Clapping Therapy

 

Facebook

ஹெல்த்

LIMCA BOOK OF RECORDS : கைத்தட்டியே நோய்களைக் குணப்படுத்திய விருது பெற்ற 95+ முதியவர்

கை தட்டினால் நோய்களில் இருந்து விடுதலை. கைதட்டி நோயைக் குணப்படுத்தும் இந்த முறைக்குக் கைதட்டும் யோகாசனம் என்ற பெயரும் வைத்திருக்கிறார் தில்லியைச் சேர்ந்த யோகி. 95+ வயதாகும் கிருஷ்ணசந்த் பஜாஜ். இந்தப் பயிற்சி செய்வதற்குக் காரணம் நோய் தீர்ப்பு முறை என்கிறார்

Newsensetn

இதய நோய், ஹைபர் டென்ஷன், சர்க்கரை நோய், ஆஸ்துமா, சளி தொந்தரவு, தலைவலி, எலும்பு நோய்களுக்குக் கை தட்டுதல் மூலம் நிவாரணம் பெறலாம் எனச் சொல்கிறார். ‘Tali yoga’ கைத்தட்டும் பயிற்சியே யோகா… இதனாலே இவருக்குப் பல நோய்கள் குணமாகியுள்ளது.

இரு கண்களும் கண் புரை வந்து, பாதிக்கப்பட்டுப் பார்வையிழந்தார். அறுவை சிகிச்சை செய்துகொள்ள அவருக்குத் தைரியம் இல்லை. தினமும் காலை 20 நிமிடங்கள் கை தட்டுவதால் இழந்த பார்வையைத் திரும்பப் பெற்றதாக அவர் சொல்கிறார். இவரது கைதட்டல் கண்டுபிடிப்பு 1997-ம் ஆண்டு லிம்கா உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இவர் லிம்கா விருது பெற, ஒரு மணி நேரத்துக்கு 9500 முறை கைதட்டியாகச் சொல்கிறார். ஓர் ஆண்டுக்கு இவர் 1.5 கோடி முறை கைத்தட்டுகிறார். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு இவர் 20,000 முறை கைத்தட்டுகிறார்.

Limca Awards

இவர் ஒரு கிளாப்பிங் - தெரபிஸ்ட்

முதலில், இவரது வாழ்வில் பார்வை இழந்ததாகவும் பின் வெள்ளை முடி வந்ததாகவும் ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும் பின்னர், சிறுநீரக பிரச்சனைகள் வந்ததாகவும் சொல்கிறார். அதற்கு அவர் தினமும் 1500 முறை கைதட்டியதாகச் சொல்கிறார். பல வாழ்வியல் நோய்களுக்குக் கைத்தட்டியே குணமடையலாம் என்கிறார். உடல் பருமன், தூக்கமின்மை, சர்க்கரை நோய், மனசோர்வு, பசியின்மை ஆகிய வாழ்வியல் தொந்தரவுகள் கைத்தட்டுவதாகச் சரியாகுமாம்.

இவர் ஒரு கிளாப்பிங் - தெரபிஸ்ட் என்கிறார்கள். ஒரு நிமிடத்துக்கு 60 - 100 முறை கைத்தட்ட வேண்டும். இப்படித் தொடங்கிக் கைத்தட்டும் வேகம் அதிகரித்து 200-300 முறை ஒரு நாளைக்குக் கைத்தட்ட வேண்டும் என்கிறார்.

எந்த நோயும் இல்லாதவர்கள், ஒரு நாளைக்கு 1500 முறை கைத்தட்டினால் மேலும் எந்த நோய்களும் வராதாம்.

எதாவது உடல் தொந்தரவுகள் இருப்பவர்கள், 2500-3500 முறை கைத்தட்டினால் நோய்கள் சரியாகுமாம். 4-5 முறை இடைவெளி விட்டு விட்டு கைத்தட்டும் முறையைச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இப்படி 2500-3500 முறை கைத்தட்ட வேண்டுமாம்.

Clapping Therapy

எல்லாவிதமான பலவீனமும் நீங்கிவிடும். முகம், சருமம் பொலிவு பெறும். சுவாச பிரச்சனைகள் சரியாகும்

இந்தக் கைத் தட்டும் பயிற்சி தொடங்கும் முன் கைகளில் அதாவது உள்ளங்கையில் எண்ணெய் தடவிகொள்ளவும். முதலில் மெதுவாகத் தொடங்கி அப்படியே வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஏசி ரூமில் அமர்ந்து கைத்தட்ட கூடாது. கைகளில் கை உறைகூட அணிந்து கொள்ளலாம். சூரிய உதயத்துக்கு முன் இந்தப் பயிற்சி செய்யலாம்.

அவரையே அவர் உதாரணமாகச் சொல்கிறார். “கண் புரையால் பார்வை இழந்து, வயதாவதால் முடி கொட்டி வெள்ளையானது. கைத்தட்டும் பயிற்சியைச் செய்து வந்ததால் பார்வை திரும்பக் கிடைத்தது. எனது முடியும் மீண்டும் கருப்பானது ஒன்றரை ஆண்டுக்குள்ளே” என்கிறார்.

இவர் இந்தக் கைத்தட்டும் யோகா பயிற்சியைச் சொல்லித்தர இதுவரை யாரிடமும் பணமும் வாங்கியது இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், இவரது வாழ்வில் எண்ணெய் உணவுகள், துரித உணவுகள் உண்பதை தவிர்த்திருக்கிறார். ஆரோக்கியமான வாழ்வியலை வாழ்ந்து இருக்கிறார். கைத்தட்டும் பயிற்சியை இவர் மிகவும் மகிழ்ச்சியாக ஆர்வத்துடனும் செய்திருக்கிறார்.

Clapping

கைத்தட்டுவதால் என்ன உடலில் நடக்கிறது?

கைத்தட்டுவதால் ரத்த நாளங்கள், ரத்தத்துக்கு இளஞ்சூடு கிடைக்கிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. ரத்த நாளங்கள், ஆர்டரீஸ் ஆகியவற்றில் தடைகள் இருந்தால் அது நீங்குகிறது. சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் கழிவுகள் நீங்குகிறது. உடலுக்கு உள்ள நாளங்கள், பைப்களில் கொழுப்பு நீங்குகிறது. சிறுநீரகத்துக்குப் பயிற்சியாகிறது. ஆரோக்கியமான பிளட் ஸ்டிரீம் உருவாகிறது. நோய்கள் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும்.

Clapping

கை எப்படித் தட்ட வேண்டும்?

நின்று கொண்டோ உட்கார்ந்து கொண்டோ கைத் தட்டலாம்.

இரு கைகளும் நேராக இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும்.

இரு உள்ளங்கைகளும் விரல்களின் நுனியில் கைதட்டும் போது ஒன்றுடன் ஒன்று மோத வேண்டும்.

முதல் நாளில் 200 முதல் 300 முறையும் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாகக் கைத்தட்டுவதை அதிகரிக்கலாம்.

ஒரு நிமிடத்தில் 60-100 வரை கைத்தட்ட ஆரம்பித்தப் பின்பு வேகத்தைக் கூட்டித் தினமும் 20 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

கைதட்டும் போது சப்தம் உண்டாக வேண்டும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?