punch Twitter
சினிமா

Oscars 2022 : நகைச்சுவை நடிகரை தாக்கிய வில் ஸ்மித், என்ன நடந்தது ஆஸ்கர் மேடையில்?

இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித்தின் மூத்த மகன் ஜேடன், And That’s How We Do It அதாவது ""நாங்கள் இப்படி தான் செய்வோம்"" என ட்விட்டரில் கூறியுள்ளார்.

Antony Ajay R

சர்வதேச அளவில் சிறந்த படங்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு சினிமா உலகின் மிகப் பெரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஞாயிறு அன்று நடைபெற்றது இதில் பல ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் க்ரிஸ் ராக் என்ற நகைச்சுவை நடிகரைப் பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் வில் ஸ்மித் மேடையில் வைத்து அரைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

க்ரிஸ் ராக் வில் ஸ்மித்தின் மனைவியைக் குறித்து நகைச்சுவையாக பேசிக்கொண்டிருக்கும் போது அது வரை சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித் திடீரென எழுந்து மேடையை நோக்கி நடந்தார். க்ரிஸ் ராக்கின் அருகில் சென்று அவரை ஒரு அடி அரைந்து விட்டு பின்னர் வேகமாக வந்து அமர்கிறார். அவரை அருகிலிருந்த பிரபலங்கள் சாந்தப்படுத்தினர். பின்னர் வில் ஸ்மித் க்ரிஸ் ராக்கை நோக்கி என் மனைவியின் பெயரைச் சொல்லாதே என கோவமாகக் கூறினார். இது அனைத்தின் போதும் நகைச்சுவை நடிகர் சிரித்துக்கொண்டே அதிர்ச்சியுடன் நின்றார்.

Will Smith


வில் ஸ்மித்தின் மனைவி வழுக்கையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நடிகையான அவர் தனக்கு வழுக்கை விழுந்திருப்பதை சில வருடங்களுக்கு முன் பகிரங்கமாக கூறினார். க்ரிஸ் ராக் அவரது தலை முடியைக் கேலி செய்ததால் கோவப்பட்ட ஸ்மித் அவரை தாக்கினார்.

அதன் பின் தான் விருது பெற்ற போது பேசிய வில் ஸ்மித், “எனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அக்கடமி அவார்ட்ஸ் விருதுக்குப் பரிந்துரை பெற்றுள்ள அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்… கலை என்பது வாழ்வினை நகலெடுப்பது. நான் ஒரு பைத்தியக்கார தந்தையாக உணர்கிறேன், அன்பு உங்களைப் பைத்தியக்கார செயல்களில் ஈடுபட வைக்கும்” எனப் பேசினார்.


இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித்தின் மூத்த மகன் ஜேடன், And That’s How We Do It அதாவது ""நாங்கள் இப்படி தான் செய்வோம்"" என ட்விட்டரில் கூறியுள்ளார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?