டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்று கொண்டிருந்த போது சாலையில் கார் விபத்தில் சிக்கியிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் உயிரைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநருக்கு மத்திய அரசின் நற்கருணை வீரன் விருது கொடுக்கப்படவுள்ளது.
உத்தராகாண்ட் மாநில டிஜிபி அசோக் குமார் ஐபிஎஸ் இந்த விருதை அறிவித்துள்ளதாக அந்த மாநில காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
Rishab Pant: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்து - என்ன நடந்தது?
சுஹில் மன் என்ற அந்த ஓட்டுநர் ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியேற உதவியதுடன், அவரை போர்வையால் சுற்றி ஆம்புலன்ஸ் வரவழைத்துள்ளார்.
முன்னின்று உதவிய ஓட்டுநருக்கு மட்டுமின்றி உடனடியாக தேவையான உதவிகளைச் செய்த உள்ளூர் மக்களும் அங்கீகரிக்கப்படுவர் என அறிவித்துள்ளனர்.
இது குறித்து உத்தராகண்ட் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், "விபத்து நடந்த அடுத்த ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டவருக்கு மிகவும் முக்கியமானது. அந்த நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அவசியம். எனவே உடனடி நடவடிக்கைகளை எடுக்க மக்களை ஊக்குவிக்க இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.
அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்று தெரியாமல் சக மனிதனாக உதவிய ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
ரிஷப் பண்டின் மூளை மற்றும் முதுகுத் தண்டு எந்த பிரச்னையும் இல்லாமல் இருப்பதாக எம்ஆர்ஐ ஸ்கேனில் தெரிய வந்துள்ளது.
கால் மற்றும் கணுக்கால் பகுதிகளில் இன்று ஸ்கேன் செய்ய உள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust