1980, 1990 களில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரையுலகினரை மட்டுமில்லாமல் மக்கள் மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் நடித்து சினிமாவில் இருந்து ஒரு பிரேக் எடுத்துக் கொண்டார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே அரசியலிலும் ஈடுபட்டு வந்த விஜயகாந்துக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் 2016 ம் ஆண்டிற்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் போனது.
அதன் பின்னர் ஓய்வில் மட்டுமே இருந்து வருகிறார் விஜயகாந்த். சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் விஜயகாந்த் இன்று தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருடன் உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடினார்.
அதாவது தனது இளைய மகன் சண்முக பாண்டியனின் பிறந்த நாளான இன்று மகனுக்கு கேக் ஊட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் விஜயகாந்த். இந்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.