Ms dhoni  Twitter
Good News

கோழிப்பண்ணை தொடங்கும் தோனி - இதுதான் காரணமா?

இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வத்தைத் தொடர்ந்து தற்போது இந்த அரியவகை கோழிப் பண்ணை அமைத்து கடக்நாத் வகையான கோழிகளை உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவே தோனி, இவ்வகை கோழியை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Priyadharshini R

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்போது ஐபிஎல் தொடர் போட்டிகளில் மட்டும் பங்கேற்று விளையாடி வருகிறார். அதனைத் தவிர்த்து ராஞ்சியில் உள்ள 43 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம், வாத்து பண்ணைகள் அமைத்து அதனை பராமரிக்கும் பணிகளில் தனது நேரத்தைச் செலவிட்டு வருகிறார் தோனி.

கோழிப்பண்ணை தொடங்கும் தோனி

விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட தோனி தற்போது கருங்கோழி பண்ணை அமைக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக மத்திய பிரதேசத்தின் ஜபாவ் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரிடமிருந்து 2,000 கருங்கோழி குஞ்சுகளை வாங்க உள்ளார்.

இதுகுறித்து விவசாயி கூறுகையில், மகேந்திர சிங் தோனி போன்ற பிரபலமான ஒரு நபர் கடக்நாத் கோழிகளின் மீது ஆர்வம் காட்டி அதனை வாங்குவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று என்றும் இந்த வகையான கோழிக்குஞ்சுகளை ஆன்லைன் மூலமாக மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இது பெரிய அளவில் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Kadaknath

மருத்துவ குணம் கொண்ட கருங்கோழி

அரிய வகையைச் சேர்ந்த கருங்கோழியில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. குறைவான கொழுப்பு, அதிக புரதச்சத்து கொண்ட கடக்நாத் கோழி, மற்ற கோழிகளுடன் ஒப்பிடுகையில் கூடுதல் ருசியாக இருக்குமாம்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள மலை வாழ் மக்கள் இவ்வகை கோழிகளை அதிகம் வளர்க்கின்றனர். ஒரு கிலோ கருங்கோழி கறி 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கருங்கோழி முட்டை ரூ. 20 முதல் ரூ. 40 ரூபாயாக உள்ளது. இந்தியா முழுவதும் கருங்கோழியின் தேவை அதிகமாக உள்ளது.

கருங்கோழி வளர்க்கக் காரணம்

இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வத்தைத் தொடர்ந்து தற்போது இந்த அரியவகை கோழிப் பண்ணை அமைத்து கடக்நாத் வகையான கோழிகளை உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவே தோனி, இவ்வகை கோழியை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?