சம்மர் சீசனில் அவசியம் சாப்பிட வேண்டிய 9 பழங்கள்!  NewsSense
ஹெல்த்

சம்மர் சீசனில் அவசியம் சாப்பிட வேண்டிய 9 பழங்கள்! - ஓர் எளிய விளக்கம்

மினு ப்ரீத்தி

இயற்கை ஒருபோதும் தவறு செய்யாது. அதற்காகதான் அந்தந்த சீசன்களில் சில உணவுகள் விளைகின்றன. தமிழ்நாடு போன்ற வெப்ப மாநிலத்தில் குளிர்ச்சி தரக்கூடிய, மிதமான சூடு தந்து இனிப்பும் மற்ற சத்துக்களும் கொடுக்கக் கூடிய பழங்கள் விளைகின்றன. இது இயற்கையின் தத்துவம். சீசனில் விளைகின்ற கனிகளைச் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் அந்த உணவுகளை ஏற்றுக்கொண்டு சத்துகளைக் கிரகிக்கவும் செய்யும்.

பொதுவாக, பலரும் ஏன் பழங்களைச் சாப்பிட மாட்டெங்குகிறீங்க எனக் கேட்டால், ஒருமாதிரி மோஷன் அடிக்கடி வருகிறது அல்லது பேதி எனக் காரணம் சொல்கிறார்கள். வயிற்றில், பெருங்குடலில், மலக்குடலில் பல நாட்கள் தேங்கி கிடந்த குப்பையைப் பழங்கள் சாப்பிட்டதும் அந்தக் குப்பை கரைந்து வெளியேறுவது நல்ல விஷயமா? கெட்ட விஷயமா? பலாப்பழம் சாப்பிட்டால் பேதியாகிறது. மாம்பழம் சாப்பிட்டால் பேதி, வாந்தி வருகிறது எனச் சொல்கிறார்கள். கழிவு உள்ள உடலில், கழிவை வெளியேற்றுகிறது. பின்னர், சத்துக்களைச் சேர்க்கும். ஆம் உண்மைதானே… பேதியானால் பெருங்குடலின் கழிவும் மலக்குடலின் கழிவும் வெளியேறுகிறது என அர்த்தம். வாந்தி வந்தால், வயிற்றுக் கழிவு வெளியேறுகிறது. பித்தம் வெளியேறுகிறது என அர்த்தம். இது நல்ல விஷயம்தானே… உடலின் கெடுதியை, கழிவை இந்தப் பழங்கள் அகற்றுகிறது. அதன் வேலையை அவை செய்கிறது. சரிதானே… இதில் என்ன வாந்தி, பேதி எனப் பலர் தயங்குகிறார்கள். நீங்கள் செய்த தவறுகளைத் திருத்தவே பழங்களைப் படைத்திருக்கிறது, இயற்கை. அதை அதன் வேலையைச் செய்யவிடுங்கள்.

சாப்பிட வேண்டிய 9 பழங்கள்


தர்பூசணி

தர்பூசணியைப் பார்த்துவிட்டாலே தெரியும். சம்மர் தொடங்கிவிட்டது. வெயில் வாட்ட போகிறது என்று. தண்ணீர் பழம் என்பார்கள். முழுக்க முழுக்க நீர்தான், 92% நீர்ச்சத்துகள். இந்த நீர்த்தான் இந்த சீசனில் நம் உடலுக்குத் தேவையானவை. சிக்கன் பிரியாணியோ தயிர் சோறோ சாம்பார் சாதமோ இல்லை. தர்பூசணியைக் காலை உணவாகவே சாப்பிடலாம். அதாவது காலை டிபனே தர்பூசணி பழமாகச் சாப்பிடலாம். அன்றைய நாளையே ஆரோக்கியத்துடன் உடலை வைத்துக்கொள்ளும். பழமாகவோ ஜூஸாகவோ சாப்பிடலாம். வயிறு நிறையச் சாப்பிடலாம்.

கிர்ணி

பெரும்பாலும் இந்தப் பழம் சீசனில் மட்டுமே அதிகமாகக் கிடைக்கும். முழுக்க முழுக்க ஜூஸ் பழம் என்பார்கள். வெல்லம், கருப்பட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து குடிக்க அன்றைய நாளையே புத்துணர்வாக்கும்.

