ஸ்வீட்ஸ்  canva
Good News

இது ஆரோக்கிய தீபாவளி: பலகாரங்களை ஹெல்தியாக செய்ய சில வழிமுறைகள்!

வெள்ளை நிற உணவுகள் உடலுக்கு கெடுதி என தொடர்ந்து மருத்துவர்களும் நிபுணர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.இந்த தீபாவளிக்கு, மனம் நிறைய, உடல் நலம் கெடாமல், இனிப்பு வகைகளை சற்று ஆரோக்கியமான பதார்த்தங்களை பயன்படுத்தி சமைத்துப் பார்க்கலாம்.

Keerthanaa R

தீபாவளி பண்டிகை என்றால் பட்டாசுகளுக்கு ஈடாக நாம் எதிர்பார்ப்பது இனிப்புகள். அம்மாக்கள், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னிருந்தே ஒவ்வொரு இனிப்பு வகையாக செய்ய தொடங்கிவிடுவார்.

அருகில் இருந்து சுவை சரிபார்க்கும் சாக்கில் நாம் நிறைய அதை சாப்பிட்டிருப்போம். அந்த நினைவுகள் மனதில் தித்திப்பை கொடுக்கும்.

ஆனால், கொஞ்சம் வளர்ந்த பின்னர் நமது உடல் நலத்தின் மீதும் கவனம் கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தமும் நமக்கு இருக்கிறது.

நம்மில் சிலருக்கு வயதாக ஆக இனிப்பு வகைகளை சாப்பிடவேண்டாம் என்ற கண்டிஷன்களை கூட மருத்துவர் போட்டிருப்பார். காரணம், இனிப்பு வகைகளை செய்ய நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் இரு பொருட்கள் சர்க்கரை மற்றும் மைதா.

இரு ஆபத்தான பொருட்கள்:

இவை இரண்டுமே உடல் பருமனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அஜீரணம், நீரிழிவு போன்ற பிரச்னைகளுக்கும் வழி வகுக்கும். இனிப்புகள் கார்போஹைட்ரேட்டுகளால் ஆனவை. மேலும் அவை அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. அவை உடலில் அதிகரித்த வீக்கத்திற்கு பங்களிக்கின்றன, இது நாள்பட்ட நோய்களின் தொடக்கத்திற்கு வழிவகுக்கிறது.

வெள்ளை நிற உணவுகள் உடலுக்கு கெடுதி என தொடர்ந்து மருத்துவர்களும் நிபுணர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த தீபாவளிக்கு, மனம் நிறைய, உடல் நலம் கெடாமல், இனிப்பு வகைகளை சற்று ஆரோக்கியமான பதார்த்தங்களை பயன்படுத்தி சமைத்துப் பார்க்கலாம்.

பால் வகை இனிப்புகள்:

பாலில் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. முழு கொழுப்புள்ள பால், அல்லது கிரீம் பயன்படுத்தி இனிப்பு வகைகள் தயார் செய்தாலும், இவற்றில் கிளைசெமிக் குறியீடு எண் குறைவாக இருக்கும். எனவே, உணவியல் வல்லுநர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் எப்போதும் சேனா (சீஸ்) அடிப்படையிலான இனிப்புகளைத் தயாரிக்க ஆலோசனை வழங்குகிறார்கள்.

நார்சத்து நிறைந்த இனிப்புகள்:

வழக்கமாக பயன்படுத்தப்படும் மைதா மாவு அல்லாமல், கடலை மாவு, சீறு தானியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மாவு, அல்லது கோதுமை மாவை பயன்படுத்தி இனிப்பு வகைகளை தயாரிக்கலாம். இதன் சுவை நமக்கு சற்று மாறுபட்டு இருந்தாலும், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சாப்பிட பழகிக் கொள்ளலாம்.

திணை, ராகி போன்ற மாவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இனிப்புவகைகள் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக் ஆக அமையும்.

இயற்கையாக இனிப்பு தன்மைக் கொண்ட பதார்த்தங்களை பயன்படுத்தியும் இனிப்புகள் செய்யலாம். பேரிச்சம்பழம் இதற்கு ஒரு நல்ல மாற்றாக அமையும்.

எளிதில் ஜீரணமாகக் கூடிய இனிப்புகள்

மைதாவும் சர்க்கரையும், நமது உடலில் ஜீரண சக்தியை சற்று மட்டுப்படுத்தும், அல்லது தாமதிக்கும். ஜீரணிக்க எளிதான பொருட்களுடன் தயாரிக்கப்படும் இனிப்புகளை எப்போதும் சாப்பிடுங்கள். கூடுதல் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கான தயாரிப்பில் பனீர் அல்லது பாலாடைக்கட்டி மற்றும் பருப்பு வகைகளை சேர்க்கவும்.

இந்த இனிப்புவகைகளை தயாரிக்க வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி, நாட்டு சர்க்கரை (கரும்புசர்க்கரை) அல்லது பிரவுன் சுகர் பயன்படுத்தலாம். நாம் அன்றாடம் உட்கொள்ளும் காபி, டீ, பழச் சாறுகள், தேகாய் பால் போன்றவற்றிற்கும் இவற்றை பயன்படுத்தலாம்.

உங்கள் உணவுப் பழக்கங்களில் எந்த வகையான மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்திகொள்ள விரும்பினாலும், மருத்துவர், நிபுணர்களின் ஆலோசனையோடு மேற்கொள்ளுங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?