DJ Black Twitter
சினிமா

DJ Black : இன்ஸ்டா ரீல்ஸில் அடிக்கடி வைரல் - யார் இந்த டிஜே பிளாக்

ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் லைவ்வாக கவுண்டர் அடிப்பது, செட்டில் இருப்பவர்களுக்கு பாடலிலே பதில் சொல்வது, டயலாக்கள் மூலம் கலாய்ப்பது என அனைத்தையும் செய்து வேற லெவலில் ரீச்சானார்

Priyadharshini R

சின்னத்திரையில் ஒரு பிரபலமான இசை கலைஞராக வலம் வருபவர் தான் டிஜே பிளாக்.

டிஜே என்றால் வெவ்வேறு இசைகளை கிளப் செய்து ஒரே ஃப்ளோவில் மாற்றி மாற்றி பிளே செய்து தான் நம் நினைவிற்கு வரும். அதையெல்லாம் இல்ல இப்படியும் டிஜே செய்யலாம் என்று, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் லைவ்வாக கவுண்டர் அடிப்பது, செட்டில் இருப்பவர்களுக்கு பாடலிலே பதில் சொல்வது, டயலாக்கள் மூலம் கலாய்ப்பது என அனைத்தையும் செய்து வேற லெவலில் ரீச்சானார்

அதிலும் குறிப்பாக டிஜே பிளாக்கின் டைமிங் சென்ஸ், இந்த ரீச்சுக்கு முக்கிய காரணம் எனலாம். விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு டிஜே போட்டும் இவர் இன்ஸ்டாவில் மிக பிரபலம்.

இவரின் Fun-ஐ ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எனலாம். 90 கிட்ஸ் மட்டுமில்லாமல் 2கே கிட்ஸ்களின் மனதையும் கொள்ளை கொண்ட டிஜே பிளாக் குறித்து இங்கே காணலாம்.

யார் இந்த டிஜே பிளாக்?

டிஜே பிளாக் என்ற பெயர் மக்கள் மத்தியில் பிரபலமானாலும், இவரின் உண்மையான பெயர் சுதன் குமார். வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்த இவர் படித்தது எல்லாம் அரசு பள்ளியில் தான்.

அங்கு தான் வாழ்க்கையே மாறியுள்ளது, இலவசமாக கொடுத்த லேப்டாப் டிஜே கனவிற்கு அடித்தளமாக இருந்துள்ளது.

நண்பர்களிடம்கேம்ஸ், மூவி, சாங்ஸ் என லேப்டாப்பில் ஏற்றிய போது எதார்த்தமாக டிஜே சாஃப்ட்வேர் இருந்ததை சுதன் கவனித்துள்ளார்.

அதன் பின்னர் அது என்ன என்று ஆராயவும் தொடங்கியுள்ளார். இப்படியாக சுதனுக்கு டிஜே மீதான ஆர்வம் வந்துள்ளது. நண்பர்களின் அட்வைஸ் படி சுதனும் அது குறித்து இன்னும் கற்க முயற்சித்து அதில் மூழ்கிவிட்டார்.

முதலில் சுதன், தன் சித்தப்பா மகளின் பிறந்தநாள் விழாவில் தான் கற்ற டிஜேவை வாசிக்க தொடங்கினார். அதன் பின்னர் பக்கத்து வீடு , எதுத்த வீடு, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என சின்ன சின்ன விசேஷ நிகழ்வுகளில் டிஜே வாசித்தார்.

டிஜே மீதான ஆர்வத்தால் அதுவரை படித்து வந்த பொறியியல் படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு, விஸ்காம் படிப்பில் சேர்ந்திருக்கிறார்.

கிளப் டு தனியார் தொலைக்காட்சி

இசை மீதான ஆர்வத்தை தாண்டி, குடும்ப கஷ்டத்திற்காக ஓட ஆரம்பித்தார் சுதன். இவர் விஸ்காம் படிக்கும் போது, டிஜே வேலைக்கு ஆள் தேவைப்பட்டுள்ளது. ஒரு கிளப்பில் வேலைக்கு சேர்ந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளார் சுதன்.

ஃபேஸ் புக் மூலம் சுதனுக்கு டிஜே ஸ்ரீதர் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் பெரிய பெரிய ஷோவுக்கு எல்லாம் டிஜே வாசித்துள்ளார். அதன் பின்னர் அவர் மூலம் சுதனுக்கு விஜய் டிவி காண்டெக்ட் கிடைத்துள்ளது.

அங்கு தனது திறமையை வெளிகாட்டிய சுதனுக்கு ஒரு பெரிய ரீச் இருந்தது. அதற்கு காரணம்

போட்டியாளர்கள் பெயருக்கு ஏத்த மாதிரி பாட்டு போடுவது, வடிவேல் கவுண்டர் பிளே செய்வது என டைமிங் சென்சில் வெளுத்து வாங்கினார் சுதன். அதுக்கு முன்னாடி வரை எடிட்டிங்கில் தான் நிறைய ரியாக்ஷன்ஸ் சேர்த்துள்ளனர்.

லைவ்விலேயே அவரின் கலை திறன் வெளியே வர, மக்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர். இன்ஸ்டா ரீல்ஸ், ஃபேஸ்புக் போஸ்ட் என எங்கு பார்த்தாலும் டிஜே பிளாக் பிரபலமானார்.

ஷோக்கு வரும் ஸ்பெஷல் கெஸ்ட்களும் டிஜேவின் திறமையை பாராட்டி தள்ளினர். ஆஃப் ஸ்கீரினில் வேலை செய்த டிஜேவை அவ்வபோது கேமரா முன் அழைத்து பாராட்டுவார்கள். சில வீடியோ கிளிப்ஸ் படு வைரலாவதுண்டு

இந்த டிஜே பிளாக் எப்படி வந்தது?

டிஜே ஷேடோ, டிஜே சுதன் இப்படி நிறைய பேர் வைக்க யோசித்துள்ளனர்.

இவை அனைத்து நார்மல்லாக இருந்ததால், யூனிக்கா வைக்க வேண்டும் என்று டிஜே பிளாக் என வைத்துள்ளார் சுதன்.

தற்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டுகிறார் டிஜே பிளாக்!


முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?