பலாப்பழம்

கேரளத்தில் மிகப் பிரபலம். அதுபோல நம் தமிழ்நாட்டிலும்தான். பலாப்பழத்தை சூடு எனத் தவிர்ப்பார்கள் சிலர். அப்படியில்லை, பலாப்பழம் இந்த சீசனில்தான் அதிக விளைகிறது. இந்த சீசனில் நமக்குப் பலாப்பழத்தின் சுவையும் சத்தும் அவசியம் தேவை. பலாப்பழத்தை யாரும் ஒருகிலோ அளவில் சாப்பிட போவதில்லை, குறைந்தது 5-6 சுளைகளைத்தான் சாப்பிடுவார்கள். இவற்றைச் சாப்பிடுவதால் சூடு ஒன்றும் இல்லை. பலாப்பழத்தை ஒவ்வொரு சீசனிலும் சுவைப்பவரின் உடலின் உள்ள இதயம் சீராகத் துடிக்கிறது எனச் சில ஆய்வுகளில் கூறுகிறார்கள். இதயத்துக்கு நல்லது செய்கின்ற பழம் இது. சூடும் இல்லை. குளிர்ச்சியும் இல்லை. உடலுக்குத் தேவையான அளவில்தான் உள்ளது. தவிர்க்காதீர்கள்…

மாம்பழம்

ஒரு கொட்டையுள்ள பழ வகைகளில் பெரிய பழம், மாம்பழம்தான். இதன் சுவைக்கு யார்தான் அடிமை இல்லை. இதையும் பலர் சூடு என்று தவிர்க்கிறார்கள். அப்படி அல்ல. சூடு கிடையாது. குளிர்ச்சியும் கிடையாது. மிதமான அளவு… இந்தப் பழத்தில் உள்ள சத்துக்கள் இந்த வெப்ப காலத்தில் நமக்குத் தேவையாக இருக்கிறது. அதனால்தான், இயற்கை இந்த சீசனில் மாம்பழத்தை விளைவிக்கிறது. கண் பார்வையை மீட்டு தரும் மிக முக்கியப் பழம் இது. கண்ணாடி அணிபவர்கள் தொடர்ந்து சாப்பிட பார்வை குறைபாடு நீங்கும்.

நுங்கு

நிறையப் பேர் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இதன் சத்துகளும் சுவையும் அபாரம். அவசியம் சாப்பிட வேண்டிய பழம். ஜூஸாகவோ பழமாகவோ சாப்பிடலாம். இளநீருடன் கலந்து ஜூஸாக குடிக்க, பெஸ்ட் உணவு வேறு எதுவும் இல்லை எனலாம். காலை, மதியம், இரவு என எப்போதும் சாப்பிடலாம்.

சாத்துக்குடி

சாத்துக்குடி ஜூஸாக குடிக்கத்தான் ஏற்றது. குடித்த சில நிமிடங்களிலேயே அப்படி ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். தேன் கலந்து குடிக்கச் சத்தும் சுவையும் அள்ளும்.

ஆரஞ்சு

பாசிடிவ் பழ வகையில் முதல் இடம் இது. பழமாகச் சாப்பிட ஏற்றது. ஜூஸ் போட்டும் குடிக்கலாம் தவறு இல்லை. ஆரஞ்சு சாறு மிக மிக நல்லது. வயிற்றைச் சுத்தப்படுத்தும். கழிவுகளை வெளியேற்றும்.

கொடுக்காப்புளி

இதுவும் ஒரு பழ வகையைச் சேர்ந்தது. பலருக்கும் இந்தப் பழத்தை பற்றித் தெரியாது. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளைக் கொண்ட பழம் இது. பித்தப்பை கற்களை நீக்கும் சத்து இதில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்புகளை வலுவாக்கும். பல் வலியைப் போக்கும். செரிமானக் கோளாறுகள், அடிக்கடி வரும் ஏப்பம், வயிறு தொந்தரவுகளை நீக்கும். கெட்ட கொழுப்பை நீக்கும். கடையில் பார்த்தால், அவசியம் வாங்கிச் சாப்பிடுங்கள்.

நாவல் பழம்

சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் எனச் சின்னக் குழந்தைகள் கூடச் சொல்கிறார்கள். ஆனால், அதே சின்னக் குழந்தைகள் உள்ள பள்ளி வாசலில் உள்ள மரங்களில் இருந்து கொட்டிக்கொண்டே இருக்கும் இந்த நாவல் பழங்கள்... அனைவரும் சாப்பிட கூடிய பழம். குடல் புண்களைப்போக்கும். பசியைத் தூண்டும். குழந்தையின்மையால் அவதிப்படுவோர், ஆணும் பெண்ணும் சாப்பிட சிறந்த மருந்து இது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?