Yogi Babu Faces Untouchability In Murugan Temple? Netizens Questioning about this issue  Twitter
சினிமா

யோகி பாபுவுக்கு கைகொடுக்க மறுத்த கோவில் அர்ச்சகர்? வெளியான சர்ச்சை வீடியோ - என்ன நடந்தது?

இந்த சம்பவம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில் யோகி பாபுவின் இந்த வீடியோவை பகிர்ந்து, ”சாமி கும்பிடுறேன் என்பதற்கு எதிரானது அல்ல பகுத்தறிவு, கும்பிடுறேன் சாமி என்பதற்கு எதிரானதே பகுத்தறிவு” என்ற பெரியாரின் வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

Priyadharshini R

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். டையலாக் வருவதற்கு முன்னரே தனது பாடிலேங்குவேஜால் அனைவரையும் சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. ஏராளமான படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

முதலில் காமெடியனாக மட்டும் அசத்தி வந்த யோகி பாபு, மண்டேலா படத்தின் மூலம் அடுத்த லெவலுக்கு உயர்ந்தார். காமெடியன், கதாநாயகன் என பன்முகத் தன்மை கொண்டவரான யோகி பாபு, அடுத்தடுத்த படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் இவர் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஷாருக்கானின் ஜவான் படத்திலும் நடித்துள்ளார்.

யோகி பாபுக்கு ஆன்மிகத்திலும் நம்பிக்கை அதிகம். பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவது தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகும்.

அந்த வகையில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார் யோகி பாபு. அப்போது அவரை கண்டதும் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துகொண்டனர். சாமி தரிசனம் முடித்துக் கொண்டு கழுத்தில் மாலையுடன் கோவில் பிரகாரத்தை வலம் வந்தார்.

அப்போது அங்கிருந்த அர்ச்சகரை பார்த்தவுடன் யோகி பாபு கை கொடுக்க கையை நீட்டிக் கொண்டே சென்றார், ஆனால் அவர் கைக்கொடுக்கவில்லை. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் ’கோவிலில் ஒரு பெரிய நடிகருக்கே தீண்டாமையா?’ என நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் யோகி பாபு கை கொடுக்க மறுத்த அர்ச்சகரிடம் தொடர்ந்து சகஜமாக பேசினார். இந்த வீடியோவை பலர் தீண்டாமை ஒரு பாவச் செயல் என்ற தலைப்பிட்டு வைரலாக்கி வருகிறார்கள். பேக்கிரவுண்டில் உள்ளம் உருகுதய்யா என்ற பாடலின் இசை ஒலிக்கிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவர் தனது பதிவில் யோகிபாபுவின் இந்த வீடியோவை பகிர்ந்து, ”சாமி கும்பிடுறேன் என்பதற்கு எதிரானது அல்ல பகுத்தறிவு, கும்பிடுறேன் சாமி என்பதற்கு எதிரானதே பகுத்தறிவு” என்ற பெரியாரின் வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக யோகி பாபு விளக்கினால்தான் உண்மை தெரியவரும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?