toothbrush Pixels
ஹெல்த்

டூத் பிரஷ் முதல் ஹேர் பிரஷ் வரை - தினசரி பயன்படுத்தும் பொருட்களை எப்போது மாற்ற வேண்டும்?

உங்கள் வீட்டைப் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்விடமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளைச் செய்திருப்பீர்கள், அந்த லிஸ்டில் வீட்டில் தினசரி பயன்படுத்தும் சிறு சிறு பொருட்களின் எக்ஸ்பைரி டேட் குறித்து தெரிந்துகொள்வோம்.

Priyadharshini R

நம் வீட்டில் தினசரி பயன்படுத்தும் சிறு சிறு பொருட்களான டூத் பிரஸ், டவல் , செருப்பு இதற்கெல்லாம் எக்ஸ்பைரி டேட் இருக்குமா என்பதை என்றாவது நாம் நினைத்துப் பார்த்திருப்போமா? கண்டிப்பாக மாட்டோம். ஏனெனில் அவை கெட்டுப்போகக் கூடிய பொருட்களாக இருக்காது, இது போன்ற பொருட்களை மக்கள், உடைந்து அல்லது தேய்ந்து போகும் வரை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் அவ்வாறு பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு கேடு என்று கூறப்படுகிறது. உங்கள் வீட்டைப் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்விடமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளைச் செய்திருப்பீர்கள், அந்த லிஸ்டில் வீட்டில் தினசரி பயன்படுத்தும் சிறு சிறு பொருட்களின் எக்ஸ்பைரி டேட் குறித்து தெரிந்துகொள்வோம்.

pillow

தலையணை ( pillow)

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தலையணை. சிறுவயதிலிருந்தோ அல்லது நீண்ட காலமாக ஒரே தலையணையைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அவை ஆரோக்கியமற்றவை.

காரணம் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படும் தலையணையில் இறந்த சரும செல்கள் இருக்கக்கூடும் இதனால் ஒவ்வாமை ஏற்படும் சூழல் உருவாகலாம்.

மேலும் வடிவ இழப்பு காரணமாக நீங்கள் கழுத்து வலியால் பாதிக்கப்படலாம். எனவே ஒரு தலையணையைக் குறைந்தபட்சம் 2-3 வருடங்கள் வரை மட்டுமே பயன்படுத்தலாம்.

Slippers

செருப்புகள் ( Slippers)

நம்மில் பலர் செருப்பு தேய்ந்து போகும் வரை பயன்படுத்துவோம், அதன் பின்னர் புதிதாக செருப்பு வாங்கினாலும், பழைய செருப்பைத் தூக்கிப் போட மனசு இல்லை எனக் குளியலறையில் பயன்படுத்தத் தொடங்கு விடுவோம்.

ஆனால் அவ்வாறு பயன்படுத்துவதனால் பாதத்தில் பூஞ்சை தொற்று ஏற்படக் கூடும். எனவே செருப்பை குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

அதன் பிறகு புது செருப்பை வாங்கிடுங்க பாஸ்!

Sponge

குளியல் ஸ்பாஞ்ச் ( Sponge )

குளிக்கும் போது சிலர் ஸ்பாஞ்ச் பயன்படுத்தி சோப்பு போடுவார்கள். அதனை நீண்டகாலம் பயன்படுத்துவதால் உடலில் உள்ள கிருமிகள் அந்த ஸ்பாஞ்சில் தங்கி விடுகிறது. இதனால் சரும பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அவற்றை சூடான நீரில் சுத்தம் செய்ய வேண்டும். எனவே குளியல் ஸ்பாஞ்சை குறைந்தபட்சம் 2 வாரங்கள் முதல் 6 மாதங்களை வரை பயன்படுத்தலாம்.

Towel

டவல் ( Towel )

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் டவலை புதியதாக மாற்ற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

குளியலுக்குப் பின் நாம் செய்யும் முக்கியமான விஷயம் உடலை டவலால் துடைப்பது. இதனால் உடலில் உள்ள கிருமிகள் அந்த டவலில் படியும், அதனை அடிக்கடி துவைக்கவில்லை என்றால், அது பல நோய்களுக்குக் காரணமாகிறது.

அதனால் எவ்வளவு அழகாக டவலாக இருந்தாலும் அதை மூன்று வருடங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

Toothbrush

டூத் பிரஷ் ( Toothbrush )

நம் தினசரி காலையில் தேடும் பொருளான டூத் பிரஷை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.

சிலர், நாள் ஒன்றிருக்கு 2 முறை பல் துலக்குவார்கள், ஆனால் அந்த டூத் பிரஷ் தேய்ந்துபோகும் வரை பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை புதிய டூத் பிரஷுக்கு மாற வேண்டும்.

ஹேர் பிரஷ் (Hairbrush)

உங்கள் ஆரோக்கியமான கூந்தலைப் பராமரிக்கப் பயன்படும் ஹேர் பிரஷை வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.

அவ்வாறு சுத்தம் செய்யாவிட்டால் தலைமுடி சேதமடையும் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. 1 வருடத்திற்கு மேல் ஹேர் பிரஷைப் பயன்படுத்தாதீர்கள்.

Perfumes

வாசனை திரவியம் ( Perfumes)

நம்மில் பலர் வாசனை திரவியம் பயன்படுத்துவோம்!

பாட்டிலில் திரவம் உள்ள வரை அதனைப் பயன்படுத்துவார்கள், அதன் எக்ஸ்பைரி டேட் முடியவில்லை என்றாலும் அதன் நிறம் அல்லது வாசனை மாறினால் அதைக் குப்பையில் வீசி விடுங்கள்.

வாசனை திரவியம் நீண்ட காலம் நீடிக்க விரும்பினால், அதைக் குளிர்ச்சியான, இருண்ட இடத்தில் வைக்கவும். அப்படி மூன்று ஆண்டுகள் வரை வாசனை திரவியத்தை வைத்திருக்கலாம்

pacifiers

சூப்பி (pacifiers)

குழந்தைகளின் அழுகையை நிறுத்த, அவர்களை சமாதானப்படுத்தப் பயன்படும் அந்த ரப்பர் சூப்பியை இரண்டு முதல் ஐந்து வாரங்களுக்குள் மாற்ற வேண்டும்

குழந்தை கார் இருக்கைகள் - (Child car seats)

குழந்தையை வசதியாக அமர வைக்கப் பயன்படும் கார் இருக்கைகளை அதிகபட்சம் 6 முதல் 10 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் வைத்திருக்கலாம்.

சீட் பெல்ட் சரியாக வேலை செய்தாலும், குழந்தைகளின் பாதுகாப்பு கருதிக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதைத் தூக்கி எறிய வேண்டும்

Running shoes

காலணி (Running shoes)

காலில் அணியும் shoe எவ்வளவு விலையுர்ந்ததாக இருந்தாலும், அவை எப்போதும் நிலைக்காது. ஒரு கட்டத்தில், நீங்கள் அதை மாற்றியாக வேண்டும்.

அவ்வாறு மாற்றவில்லை என்றால், மூட்டுகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே shoe- வை 1 வருடத்திற்கு மேல் பயன்படுத்தாதீர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?