Vijay-Samantha Twitter
சினிமா

பாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளிய விஜய், சமந்தா - பிரபல இந்திய நடிகர்கள் பட்டியல் இதோ

Keerthanaa R

ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா பட்டியலில் முதலிடத்தில் தளபதி விஜய், நடிகை சமந்தா உள்ளனர். பாலிவுட் நடிகர்களை பின்னுக்குத் தள்ளி முதல் ஐந்து இடங்களிலும் தென்னிந்திய நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அளவில் அதிக பிரபலமான நடிகர்கள் யாரென்று கேட்டால், முன்னெல்லாம் தென்னிந்திய நடிகர்களின் பெயர்கள் சற்று குறைவாகவே இருக்கும். பெரும்பாலும் பாலிவுட் நடிகர்களே மிகப் பிரபலமாக இருந்த நேரத்தில், தென்னிந்திய நட்சத்திரங்களில் யார் பிரபல என்று என்றால் அது சூப்பர்ஸ்டார், சிரஞ்சீவி போன்ற நடிகர்கள் மட்டுமே இருந்தனர்.

ஆனால், காற்று எல்லா பக்கங்களும் வீசும் என்பது போல, தற்போதைய நிலை மாறியுள்ளது. இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் யார், யாருக்கு ரசிகர்களின் அன்பு அதிகமாக இருக்கிறது என்று கேட்டால் அது தென்னிந்திய நடிகர்களுக்கு தான் என்று அடித்து சொல்லும்படி ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. அதிலும் தமிழ் நடிகர்கள் முன்னிலையில் இருப்பது இன்னும் சிறப்பு.

ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லவ்ஸ் ஜூன் 2022ன் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் இந்திய அளவில் மிக பிரபலமான நடிகர்கள் யாரென்று பார்த்தபோது தென்னிந்திய நடிகர்களே அதிகம் இருந்தனர். பட்டியலின் முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?

நம்ம தளபதி விஜய் தான்!

அந்த பட்டியலில் நடிகர் அஜித் மற்றும் சூர்யாவும் இடம்பெற்றுள்ளனர்.


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த பட்டியலில், இந்தியா முழுக்க விரும்பப்படும் நடிகர்களில் ஒரே ஒரு பாலிவுட் நடிகரின் பெயர் (ஆக்ஷய் குமார்) மட்டுமே இருந்தது. அதுவும் ஆறாவது இடத்தில். மற்ற ஒன்பது இடங்களிலும் தென்னிந்திய நடிகர்கள் தான்.

பட்டியலில் இடம்பெற்ற நடிகர்கள் தரவரிசை

1.விஜய்

2.பிரபாஸ்

3.யஷ்

4.அல்லு அர்ஜுன்

5.ஜூனியர் என்டிஆர்

6.அக்ஷய் குமார்

7.மகேஷ் பாபு

8.அஜித் குமார்

9.ராம் சரண்

10.சூர்யா

மேலும், ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லவ்ஸ் ஜூன் 2022ன் நடிகைகள் பட்டியலில் நடிகை சமந்தா முதலிடத்தில் உள்ளார். பாலிவுட் நடிகையான ஆலியா பட்டை பின்னுக்கு தள்ளி இவர் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலிலும் பெரும்பாலும் தென்னிந்திய நடிகைகளே அதிகம் இடம்பெற்றுள்ளனர். அவர்களது பெயர்கள் முறையே

1.சமந்தா

2.ஆலியா பட்,

3.நயன்தாரா,

4.காஜல் அகர்வால்,

5.தீபிகா படுக்கோன்,

6.பூஜா ஹெக்டே,

7.கீர்த்தி சுரேஷ்,

8.கத்ரீனா கைஃப்,

9.கியாரா அத்வானி,

10.அனுஷ்கா ஷெட்டி

இந்த பட்டியல் குறித்து நேற்று வெளியான பிரபல நிகழ்ச்சியான காபி வித் கரணில் பேசப்பட்ட நிலையில், தற்போது நடிகர் விஜய், நடிகை சமந்தா டிவிட்டர் டிரெண்டிங்கில் உள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?