yuvan shankar raja twitter
சினிமா

yuvan : Drug டீலரில் இருந்து டாக்டரான யுவன் : இதுவரை பட்டம் வாங்கிய பிரபலங்கள் யார்யார்?

இசைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது சத்யபாமா பல்கலைக்கழகம்

Priyadharshini R

1997 ஆம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் படம் மூலம் தமிழ் திரையிசை உலகில் அடியெடுத்து வைத்தவர் யுவன் சங்கர் ராஜா.

25 வருடங்கள் கடந்து தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக இளைஞர்களின் மனதில் யுவன் இடம் பிடித்துள்ளார்.

யங் மேஸ்ட்ரோ யுவனுக்கு அதிதீவிர ரசிகர்கள் கோடிக்கணக்கில் உண்டு. இந்நிலையில் யுவன் டாக்டர். யுவன் ஆக மாற போகிறார். இதுவரை ட்ரக் டீலர் என்று அறியப்பட்ட யுவனை இனி ரசிகர்கள் டாக்டர் யுவன் என்றே அழைப்பர் என எதிர்பாக்கப்படுகிறது.

Yuvan

சென்னையில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சார்பாக யுவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் இசைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது சத்யபாமா பல்கலைக்கழகம்.

இதுபோன்று தமிழ் சினிமாவில் டாக்டர் பட்டம் வெற்ற நடிகர்கள் யார்யார் என்பது குறித்து பார்க்கலாம்..

Sivaji Ganesan

எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக திகழ்ந்தவர் எம்ஜிஆர். இவரின் நடிப்பு திறமையை போற்றும் வகையில் 1974ம் ஆண்டு அரிசோனாவின் உலகப் பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது

சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசனின் நடிப்பை கொண்டாடும் வகையில் 1986ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவப்படுத்தியது.

Kamal Haasan

கமல்ஹாசன்

பல கெட் அப்களை போட்டு தனது தனிதன்மை நடிப்பினால் உலகநாயகன் என்று மக்களால் போற்றப்படுபவர் கமல்ஹாசன்.

இவர் இரண்டு முறை டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

2005ல் சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பாக ஒன்று, மற்றொன்று 2019ல் கலைத்துறையில் 60 ஆண்டுகாலம் வெற்றியுடன் பயணம் செய்ததால் செஞ்சுரியன் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவப்படுத்தியது.

விஜயகாந்த்

நடிப்பால் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் விஜயகாந்த

இவரின் குணத்தை போற்றும் வகையில் 2011ம் ஆண்டு ப்ளோரிடாவில் உள்ள சர்வதேச சர்ச் மேனேஜ்மென்ட் நிறுவனம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவப்படுத்தியது.

Chiyaan Vikram

விக்ரம்

பல சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர் விக்ரம். இவரின் திறமையை வகையில் 2011ம் ஆண்டு இத்தாலியில் யூனிவர்சிட்டா போபோலே டெக்ஷீஸ் ஸ்டுடிம் மிலானோவான் என்ற பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

Vijay

விஜய்

தனது எதார்த்த நடிப்பினாலும், குட்டி ஸ்டோரி சொல்வதனாலும் இளசு பெருசு வரை கவரப்பட்டவர் நடிகர் விஜய்.

இவரை கௌரவிக்கும் விதமாக 2007ம் ஆண்டு எம்ஜிஆர் பல்கலைக்கழகம் தளபதி விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பு செய்தது.

STR

சிலம்பரசன்

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாது பாடலாசிரியராகவும், பாடகர் என பன்முக தன்மை கொண்டவர் சிம்பு.

இவரை கௌரவிக்கும் விதமாக 2022 ஜனவரி 11ம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவப்படுத்தியது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?