Lesbian

 

Twitter

ஹெல்த்

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : அந்தக் காலத்திலும் செயற்கை கருவிகள் - பகுதி 18

மினு ப்ரீத்தி

கோசலை என்பது பண்டைய இந்தியாவின் வடக்கிழக்குப் பகுதியில் இருந்த தேசம். இது கங்கை நதியின் டெல்டா பகுதியில் அமைந்து இருந்தது. இது முழுக்க முழுக்கப் பெண்களால் ஆளப்பட்ட தேசமாகவே இருந்திருக்கலாம் என்றும் வரலாறு கூறுகிறது.

ஏழாம் நூற்றாண்டிலே வாழ்ந்த புகழ் பெற்ற கவிஞர் சாபோ என்பவர், ‘லெஸ்போ’ என்று பெண்களால் ஆளப்பட்ட தீவு தேசம் பற்றி விரிவாகப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

அந்தத் தீவில் ஆண்களுக்கு இடமே இல்லையாம். முழுக்க முழுக்கப் பெண்கள் உள்ள இடம். அங்கிருக்கும் பெண்களுக்குக் கர்ப்பம் தரிக்கும் ஆசை எழுந்தால் மட்டும், உடனே யாராவது ஆண்களை வரவழைப்பார்களாம்.

மற்ற நேரங்களில் பெண்களும் பெண்களும் உறவுகொள்வதற்கான ஓரினச்சேர்க்கைதான் பழக்கமாக இருந்ததாம். இந்த லெஸ்போ தீவின் பெயரில் இருந்துதான் ஓரினசேர்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கு ‘லெஸ்பியன்’ என்ற பெயர் வந்திருக்கிறது.

காம உறவில் ஆசை ஏற்படும்போது, பெண் உறுப்பில் தோன்றும் அரிப்பை, ‘கரம்’ என்று சொல்லப்படுகிறது. ‘கரவேகா’ என்றால் அந்த அரிப்பு அதிகமாக இருக்கும் பெண்கள். இந்தக் கரவேகா வகைப் பெண்களுக்குச் சாதாரணக் காம உறவுடன், காம சுகம் தரும் செயற்கையான கருவிகளைப் பயன்படுத்தியும் சுகம் அளிக்க வேண்டியதாக அக்காலத்திலே சொல்லப்படுகிறது.


அந்தக் காலத்தில் செயற்கை கருவிகள் இருந்ததா என்ற சந்தேகம் வருகிறதா? இருந்தது. இப்படிப்பட்ட செயற்கை கருவிகள் ஹரப்பா அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன. காமச்சூத்திரத்திலும் இப்படிப்பட்ட செயற்கை கருவிகளைப் பற்றி எழுதியிருக்கின்றனர்.

Sex

திராவிடத் தேசம் என அந்தக் காலத்தில் சொல்லப்பட்டது எது? கிட்டத்தட்ட நமது இப்போதைய தமிழ்நாடுதான். இங்கு உள்ள பெண்களின் விருப்பம் எப்படியாக இருந்திருக்கும்? காமச்சூத்திரத்தில் குறிப்பிடுவது இதுதான். காம உறவுக்கு முந்தைய தூண்டுதல் விளையாட்டில் நிதானமாகச் செய்து இந்தப் பெண்களை உறவுக்குத் தயார் செய்துவிட்டு, அதன் பிறகு உறவில் ஈடுபட்டால் சீக்கிரமே இவர்களுக்கு இன்பம் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது. தூண்டுதல் விளையாட்டு முக்கியம். இந்த விளையாட்டால் இவர்களுக்கு ஆனந்தம் சீக்கிரமே கிடைத்துவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வனவாச தேசம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது இப்போதைய கொங்கனி பகுதி. மும்பைக்குத் தென்கிழக்காக இருக்கும் மேற்கு கரையின் மலைப்பகுதி. இந்தப் பெண்கள் நிதானமான வேகத்தில் உறவுகொள்வதையே விரும்புவார்கள். தூண்டுதல் விளையாட்டுகளையும் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் தாங்குவார்கள்.

கவுட தேசம் என்பது இப்போதைய மேற்கு வங்காளம் பகுதி. இந்தத் தேசத்துக்குப் பெண்களும் மிருதுவானவர்கள். இனிமையாகப் பேசுவார்கள். அழகாகவும் இருப்பார்கள். அழகான ஆண்களையே நேசிப்பார்கள். நாசூக்காக நடந்துகொள்வார்கள் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தேசத்திலும் இப்படி ஒவ்வொரு விதமான பழக்கங்கள் இருந்து வருகின்றன. இருந்தாலும், தன் மனதுக்கு எது சுகமோ, எது நிறைவு தருமோ, அந்தப் பழக்கத்தையே ஒருவர் கடைப்பிடிப்பது நல்லது.

Girls Pleasure

ஒரு நாட்டின் பழக்கம் காலப்போக்கில் இன்னொரு நாட்டுக்கும் பரவலாம். ஒரு நாட்டின் மக்கள் இன்னொரு நாட்டின் பழக்கத்தை அனுசரிக்கத் தொடங்கலாம். எனவே, ஒவ்வொரு தேசத்தின் பழக்கமும் இப்படிதான் இருக்கும், இப்படிதான் பெண்கள் பழகுவார்கள் எனப் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. தேசத்தில் இதற்கு மாறான பழக்கங்களும் கடைபிடிக்கப்படும். இது முழுக்க முழுக்க தனிப்பட்ட பெண்ணின் சுபாவத்தைப் பொறுத்தது. இதையெல்லாம் கண்டறிந்து, அதையெல்லாம் புரிந்துகொண்டு, அந்தப் பெண்ணுக்கு பிடித்தமான விஷயங்களையே ஒரு ஆண் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பெண்ணுக்கு அவன்மீது சீக்கிரமே சலிப்பு வந்துவிடும்.

பொதுவான கருத்துகளைப் பின்பற்றி இருந்துவிடகூடாது. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு மனசு இருக்கிறது. ஒவ்வொரு மனசும் வித்தியாசமாகச் சிந்திக்கும் வல்லமை படைத்தது. எனவே, தனிப்பட்ட ஒரு பெண்ணின் விருப்பம் அறிந்து அவளோடு பழகுவதே சரி எனக் காமச்சூத்திரம் சொல்கிறது.

முந்தைய பகுதியைப் படிக்க

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?