லக்ஷ்மி சரவணக்குமார் படிக விழா : "எழுத்தாளனாக ஆகவில்லை என்றால் குற்றவாளி ஆகியிருப்பேன்"  Shruthi TV
சினிமா

லக்ஷ்மி சரவணக்குமார் படிக விழா : "எழுத்தாளனாக ஆகவில்லை என்றால் குற்றவாளி ஆகியிருப்பேன்"

Antony Ajay R

எழுத்துலகில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்று பல ஆக்கப்பூர்வமான படைப்புகளை எழுதியுள்ளார் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார்.

இவரது 15 ஆண்டு நிறைவை படிக விழா என முன்னெடுத்து ஏற்பாடுகளை செய்திருந்தது ஆகுதி இலக்கிய அமைப்பு.

மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ அரங்கில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முழுநாள் விழாவாக கொண்டாடப்பட்ட இதில் முக்கிய எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் லக்ஷ்மி சரவணக்குமாரின் படைப்புகள் வெகுவாக பாராட்டப்பட்டன.

மொழிபெயர்பாளர் சிறில் அலெக்ஸ், கவிஞர் மசூக் ரகுமான் ஆகியோர் பங்கு கொண்டு 'கொமோரா', 'ருஹ்' ஆகிய நாவல்கள் குறித்து உரையாற்றினார்கள். கானகன் நாவல் குறித்து சூழலியலாளர் வெண்ணிலா தாயுமானவன் சிறப்புரையாற்றினார். ஜுனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்து அதன் பிறகு நாவலாக பிரசுரமான 'ரெண்டாம் ஆட்டம்' நாவல் குறித்து எழுத்தாளர் செல்வேந்திரன் சிறப்புரையாற்றினார்.

இந்த முழுநாள் அமர்வில் எழுத்தாளர் ஜெயமோகன், சுனில் கிருஷ்ணன், கவிஞர்கள் மசூக் ரகுமான், வேல் கண்ணன், செல்வேந்திரன், ஷாலினி பிரியதர்ஷன் ஆகியோர் பங்குபெற்று சிறப்புரையாற்றினர். 

விழாவின் நிறைவுப் பகுதியாக ஜெயமோகனின் வாழ்த்துரை அமைந்திருந்தது. அந்த உரையில் லக்ஷ்மி சரவணகுமாரின் கொமோரோ நாவல் குறித்து வெகுவாக பாராட்டினார்.

தமிழ் இலக்கிய சூழலில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுவது மிகவும் ஆரோக்கியமான ஒன்று எனப் பேசினார் ஜெயமோகன்.

"நம் முன்னோடிகள் பலருக்கும் 75வது ஆண்டு விழா தான் நடத்தப்பட்டிருக்கிறது. அதுகூட அமையாதவர்கள் பலர். ஒரு இளம் எழுத்தாளரை கௌரவிக்கும் மேடையாக இது அமைந்திருப்பதே நான் வருகை தந்ததற்கான காரணம். " எனப் பேசியவர் தான் முதன் முதலாக எழுத்தாளர் பிரஞ்சனுக்காகவும் ஆ.மாதவனுக்காகவும் விழா எடுத்ததை நினைவு கூர்ந்தார்.

இளம் எழுத்தாளர்கள் குறித்தும், புதிதாக எழுத வருபவர்கள் யாருக்காக எழுத வேண்டும் என்றும் அவர் உரையில் தெளிவு படுத்தினார். லக்ஷ்மி சரவணக்குமாரின் விழாவாக இருந்தாலும் தனது உரையின் மூலம் மற்றொரு விழா நட்சத்திரமாகவே மிளிர்ந்தார் எழுத்தாளர் ஜெயமோகன். அவரது உரை இதோ...

இறுதியாக உரையாற்றிய லக்ஷ்மி சரவணக்குமார் தனது இளமைக்காலம் குறித்தும், இலக்கியம் தன்னை எப்படித் குழப்பமற்ற மனிதனாக மாற்றியது எனவும் பேசினார்.

தான் இந்த விழாவுக்கு தகுதியானவன் தானா? என்ற சுயபரிசோதனைக் குறித்துப் பேசியவர், "நான் என்னை விடுதலை செய்யவே எழுத வந்தேன். நான் கொமோரா எழுதியதனால் தான் என் அப்பாவை மன்னிக்க முடிந்தது. நான் இலக்கியத்துக்குள் வரவில்லை என்றால் என் அப்பாவைத் தொடர்ந்து குற்றப்பின்னணி உடைய ஒருவனாக உருவாகியிருந்திருப்பேன்"

"எனது அத்தனை நட்பும், உறவும், பகையும் எல்லாமே இலக்கியம் சார்ந்தது தான்" என உருக்கமான ஏற்புரையை வழங்கினார்.

விழாவில் இடம் பெற்றிருந்த சூஃபி இசை பார்வையாளர்களைக் கவர்ந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?