உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் சரத் பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற முதலில் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு பின் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் சரத் பாபு.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தன
கிட்ட தட்ட 5 தசாப்தங்களாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார் சரத் பாபு. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகராக திக்ழந்தவர். இவர் நிழல் நிஜமாகிறது, சட்டம் உள்ளிட்ட படங்களில், நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
அண்ணாமலை, முத்து, முள்ளும் மலரும், வேலைக்காரன் போன்ற படங்களில் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்திருக்கிறார். உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். முள்ளும் மலரும், மற்றும் நிழல் நிஜமாகிறது ஆகிய திரைப்படங்கள் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தன.
ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பன்முகம் கொண்ட நடிகராக இருந்தார் சரத் பாபு.
வயது முதிர்வு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஏ ஐ ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மே 3 ஆம் தேதி இவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரவின.
அப்போதும் கமல் ஹாசன் உள்பட திரைத்துறையினர் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். ஆனால், நடிகர் சரத் பாபுவின் சகோதரி, அவரது உடல் நிலை தேறி வருவதாகவும், இது போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust