter
சினிமா

வெற்றிமாறன் இயக்கும் ராஜராஜ சோழனின் வாழ்க்கைப் படம் - சீமான் ட்வீட்

Antony Ajay R

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மணி விழாவை ஒட்டி தமிழ் ஸ்டூடியோ சார்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட விழா நடைபெற்றது. அதில் பங்குகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறனின் ராஜராஜ சோழன் பற்றிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

"திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, ராஜராஜ சோழனை இந்து மன்னராக்குவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சினிமாவிலும் நமது அடையாளங்கள் பறிக்கப்படும். நம் அடையாளங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விடுதலைக்காக போராட வேண்டுமென்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்." என்று பேசினார் வெற்றிமாறன்.

வெற்றிமாறனின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் எழுந்தது. திரைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் தங்களின் கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் வெற்றிமாறனுக்கு ஆதரவளித்துப் பேசிய சீமான், "எங்களது அருண்மொழிச் சோழனை இந்து மன்னர் என்பது வேடிக்கை. இதுவும் வள்ளுவருக்கு காவி பூசுவது மாதிரி தான். அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது. இந்த மதமும் கிடையாது. உலகத்துக்கே தெரியும் அவர் சைவ மரபினர் என்று" என்று கூறினார்.

சீமானின் கருத்து இணையத்தில் வைரலானது. திருமாவளவன், கமல்ஹாசன் என பலர் வெற்றிமாறனின் கருத்தை ஆதரித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தனது ட்வீட்டின் மூலம் ராஜராஜ சோழனின் உண்மை வரலாற்றையும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வரலாற்றையும் சீமானே தயாரிக்க வெற்றிமாறன் இயக்குவார் என கூறியுள்ளார்.

முன்னதாக சோழர்கள் வரலாற்றைத் தளுவிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக வெளியானது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் ஏற்கெனவே வரலாற்றை மாற்றி எழுதியதாக கூறப்படும் நிலையில் படமும் அதே மாதிரியான விமர்சனங்களைப் பெற்றது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?