கமல்ஹாசன் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிற படம் 'விக்ரம்'. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 6 மணிக்கு தொடங்கியது. விழா தொடங்கும் முன்பு ரஜினிகாந்த் கமல் பற்றிப் பேசிய காணொலி ஒளிபரப்பப்பட்டது. இளையராஜா அனுப்பிய வாழ்த்துச் செய்தி சோதித்துப் பார்க்கப்பட்டது.
கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், இயக்குநர் ரவிக்குமார், நரேன், காளிதாஸ் ஜெயராம் எனப் பலர் கலந்துகொண்டனர். சர்ப்ரைஸ் விசிட்டாக சிம்பு களமிறங்கினார். விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பா.ரஞ்சித் கமல்ஹாசனோடு அடுத்துத் தான் இணைய உள்ள படம் பற்றிக் கூறினார்.
"லோகேஷ் நிறையப் பேட்டிகளில் தான் கமல் ரசிகர் எனச் சொல்லி இருக்கிறார். கமலுக்கு என்ன வேண்டும் என சரியாகப் புரிந்துகொண்டு லோகேஷ் இந்தப் படம் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரம் பண்ணியிருக்கிறார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல கன்டென்ட்டே இல்லையானு நிறைய பேர் கேக்குறாங்க.
அப்படி எதுவும் கிடையாது. 'விக்ரம்' அது எல்லாத்தையும் உடைச்சு பெரிய வெற்றிபெறும்னு நம்புறேன். லோகேஷுக்கு வாழ்த்துக்கள். உங்களை நம்பி நிறைய பேர் காத்திருக்கோம். பழைய விக்ரம் அருமையான படம். மதுரையைக் கதைக்களமா வச்சு கமல் சாரோட ஒரு படம் பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை.
விருமாண்டி எனக்கு ரொம்ப பிடிச்ச படம். மிக விரைவில் அவருடன் இணையப்போகிறேன்" எனப் பேசினார். விழாவில் பேசிய நடிகர் நரேன், சினிமாவுக்கு வர முக்கிய காரணம் கமல் சார்தான். கிட்டத்தட்ட 20 வருஷமா ஆழ்வார்பேட்டைல அவர் வீட்டு பக்கத்துல இருக்கேன். பிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்ச காலத்துல இருந்து அவரை பார்க்கணும்னு அங்கேயே இருப்பேன். இப்பவும் அங்கதான் இருக்கேன்.
அவர்கூட வேலை பார்த்தது ரொம்ப சந்தோஷம். இப்போ கூட அவர் முன்னாடி ஹார்ட் பீட் செம ஃபாஸ்ட்டா துடிக்குது என்றார். "கமலும் நானும் 50 வருடங்களா நண்பர்கள். ரொம்ப சுறுசுறுப்பான மனிதர். வெற்றி, தோல்வி, லாபம், நஷ்டம்னு எதைப்பத்தியும் கவலைப்படாம செம சுறுசுறுப்பா வேலை பார்க்கக்கூடியவர். அந்த விக்ரமுக்கும் இந்த விக்ரமுக்கும் ஒரு வெள்ள தாடி மட்டும்தான் வித்தியாசம். மத்தபடி இன்னும் ஒண்ணுமே மாறல!" என்றார நடிகர், இயக்குநர் சந்தான பாரதி
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp