Marvel Twitter
சினிமா

Marvel: வேலை செய்வதற்கு மோசமான இடம் இது தான் - மார்வெல்லை குற்றம் சாட்டும் VFX கலைஞர்கள்

Antony Ajay R

உலகின் மிக முக்கியமான தயாரிப்பு நிருவனமான மார்வெல் மீது அதன் ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

அவஞ்சர்ஸ் உள்ளிட்ட மிகப் பெரிய சூப்பர் ஹீரோ படங்களைத் தயாரிக்கும் மார்வெல் நிறுவனம் அதன் VFX கலைஞர்களை சரியாக நடத்தவில்லை என்றுக் குற்றச்சாட்டு எழுத்திருக்கிறது.

இது குறித்து முன்னாள் மார்வெல் ஊழியர்கள் reddit தளத்தில் பேசிய குறிப்புகள் இப்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

She-Hulk: Attorney at Law

மார்வெல்லில் கடினமான டெட்லைன்ஸ் கொடுக்கப்படுவதாகவும், அதிக நேரம் வேலை வாங்கப்பட்டதாகவும் அதன் முன்னாள் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளால் மார்வல் ரசிகர்களும் நிறுவனத்தைக் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு வெளியான Black Panther திரைப்படம் அதன் மோசமான VFX -க்காக அதிகம் விமர்சனம் செய்யப்பட்டது. அதேப் போல சமீபத்தில் வெளியான She-Hulk: Attorney at Law திரைப்படமும் அதே காரணத்துக்காக விமர்சிக்கப்பட்டது. அந்த கதாப்பாத்திரத்தின் தோற்றமும் மக்களால் அதிகம் விரும்பப்படாமல் இருந்தது.

தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படமான Thor : Love and Thunder கூட விமர்சங்களில் இருந்து தப்பவில்லை.

இந்த பிழைகளுக்கு மார்வெல்லின் மோசமான VFX நிர்வாகம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

மார்வெல்லின் முன்னாள் ஊழியர் ஒருவர் அவரது அனுபவத்தை, "மார்வெல் ப்ராஜக்ட்களில் வேலை செய்வதால் நான் மிகவும் நோய்வாய்ப்படது மாதிரியும் சோர்வாகவும் இருக்கிறேன்!" எனக் கூறியிருந்தார்.

மற்றொருவர் மார்வெலில் வேலை செய்த போது அவரது தூக்கம், சோர்வு மற்றும் உணவுப் பழக்கம் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும் இந்த பதிவுகளுக்கு அதிக ரியாக்‌ஷன்கள் வந்தன. இது குறித்த குற்றச்சாட்டுகளை மார்வெல் உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?