நடாவ் லபிட் Twitter
சினிமா

நடாவ் லபிட்: Kashmir Filesஐ விளாசிய யூத இயக்குநர்- காட்சிகளில் புரட்சி செய்யும் இவர் யார்?

Antony Ajay R

கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் நாகரீகமற்றது என்றும் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் வலையில் இருக்கிறது என்றும் பேசினார் சர்வதேச திரைப்படவிழா தலைமை நடுவர்  நடாவ் லபிட்.

இது பெரிய அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தியது. சிலர் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் தனது கருத்தை வெளிப்படையாக கூரிய நடாவ் லபிட்டை பாராட்டி வருகின்றனர். அவர் முஸ்லீம் வெறுப்புக்கு எதிராக பேசியதற்காக பலரும் ஆதரவாக பேசினர்.

அதே நேரத்தில் காஷ்மீரி பண்டிட்டுகளின் துயரை அவர் மறைக்கிறார் என்றும் இஸ்லாமிய தீவிரவாதத்தில் வெள்ளையடிக்கப்பார்க்கிறார் என்றும் சிலர் எதிர்த்து வருகின்றனர்.

Kashmir Files

முக்கியமாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், "சர்வதேச திரைப்பட விழாவில் விருது தேர்வுக் குழுவில் பங்கேற்குமாறு இந்தியா உங்களுக்கு விடுத்த அழைப்பையும் உங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை, மரியாதை, விருந்தோம்பல் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்திவிட்டீர்கள்" என நடாவ் லபிட்டை கடிந்துகொண்டார்.

மேலும் உருக்கமாக, "நீங்கள் பேசியதற்கு இந்தியாவிலிருந்து வரும் எதிர்வினைகள், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், ஹோலோகாஸ்ட் (யூத இனப்படுகொலை குறித்த திரைப்படங்கள்) போன்றவற்றின் மீது சந்தேகம் எழுப்பப்படுவதற்கு, யூத இனப்படுகொலையில் இருந்து தப்பியவரின் மகனாக, நான் மனதளவில் மிகவும் காயமடைந்துள்ளேன்" என்றார்.

இந்த எதிர்வினைகளை சந்தித்துவரும் நடாவ் லபிட் யார்? தத்துவ இயக்குநர் என்று அறியப்படும் இவரைக் குறித்த விஷயங்களைக் காணலாம்.

நடாவ் லபிட் :

நடாவ் லபிட்

நடாவ் லபிட் ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்தவர். அவரது பெற்றொர்கள் யூத இனத்தவர்.  1975ம் ஆண்டு பிறந்த லபிட் இஸ்ரேலில் உள்ள பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பயின்றார். பின்னர் கட்டாய இராணுவ சேவையை முடித்த அவர் பாரிஸில் சில காலம் வசித்தார். பின்னர் மீண்டும் இஸ்ரேல் வந்தவர், ஜெருசலேமில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சாம் ஸ்பேஜல் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

லபிட் ஏன் தத்துவ இயக்குநர் என்று அறியப்படுகிறார் என்பதை இப்போது கண்டறிந்திருப்பீர்கள். அவரது திரைப்படங்களிலும் அவரது தத்துவ அறிவு நுட்பமாக எதிரொலிப்பதைக் காணமுடியும்.

ஆழமான பிரச்னைகள் குறித்து பேசினாலும் அதில் டார்க் காமெடி மற்றும் சிட்சுவேஷன் காமெடிகளைக் கொண்டு சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பதில் நடாவ் வல்லவர்.

கலைத்துறையின் உயரிய விருதான செவாலியர் விருதினைப் பெற்றிருக்கிறார். உலகில் பல திரைப்பட விழாக்களில் நடுவராக இருக்கிறார்.

திரைத்துறையில் நடிகராகவும் திரைக்கதையாசிரியராகவும் இயங்கிவந்த நடாவ் லபிட் 2011ம் ஆண்டு தனது முதல் படத்தை இயக்கினார்.  ‘Policeman’ என்ற அந்த படம் அவருக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்தது. Locarno International Film Festival in 2011 -ல் நடுவர்களின் சிறப்பு பரிசினை அந்த படம் வென்றது.

மேலும் ஜெருசலேம் திரைப்பட விழாவில் பல விருதுகளை அந்த படம் வென்றது. எளிதாக சோல்வதானால், முதல் படமே அவரை உலக வெளிச்சத்தில் நிறுத்தியது.

இது தவிர  ‘Kindergarten Teacher’ (2014) மற்றும் ‘Synonyms’ (2019) ஆகியப்படங்களும் சிறந்த வரவேற்பைப் பெற்றன.

இவரது படங்கள் இஸ்ரேலில் இருக்கும் யூத மக்களின் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் தூக்கிப்பிடிக்கின்றன. உலக அளவில் யூதர்களுக்கு எதிராக இருக்கும் மனநிலையை எதிர்த்து கேள்விகள் கேட்கின்றன. அதே நேரத்தில் இஸ்ரேலின் உள்நாட்டில் நிலவும் இராணுவவாதம் அம்மக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் குத்திக்காட்டுகின்றன.

இவரது படங்கள் பேசும் அரசியலை ஆயிரக்கணக்கான கண்கள் பூதக்கண்ணாடியில் பார்த்து வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவானதா? அரசுக்கு எதிரானதா? தேசப்பற்று தென்படுகிறதா? என ஆயிரம் முன்கேள்வுகளுடனே இவரது திரைப்படங்களை அனுகுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?