இந்த ஊரில் சாப்பாடு பிடிக்கும் அனைவருக்கும் இர்ஃபானை பிடிக்கும் என்றால் மிகையாகாது. அவ்வளவு உணவுகள் அவ்வளவு ரெசிபிகள், உணவகங்கள்...
தமிழ் யூடியூபில் ஃபுட் ரிவியூ மூலம் வெற்றி பெற்ற ஒருவர் தான் இர்ஃபான். இர்ஃபான் குறித்து பெரிய அறிமுகமெல்லாம் தேவையில்லை. இது வரை பல சர்ச்சைகளைக் கடந்திருக்கிறார். பல முறை யூடியூபைத் தாண்டி செய்திகளின் வெளிச்சம் இவர் மீது விழுந்திருக்கிறது.
எதாவது சாதிக்கணும், காசும் புகழும் சம்பாதிக்கணும் என்கிற சாமானிய ஆசைகளால் தொடங்கிய இவரது ஜாலியான பயணம் குறித்துக் காணலாம்.
ஒரு நல்ல வேலை, வருமானம் என அமைதியாக வாழ்க்கை நகர வேண்டும் என்பது தான் அனைவரது கனவாகவும் இருக்கும். உண்மையில் அந்த லட்சியத்தை அடைந்த அடுத்த நொடியே நம்மை பற்றிக்கொள்வது வெறுமைதான்.
ஒரு சாதாரண வேலையில் இருந்த போதே தனது யூடியூபை தொடங்கினார் இர்ஃபான்.
‘நம் இலக்கை அடைவதற்கு ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் செலவிட்டால் போதும்.’ என்ற பொன்மொழி இர்ஃபானின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
ஒரு வாரத்துக்கு ஒரு வீடியோ என்று செயல்படத் தொடங்கினார்.
என்ன தான் சாப்பாடு பிடித்ததாக இருந்தாலும் அதனை கன்டென்ட்டாக உருவாக்குவது குறித்து இர்ஃபானுக்கு ஐடியா வந்தது தாமதமாக தான்.
அதுவரை சினிமா ரிவியூ போன்ற கன்டென்டுகளை பதிவிட்டு வந்திருக்கிறார். ஆனால் அவற்றால் பெரிய பயன் எதுவும் கிடைக்கவில்லை.
பிறகு ஆங்கிலத்தில் வ்லோக் செய்து பார்த்திருக்கிறார், அதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை.
இர்ஃபான் யூடியூப் தொடங்கிய முதல் வருட முடிவில் அவரது சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 2000 தான்.
ஃபுட் ரிவியூ செய்ய ஆரம்பித்த இர்ஃபான் அது குறித்து முழுவதுமாக தெரிந்துகொள்ள ஒரு ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றியிருக்கிறார்.
இதற்காக தனது வேலையை விட்டு பெரிய அளவில் ரிஸ்க் எடுத்தார்.
இந்த ரிஸ்க் எடுக்கும் நம்பிக்கை தான் இர்ஃபானின் தாரக மந்திரம் என்றும் சொல்லலாம். தனது பார்வையாளர்களை நம்பி துபாயில் ஒன்றரை லட்சம் கொடுத்து ஒட்டகம் வாங்கி வீடியோ செய்ய தனி கட்ஸ் வேண்டும் தானே!
மேனேஜராக பணியாற்றியது, ஒரு உணவு நம் டேபிளுக்கு வருவதற்கு முன்னர் எப்படியெல்லாம் தயாராகிறது என்ற அறிவை இர்ஃபானுக்கு கொடுத்திருக்கிறது. இது தான் அவரை முழுமையான ஃபுட் ரிவியூவராக உருவாக்கியது என்றும் சொல்லலாம்.
ஆரம்பத்தில் இர்ஃபான் யூடியூபர் என்ற போது அவரது வீட்டினருக்கு இவர் என்ன செய்கிறார் என்பதே புரியவில்லையாம். ஆனால் அவரது சகோதரி தான் சப்போர்டாக இருந்தாராம். இன்று வரை வீடியோக்களை அப்லோட் செய்வது அவரது தங்கை தானாம்.
தங்கை மட்டுமல்லாமல் உறவினர்கள் பலரும் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். அவரது தாய் மாமா செய்து வந்த வேலை பிடிக்காததால் இவருடன் கேமரா பணிக்காக இணைந்து விட்டார். அவரது மற்றோரு சகோதரரரும் இணைந்துகொண்டார்.
இர்ஃபானை அம்மாவும் தங்கச்சியும் புரிந்துகொண்ட அளவு அவரது அப்பா புரிந்துகொள்ளவில்லை.
தீவிர மத நம்பிக்கை கொண்ட அப்பா அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அத்துடன் சில தனிப்பட்ட பிரச்னைகளும் ஏற்பட்டதால் அப்பா தனியாக வாழத்தொடங்கிவிட்டாராம்.
