4 வாரம் கோமா, 30 அறுவை சிகிச்சைகள்; எல்லாம் ஒரு கொசுக்கடியால் - கண்ணீர் விடும் இளைஞர்! Twitter
ஹெல்த்

4 வாரம் கோமா, 30 அறுவை சிகிச்சைகள்; எல்லாம் ஒரு கொசுக்கடியால் - கண்ணீர் விடும் இளைஞர்!

Antony Ajay R

கொசுக்கள் மிகவும் நச்சரிப்பவை. நாம் சோர்வாக உறங்கச் செல்லும் போது வந்து சோதிக்கும் கொசுக்கள் மீது உலகத்தின் அத்தனை வசைகளையும் பொழிவோம். எந்த தயக்கமும் இல்லாமல் நம் உறக்கத்தைக் கெடுக்கும் அவற்றுக்கு மரண தண்டனை விதிப்போம்.

நாம பட்டுன்னு அடிச்சா பொட்டுன்னு போகுற கொசுக்கள் சில நேரங்களில் நமக்கு எமனாக மாறிவிடும். டெங்கு போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்தும். அவை கொண்டுவரும் வைரஸ்கள் மற்றும் இதர ஒட்டுண்ணிகள் பல விதமான தீங்குகளை ஏற்படுத்தக்கூடியவை.

ஒரு சிறிய கொடூரமான கொசுவால் கடிக்கப்பட்ட ஒருவர் மரணத்தின் விளிம்பு வரைச் சென்றுள்ளார். அவருக்கு 30 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. 4 வாரங்கள் கோமாவில் இருந்துள்ளார். அப்படி என்ன கொசு? அவருக்கு என்ன நடந்தது? விரிவாகப் பார்க்கலாம்.

செபாஸ்டியன் ரோட்ஸ்கே என்பவர் 27 வயது நிரம்பிய ஜெர்மன் இளைஞர். கொசு கடித்ததனால் அவருக்கு ஃப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது 30 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவரது இரண்டு கால் விரல்களை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். இதற்கிடையில் 4 வாரங்கள் அவர் கோமாவில் இருந்துள்ளார்.

2021 கோடையில் அந்த கொசு இவரைக் கடித்திருக்கிறது. இதனால் இரத்தத்தில் விஷம் கலந்து கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் பாதிப்புகளையும் அனுபவித்துள்ளார்.

பற்றாக்குறைக்கு தோல் மாற்றும் அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டுள்ளது. வீரியமிக்க பாக்டீரியாக்கள் அவரது தொடைப்பகுதியை பாதிக்குபாதி ஆக்கிரமித்துவிட்டன. இதனால் மொத்தமாக சீழ் பிடித்திருக்கிறது. தான் பிழைக்கவே முடியாது என நினைத்திருக்கிறார் ரோட்ஸ்கே.

கொசுக்கடித்த பின்னர் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார் ரோட்ஸ்கே. அவரால் சாப்பிடவும் குளிக்கவும் கூட முடியாமல் படுத்தபடுக்கையாக இருந்திருக்கிறார். திடீரென ஒரு நாள் தனது கால்சட்டை நனைந்திருப்பதை கவனித்திருக்கிறார். அது மொத்தமாக சீழ் பிடித்திருந்திருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்து வந்தததும் மருத்துவர்கள் இது "ஆசிய புலிக் கொசு" கடியால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

இப்போது வரை நோய் காரணமாக விடுமுறையில் இருக்கிறார் ரோட்ஸ்கே.

"ஒரு கடி கூட உங்களை மோசமான நிலைக்கு தள்ளிவிடும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவர்களை அனுகுங்கள்"

ஆசிய புலிக் கொசுக்கள் காட்டுக்கொசு என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பகல் நேரத்தில் கடிக்கக் கூடியவை. இதன் கடியால் மோசமான ஒட்டுண்ணிகள், நோய்பரப்பிகள் நமக்கு பரவக் கூடும். கிழக்கு குதிரை மூளை அழற்சி (EEE), ஜிகா வைரஸ், மேற்கு நைல் வைரஸ், சிக்கன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றவை ஏற்படலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?