Avatar 2 Twitter
சினிமா

Avatar 2 படத்திற்கும் விழுப்புரத்திற்கும் என்ன தொடர்பு? வைரலாகும் இணையதள பதிவு

Keerthanaa R

சமீபத்தில் வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று வரும் அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தில் தமிழகத்தை சேர்ந்த VFX தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையத்தில் பலரும் இவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஜேம்ஸ் கேமரூன். இவரது இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படம் வெளியானது.

ஃபேன்டசி கதைக்களம், சிறந்த பின்னணி இசை, ஸ்க்ரீன்பிளே ஆகியவற்றை தாண்டி, தொழில்நுட்ப ரீதியாக இந்த படம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த படத்தின் வி எஃப எக்ஸ் அன்றைய தேதிக்கு காலத்தை வெல்லும் வகையில் இருந்ததாகவும் பாராட்டப்பட்டது.

கடந்த 16 ஆம் தேதி, அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த படத்திலும் VFX வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஃபேஸ்புக் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில்,

“இந்த திரைப்படத்தில், விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் VFX துறையில் பணியாற்றியுள்ளனர். இவர்கள் விழுப்புரத்தின் CYS MULTIMEDIA- பிரசாத் ஸ்டுடியோவில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட டெக்னீஷியன்கள் இந்த திரைப்படத்தில் பணியாற்ற்றியுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு இணையவாசிகள் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.

அவதார் 2 திரைப்படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?