ஒரு நேர்காணலில், "அம்மாவும் தங்கச்சியும் என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க. சப்போர்ட் பண்றாங்க. இப்போ அவங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்க. அது போதும் எனக்கு" எனக் கூறியிருக்கிறார் இர்ஃபான்.
இப்போது பல புதிய ஃபுட் ரிவியூ சேனல்கள் வந்துவிட்டன என்றாலும் இர்ஃபானின் கன்டென்ட்கள் தனித்துவமானதாக இருக்கிறது. குறிப்பாக அவரது வெளிநாடு ட்ரிப்கள்.
தாய்லாந்தில் முதலைக் கறி, பாம்பு கறி என வகை வகையான உணவுகளை சாப்பிட்டிருந்தார் இர்ஃபான். அவற்றை சமைப்பது குறித்தும் பதிவிட்டிருந்தார். இவை நல்ல வரவேற்பை பெற்றதுடன் சில சர்ச்சைகளையும் உருவாக்கியது.
மலேசியா, அரபு என அவரது வெளிநாட்டு கன்டென்ட்கள் எல்லாமே ஹிட் அடித்தன.
தாய்லாந்தில் 5 நாட்கள் தங்கியிருந்து 30 வீடியோக்கள் செய்யும் அளவு கடினமாக உழைப்பவர் இர்ஃபான்.
இர்ஃபான் கார் வாங்கியிருக்கிறார், இர்ஃபான் வீடு வாங்கியிருக்கிறார் விலை என்ன தெரியுமா? இர்ஃபானின் வருமானம் தெரியுமா? என புரளி பேசுபவர்கள், இர்ஃபான் தனது வீடியோக்கு ஆகும் செலவு குறித்து துளியும் யோசிக்காதவர் என்பதையும் சொல்ல வேண்டும்... சரி, இர்ஃபான் வருமானம் தெரியுமா?
இந்த சேனல் மூலம் யூடுயூப், ஃபேஸ்புக் வழியாக வருமானம் வருகிறது என ஒரு மேடையில் கூறிய இர்ஃபான் மூன்றாவதாக ஒன்றைக் கூறினார்.
அதுதான் உணவகங்கள் இவருக்கு கொடுக்கும் பணம்.
இந்த வழிகளில் யூடியூப் தான் சிறந்த வருமானம் கொடுக்கிறது என்றும் கூறினார் இர்ஃபான்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரம் பார்வையாளர்களுக்கு 40 முதல் 50 ரூபாய் வருவதாகவும் இர்ஃபான் கூறினார்.
மாதம் குறைந்து 6 லட்சம் ரூபாய் அவரது வருமானமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது யூடியூபில் இருந்து மட்டும் வரும் வருமானம். அதுவும் சீராக வியூஸ் வந்தால் மட்டுமே!
தவிர மற்ற வருமானங்களை கணக்கிட வேண்டும். எனவே இதனை அவரே கூறினால் மட்டும் தான் உண்டு. ஆனால் சம்பள விவரத்தை சொல்லப் போவதில்லை என உறுதியாக இருக்கிறார்.
சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியுடனான நிகழ்ச்சியில் கனிமொழியே கேட்டும் வருமானத்தைக் கூறவில்லை இர்ஃபான்.
இப்போது யூடியூபில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் தினசரி மெனக்கெட்டு வீடியோஸ் போடுகிறார் இர்ஃபான்.
இதுவரை அவர் மீது எழுந்த பல சர்ச்சைகளுக்கு முறையாக வீடியோ மூலம் பதில் கொடுத்திருக்கிறார்.
ரிவியூ செய்யும் உணவகங்களிடம் இருந்தும் பணம் வாங்குவது குறித்தும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சமீபத்தில் எழுந்த ரோஸ்வாட்டர் உணவகம் குறித்த பிரச்னையில் கூட பல செய்தி நிறுவனங்கள் அவர் குறித்து அவமரியாதையுடன் செய்தி வெளியிட்டதைக் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு விளக்கம் தந்தார்.
ஒவ்வொரு முறையும் தனது பார்வையளர்கள் மீதான மரியாதையை வெளிப்படுத்துவார் இர்ஃபான். இதுவே அவர் மீது ரசிகர்களுக்கு அன்பு நாளுக்கு நாள் அதிகரிக்க முக்கிய காரணம் எனலாம்.
ஒரு நேர்காணலில் அழுத்தம் திருத்தமாக இப்படிச் சொல்வார்,
என் ஆடியன்ஸ் எதைப் போட்டாலும் பார்ப்பாங்கங்கிற எண்ணம் எனக்குக் கிடையாதுஇர்ஃபான்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust