Milk Canva
ஹெல்த்

பால் தினமும் குடிப்பது நல்லதா? கெட்டதா?

மினு ப்ரீத்தி

பாலும் முட்டையும் ஆரோக்கியமானது எனச் சொல்லி குழந்தைகள் முதல் அனைவருக்கும் கொடுப்பார்கள். ஆனால், பெரும்பாலானோருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். பால் மனிதனுக்கான உணவல்ல என்பது உண்மைதான். சிலருக்குப் பால், பால் பொருட்கள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதற்குப் பெயர் ‘லாக்டோஸ் அலர்ஜி’ என்பார்கள்…

60-65% இந்தியர்களுக்கு லாக்டோஸ் அலர்ஜி இருக்கிறது. காரணம் ஒன்றுதான். பாலும் பால் சார்ந்த பொருட்களையும் சாப்பிடுவதால் மட்டுமே.

பால் செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். பால், ஒரு வெள்ளை விஷம் என்றக் கருத்தும் உள்ளது. பாலும் பால் தொடர்பான பொருட்களால் வருகின்ற அலர்ஜி பாதிப்புகளைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

Milk

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் பற்றித் தெரியுமா…?

பாலில் உள்ள லாக்டோஸ் எனும் பொருளை, வயிற்றில் உள்ள உறுப்புகளால் செரிக்க முடியாமல் போகும் நிலை. இதுதான் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் அல்லது அலர்ஜி என்பார்கள்.

லாக்டோஸ் என்பது சர்க்கரை (மில்க் சுகர்), இது பாலில் உள்ள சர்க்கரை… இதைச் செரிக்கும் ஆற்றல் மனிதர்களுக்கு இல்லவே இல்லை எனலாம். எங்கோ சிலருக்குக் குறைவான சக்தி இருக்கலாம். அதுவும் அவர்கள் மிக ஆரோக்கியமானவர்களாக இருக்கலாம். அவர்களின் செரிமான மண்டலம் தீயாக வேலை செய்யலாம். கல்லையே கரைக்கும் திறன் என்பார்களே, அப்படியான மனிதர்கள்… ஆனால், இப்படியான ஆரோக்கியமானவர்கள் தற்போதைய சூழலில் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.

உடலுக்குக் கிடைக்க வேண்டிய கால்சியமும் வைட்டமின் டி சத்துகளையும் உடல் கிரகிக்கவிடாமல் இந்த லாக்டோஸ் எனும் பொருள் தடுக்கும். அதாவது பாலும் பால் பொருட்களும் தடுக்கும்.

கொஞ்சம்கூடச் செரிக்க முடியாத பால் எனும் உணவை, நாம் காலை, மாலை, இரவு எனத் தொடர்ந்து தினமும் எடுத்து வருகிறோம். அதனால்தான், வயிறு தொடர்பான தொல்லைகள் அதிகமாக இருக்கின்றன.

செரிமான மண்டலம்

என்னென்ன பாதிப்புகள்?

வயிற்றுப்போக்கு

வாயு சேருவது

வாயு சேர்ந்து வயிறு வலிப்பது

வயிறு உப்புசம்

வாந்தி

வயிற்றுப் பிடிப்பு

அடிக்கடி ஆசன வாயில் துர்நாற்ற காற்று வெளியேறும்

சத்தமாக வாயு பிரிதல்

சோர்வு

வயிற்றில் காற்று ஓடும் சத்தம் வருதல்

அடிக்கடி மலம் கழித்தல்

விட்டு விட்டு மலம் கழித்தல்

போன்றவை ஏற்படலாம். அவரவரின் உடல்நிலை பொறுத்து அறிகுறிகள் மாறுபடலாம். கூடுதலாகலாம்; குறையவும் செய்யலாம். இந்த லாக்டோஸ் இன்டாலரன்ஸால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் இது தரும் பாதிப்புகள்… உடலின் ஆரோக்கியத்தையே சீர்கெடுக்கும்.

பால் மற்றும் பால் பொருட்கள் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு மேல் இந்தத் தொல்லைகள் வரக்கூடும். சில நாட்கள் வரை இந்தப் பிரச்சனைகள் தொடரும். செரிமான மண்டலம் முழுமையாகப் பாதிக்கும்.

பாலும் பால் சார்ந்த பொருட்களை உண்பது தவிர்த்தால், மருந்து மாத்திரை சிகிச்சைகளின்றி உடல் தானாகச் சரியாகும்.

Milk

பால் சத்தானதா?

பாலில் உள்ள சத்துகள் மனிதனுக்கு அவசியம் என்கிறார்கள் சிலர். பாலில் கிடைக்கின்ற சத்துகளைவிட அதனால் ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம் என இயற்கை மருத்துவ முறைகள் சொல்கின்றன. மனிதன் ஆரோக்கியமாக வாழ, செரிமான மண்டலம் சீராக வேலை செய்வது முக்கியம். அதுதான் அஸ்திவாரம். ஆனால், இந்தச் செரிமான மண்டலத்தையே அழிக்கும் பொருட்கள் பாலில் உள்ளன. பசும் பால், நாட்டு மாடு பால், ஆர்கானிக் பால், ஏ1, ஏ2, எருமைப் பால் என அனைத்து பால் பொருட்களில் உள்ள லாக்டோஸ் மனிதர்களால் செரிப்பது மிகக் கடினம். பாலை செரிக்க உடல் பாடாய்படும் என்பது உண்மை.

விதைகள்

கால்சியமும் பாலும்

ஏதோ பாலில் மட்டும்தான் கால்சியம் உள்ளது என எல்லோரும் கால்சியத்துகாகப் பாலை குடிக்கிறோம் என்கிறார்கள். பாலைவிடக் கேழ்வரகில் 100 மடங்கு கால்சியம் அதிகம். ஆரஞ்சு பழத்தில் கால்சியம் அதிகம். கீரைகளில் உங்களுக்குக் கால்சியம் நன்றாகவே கிடைக்கும்.

பாதாம்

விதைகள்

அனைத்து நட்ஸ்

கீரைகள்

கம்பு, திணை

கேழ்வரகு

மீன்

முட்டை

ஆடு இறைச்சி ஆகியவை பாலைவிட மிகச் சத்துள்ள உணவு வகைகள்.

High-lactose foods உணவுகள் என்னென்ன?

பாலால் தயாரிக்கப்பட்ட உணவுகள் அனைத்துமே அதிக லாக்டோஸ் உள்ள உணவுகள்.

பால்

காபி, டீ

கிரீம், கேக்கில் உள்ள கிரீம்

கண்டன்ஸ்டு மில்க்

ஐஸ்கிரீம்

சீஸ்

சீஸ் ஸ்பெரெட்

பன்னீர்

சோர் கிரீம்

lactose இல்லாத உணவுகள்

சோயா பால்

பாதாம் பால்

நிலக்கடலை பால்

ஓட்ஸ் பால்

கேழ்வரகு பால்

தேங்காய் பால்

இந்த லாக்டோஸ் இல்லாத பால் வகைகளில் கால்சியம், புரோட்டீன், விட்டமின் ஏ, பி, கே, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற நல்ல சத்துக்கள் நிறைந்துள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?