Health: தினமும் உப்பு குறைவாக சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன? | Nalam 360 Canva
ஹெல்த்

Health: தினமும் உப்பு குறைவாக சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன? | Nalam 360

தினசரி உணவில் உப்பு சேர்த்துக்கொள்ளாதவர்கள் இருதய நோயால் பாதிக்கப்படுவது குறைகிறது என ஆராய்ச்சி ஒன்றில் கண்டறிந்துள்ளனர். இது உப்பு சேர்த்து சாப்பிடுபவர்களை விட 18 சதவிகிதம் குறைவு

Keerthanaa R

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். ஒரு உணவின் சுவையை கூட்டுவதும் கெடுப்பதும், இரண்டுமே இந்த உப்பு தான்.

சமையல் வீடியோக்களை பார்த்தால் உப்பு தேவையான அளவு என்பார்கள். அந்த தேவையான அளவு என்ன என்பது நாமாக சமைக்கும்போது தான் நமக்கு தெரிகிறது.

ஆனால் இந்த உப்பு உணவை மட்டுமல்ல, நம் உடலையும் பாதுகாக்கிறது.

உப்பில் சோடியம் இருக்கிறது. இது உடலில் அதிக அளவில் இருந்தால் அது கெடுதல் விளைவிக்கும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சராசரியாக ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு அதிகமாக உப்பு சாப்பிடக்கூடாது. அதே போல 3.5 கிராமுக்கு குறைவாகவும் இருக்கக்கூடாது இதன் அளவு.

ஆனால், வளர்ந்தவர்களில் (adults) 5 கிராமுக்கு குறைவாக உப்பு சேர்த்துகொள்வோர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற ஆபத்துகளை தடுக்கலாம்

கார்டியன் தளத்தில் வெளியான அறிக்கையின்படி, தினசரி உணவில் உப்பு சேர்த்துக்கொள்ளாதவர்கள் இருதய நோயால் பாதிக்கப்படுவது குறைகிறது என ஆராய்ச்சி ஒன்றில் கண்டறிந்துள்ளனர். இது உப்பு சேர்த்து சாப்பிடுபவர்களை விட 18 சதவிகிதம் குறைவு

நமது தினசரி உணவில் உப்பு குறைவாக இருந்தால் என்ன ஆகும்?

ரத்த அழுத்தம் குறையும்:

சோடியம் குறைவாக எடுத்துக்கொள்வதால், கிட்னி ஆரோக்கியமாக இருக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.

இதயத்துக்கு நல்லது:

உப்பு கம்மியாக சாப்பிட்டால், இருதயம் சம்பந்தமான நோய்கள் குறையும். ஹார்ட் அட்டாக் அல்லது பிற இருதய கோளாறுகள் வராமல் தடுக்கலாம்

Bloating - வீக்கத்தை தவிர்க்கலாம்:

உப்பு உட்கொள்ளல் அதிக நீர் தேக்கத்திற்கு வழிவகுக்கிறது, இது பின்னர் வீக்கத்திற்கு (Bloating) வழிவகுக்கிறது. உப்பு குறைவாக இருந்தால் வீக்கம் குறையும்

எலும்பின் ஆரோக்கியம் கூடும்:

நீண்ட காலத்திற்கு உணவில் அதிகப்படியான உப்பு சேர்த்துக்கொள்ளும்போது உடல் திசுக்கள் மற்றும் செல்களில் திரவத்தை சேகரிக்க வழிவகுக்கும்.

இது கால்சியத்தை வெளியேற்ற உடலை கட்டாயப்படுத்துகிறது, இது எலும்புகளின் சிதைவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. அன்றாடம் உப்பைக் குறைப்பது எலும்புகள் சிதைவடையும் அபாயத்தைக் குறைக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?