மீரா 

 

Newssense

சினிமா

தன்னை விட வயதில் மூத்தவருக்கு அம்மாவாக நடிக்கும் பிரபல சீரியல் நடிகை ! 

ரசிகர் ஒருவர் தமிழும் சரஸ்வதி தொடரில் உங்களுக்கு மகனாக நடிக்கும் தீபக் உங்களை விட பெரியவரா என்று கேட்க, அதற்கு ``ஆம்’’ என்று ரிப்ளை செய்துள்ளார்

ஆதினி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `சித்தி-2’  சீரியலில்  வில்லியாக மிரட்டும் மீரா, விஜய் டிவியின் `தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் நேர்மையான தொழிலதிபர் கதாபாத்திரத்தில் அசத்துகிறார். சீரியல்களில் அம்மா, மாமியார் போன்ற கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் மீரா ஒரு பரதநாட்டிய கலைஞர். மீராவின் கணவர் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மீரா, சிறிய வயதிலேயே ‘கேரளா ஸ்கூல் ஃபெஸ்டிவல்’ என்னும் பிரபல நிகழ்ச்சியில்  பங்குபெற்று வெற்றியாளரானவர். அதன் பிறகு  இவருக்கு சினிமா, சீரியல் வாய்ப்புகள் தேடி வந்தன. மீரா நாயகியாக அறிமுகமான மலையாள படம்  ‘மார்கம்’ . இந்த படத்துக்காக கேரள மாநில அரசின் விருதையும்  பெற்றார். படிப்பில் கவனம் செலுத்தியதால், அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. 

கல்யாணம், குழந்தை என சென்னையில் செட்டில் ஆன மீரா, சன் டிவியின் நாயகி சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தார். அதன் பிறகு சில டாப் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.  அம்மா, மாமியார் ரோல்களில் நடித்து வரும் மீராவுக்கு 35 வயது தான் ஆகிறது என்றால் நம்ப முடிகிறதா. அதை அவரே தன் இன்ஸ்டாவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Meera with Srikanth

ஒருமுறை நடிகர் ஸ்ரீகாந்த் உடன் விமான நிலையத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்த மீரா, ‘’ என் கல்லூரி நாட்களின் ஹீரோ’’ என்று குறிப்பிட்டிருந்தார். என்னது ஸ்கூல் டைம் ஹீரோவா? அப்போ உங்களுக்கு என்ன வயசு என்று ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேட்க, அதற்கு அவர் ``35’’ என்று பதிலளித்திருந்தார். மேலும், இவ்வளவு சிறிய வயதில் ஏன் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்கள் என்று மற்றொரு ரசிகர் கேட்க, ``நல்ல கதாபாத்திரமாக இருந்ததால் ஒப்பு கொண்டேன்’’ என்று பதிலளித்திருந்தார்.

மற்றொரு ரசிகர் தமிழும் சரஸ்வதி தொடரில் உங்களுக்கு மகனாக நடிக்கும் தீபக் உங்களை விட பெரியவரா என்று கேட்க, அதற்கு ``ஆம்’’ என்று ரிப்ளை செய்துள்ளார். 

சில  சின்னத்திரை நாயகிகள் சீரியலில் குழந்தை பிறப்பது போன்ற கதை அமைத்தால், அம்மாவாக நடித்தால் என் கேரியர் பாதிக்கபடும் என்று சீரியலை விட்டு விலகி விடும் நிலையில், துணிந்து அம்மா கதாபாத்திரங்களில் நடித்து, நடிப்பின் மீது தனக்கிருக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறார் மீரா.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?