Amala Shaji : இந்த 2கே கிட் மேல் இவ்வளவு வெறுப்பு ஏன்? Twitter
சினிமா

Amala Shaji : இந்த 2கே கிட் மேல் இவ்வளவு வெறுப்பு ஏன்?

Antony Ajay R

ஒருத்தருடைய சக்சஸ் அங்கீகரிக்கப்பட்டதுக்கு அப்றமா இணைய உலகம் அவங்கள கொண்டாட தான் செய்யும். ஆனா வித்யாசமா அமலா ஷாஜிக்கு ஹேட்டர்ஸ் அதிகரிச்சிருக்காங்க. இன்டர்நெட் முழுவதுமே அவ்வளவு ட்ரால்ஸ், மீம்ஸ்...

இந்த அளவு வெறுப்பு பேச்சு எழ என்ன காரணம்? அமலா ஷாஜி உண்மையாவே Overrated Influencer தானா? அவங்க எப்படி ஹீரோயின்கள விட அதிக ஃபாலோவர்ஸ் வச்சிருக்காங்க? பாக்கலாம்...

யார் இந்த அமலா ஷாஜி?

அமலா ஷாஜி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா ஒரு பிசினஸ் மேன். டிக் டாக் பிரபலமாக இருந்த காலத்தில் அதிக ஃபாலோவர்களை வைத்திருந்தார் அமலா. அதன் பிறகு ரீல்ஸ் மற்றும் யூடியூபில் கலக்கி வருகிறார்.

எப்படி இவ்வளவு ஃபாலோவர்ஸ்

அமலா ஷாஜி வீடியோக்களை வைத்து அவரை சிங்கர், டான்சர், ஆக்டர்னு எந்த வகையறாக்களையும் அடக்கிட முடியாது. ஜெனிலியா, நஸ்ரியா அளவுக்கு எக்ஸ்பிரஷன் கொடுப்பவர் அமலா ஷாஜி.

இப்படி வெறும் எக்ஸ்பிரஷன், ஸ்லோமோசன் வச்சு மட்டுமே கன்டன்ட் பண்றதால தான் அமலா மேல இன்டர்நெட் உலகத்துக்கு பெரிய வெறுப்பு இருக்கு. ஒவ்வொரு ட்ரால் சேனலும் 5,6 வீடியோஸ் அமலாஷாஜி வச்சு பண்ணிருக்காங்க. இத ஒரு வகை வயித்தெரிச்சல்னு சொல்லாம்.

இப்போ 2 மீம்ஸ பாத்துட்டு வரலாம்,

யுவனா இருந்தாலும் சரி, மத்த ஹீரோயினகளா இருந்தாலும் சரி அவங்களுடைய கலைய வெளிப்படுத்துற இடம் சினிமா தான். சினிமாவ ப்ரொமோட் பண்ண தான் இன்ஸ்டா. ஆனா அமலா ஷாஜிக்கு இன்ஸ்டா தான் அவங்க தியேட்டரே...

இன்ஸ்டாகிராம் அல்காரிதம் வெளிய இருந்து ஒருத்தர் தன்னோட கலைய ப்ரொமோட் பண்றத விட அங்கயே கன்டன்ட் பண்றவங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கும். இத பாத்து வயித்தெரிச்சல் பட ஒண்ணுமே இல்ல.

அமலா ஷாஜி க்ரிஞ்ச்?

க்ரிஞ்சு என்ற வார்த்தையவே நாம கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கு. எந்த ஒரு ஆர்ட் அல்லது காமடி நமக்கு எரிச்சல தருதோ அது தான் க்ரிஞ்ச். கோவம் வர்ற மாதிரி காமடி பண்ணாதன்னு சொல்றது. ஒரு விஷயம் நமக்கு பிடிக்கலன்னா அது க்ரிஞ்சு காயின் பண்றது ரொம்ப தப்பான விஷயம்.

எல்லா ஆர்டுக்கும் ஆர்டிஸ்டுக்கும் அவங்களுக்கான ஃபேன்ஸ் இருப்பாங்க. இதே இன்டர்நெட்ல ரொம்ப சுவாரஸ்யமான இன்ஃபர்மேடிவான கன்டன்ட் போடுற மிஸ்டர் ஜி.கே மாதிரி சேனல்களை அமலா ஷாஜி ஃபேன்ஸ் நாலு பேர் அந்த ஆள் ஒரு க்ரிஞ்டானு பேசுவாங்க தான.

ஃபில்டர் யூஸ் பண்றது தப்பா?

சமீபத்துல ஃபில்டர்ஸ் பத்தின ஒரு கேள்விக்கு "அது இன்ஸ்டாகிராம் கொடுக்குற ஒரு ஃபீச்சர். யூஸ் பண்ண தான கொடுத்திருக்காங்கனு" கேப்பாங்க அமலா.

அடுத்ததா இன்னொரு நேர்காணல்ல, "நான் அதிகமா மேக்கப் பண்ணிக்க மாட்டேன். அதுனால மேக்கப் பொருட்களும் யாருக்கும் சஜஸ் பண்ண மாட்டேன். எல்லாருமே இயற்கையா அழகுதானே" அப்டின்னு சொல்றாங்க.

கருப்பா இருக்குறவங்கள வெள்ளையா காட்டுற சில ஃபில்டர்ஸ் வெள்ளையா இருக்குறது தான் அழகுங்கிற பிம்பத்தை ஏற்படுத்தும். இந்த மாதிரி நிற ஏற்றத் தாழ்வு குறித்து எல்லாருமே விழிப்புணர்வுடன் இருக்கணும்".

கடைசியா ஒரு கேள்வி எப்படி அமலா ஷாஜிக்கு எதுவுமே செய்யாம இந்த அளவு வியூஸ், லைக்ஸ் வருதுன்னு...

ஒருத்தர் வீடியோஸை பாக்காம இருக்க நமக்கு உரிமை இருக்கு ஆனா இத பண்ணாதீங்கன்னு சொல்ல யாருக்குமே உரிமை இல்லை.

அமலா ஷாஜி பத்தி நாம கேள்வி கேக்றதா இருந்தா அவங்க ஃபேன்ஸ தான் கேக்கணும். அமலா ஷாஜி ஃபேன்ஸுக்கு நாம என்ன சொல்ல முடியும்...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?