Kamal Hassan Twitter
சினிமா

விக்ரம் : ரன் டைம் 2 மணி நேரம் 53 நிமிடம்; ரா ஏஜென்டாக கமல் - லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

Keerthanaa R

கமல் ஹாசன் நடிப்பில் வெளிவரவுள்ள விக்ரம் திரைப்படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன. ஜூன் 3ஆம் தேதி இந்த படம் இந்தியாவில் வெளியாகவுள்ள நிலையில், 2ஆம் தேதியே அமெரிக்காவில் வெளியாகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kamal Haasan

மாநகரம், கைதி, மாஸ்டர் என் ஹிட் படங்களை வரிசையாக கொடுத்த இயக்குநர் லோகெஷ் கனகராஜ், இப்போது உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து இயக்கியுள்ள படம் விக்ரம். இதற்கு முன் 1986ல் இதே தலைப்பில், கமல் நடித்து வெளிவந்த படம் விக்ரம். சை-ஃபை மூவியாக தயாரிக்கப்பட்ட விக்ரம் படம், அந்த காலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட். அதே தலைப்பு, அதே நடிகருடன் ஒரு வளர்ந்து வரும் இயக்குநர் படம் எடுக்கப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவ, ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்காக உயர்ந்தது.

ஜூன் மூன்றாம் தேதி இந்தியாவில், லோகெஷ் இயக்கிய விக்ரம் வெளிவரும். இதன் ரன் டைம், அதாவது நீளம் மொத்தம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. மேலும், ஜூன் 2ல் அமேரிக்காவில் முன்னதாகவே படம் வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Fahad Faasil

ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர் எனப் படம் குறித்து வெளிவந்த அனைத்து அப்டேட்களுக்கும் கழுகு போல் ரசிகர்கள் காத்திருக்க, கமலின் வாய்ஸ் ஓவரோடு தெறிக்கவிட்டது விக்ரம் படத்தின் ட்ரெய்லர். ஏற்கனவே ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, நரேன் என நடிகர் பட்டாளமே இருக்கிறது. இவர்களுடன் காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் சர்ப்ரைஸ் எலிமென்ட்டாக நடிகர் சூர்யா இனைந்துள்ளதாக இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் உறுதி செய்தார்.

இப்போது இன்னுமொரு கூடுதல் தகவலும் பரவி வருகிறது. அது என்னவென்று தெரியவேண்டுமா?

Vikram Still

இந்த படத்தில் கமல் ரா ஏஜென்டாக நடித்திருக்கிறார். அவர் கதாப்பாத்திரத்தின் பெயர் அருன் குமார் விக்ரம். விஜய் சேதுபதி சந்தானம் என்ற கதாப்பாத்திரத்திலும், சூர்யா விநாய்க் என்ற கதப்பாத்திரத்திலும் நடித்திருப்பதாகக் கூறப்படுகின்றன.

இயக்குநர் லோகெஷ் கனகராஜும் ஒரு கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார் என்று வட்டாரங்கள் யூகித்து வருகின்றனர். விஜயுடன், மாஸ்டர் திரைப்படத்தில் என்ட் கிரெடிட்ஸ் காட்சியில் லோகி நடித்திருந்தார். இப்போது விக்ரம் படத்திலும் ஒரு முக்கியமான கேமியோவில் லோகி தொன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வராததால், படம் வெளிவந்தால் தான் என்னவென்று தெரியும்.


சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற உலகநாயகன் கமல் ஹாசன், நடிகர் சூரியாவின் கதாபாத்திரம், கதையை இன்னும் கொஞ்சம் முன்னோக்கி நகர்த்தும் என்று தெரிவித்திருந்தார். ஒரு வேளை இது விக்ரமின் அடுத்த பாகத்திற்கான லீட் ஆக கூட இருக்கலாம் என்று ரசிகர்களின் தியரி சொல்கிறது. எதிர்பார்ப்புகளும், ஃபேன் தியரிக்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

இத்துடன் படத்தின் ஃபைனல் கட்டை பார்த்துவிட்டு உலகநாயகன் 'அடிபொளி' என புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?