Bruce Lee twitter
ஹெல்த்

Bruce Lee : அதிக தண்ணீர் பருகியது தான் ப்ரூஸ்லீ மரணத்துக்கு காரணம் - ஆய்வாளர்கள் விளக்கம்!

ப்ரூஸ்லிக்கு பெரு மூளை வீக்கம் இருந்ததும், அவர் அளவுக்கு அதிகமாக உடல் உழைப்பு செய்வதனால் அவருக்கு ஹீட்ஸ்ரோக் இருந்ததும் அவரது மரணம் குறித்து அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணங்கள்.

Antony Ajay R

ஹாலிவுட் திரையுலகில் மிகக் குறுகிய காலத்திலேயே பெரிய அளவில் பிரபலமடைந்தவர் ப்ரூஸ்லீ. இவர் 32 வயதிலேயே மரணமடைந்தார்.

இதனால் இவரது மரணத்தில் பலருக்கும் சந்தேகம் எழுந்தது. பலரும் பல விஷயங்களை நம்புகின்றனர். அவர் மரணத்தின் பின்னிருக்கும் மர்மம் ஒன் - இன்ச் டெக்னிக்கை விட சிக்கலாக இருக்கிறது.

ப்ரூஸ்லீயை அவருடைய காதலி விஷம் வைத்து கொன்றார் என்று சிலர் கருதுகின்றனர். சிலர் சீனாவின் இரகசிய குழு ஒன்று சதி செய்துக் கொன்றது என்றும், சிலர் அமெரிக்க கேங்க்ஸ்டர்கள் அவரை கொன்றதாகவும், அவரது வளர்ச்சியைப் பிடிக்காத சில ஹாலிவுட் வட்டாரத்தினர் கொன்றதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், ப்ரூஸ் லீயை யாரும் கொல்லவில்லை என்று ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ப்ரூஸ்லீக்கு பெரு மூளை வீக்கம் இருந்ததும், அவர் அளவுக்கு அதிகமாக உடல் உழைப்பு செய்வதனால் அவருக்கு ஹீட் ஸ்ரோக் இருந்ததும் அவரது மரணம் குறித்து அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணங்கள்.

இப்போது அவரது இறப்புக்கு ஹைபோநெட்ரீமியா காரணமாக பெருமூளை வீக்கம் தான் காரணம் என முன்மொழிகிறார் ஆய்வாளர்  Fundación Jiménez Díaz.

இதன் மூலமா ப்ரூஸ் லீ அதிகமா தண்ணீர் குடிச்சது தான் அவருடைய இறப்புக்கு காராணம்னு சொல்றாங்க. அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் செயலிழந்திருக்கிறது.

நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு, நாம் உடலுக்கு தேவையான நீரின் அளவு, நாம் வெளியேற்றுகின்ற நீரின் அளவு ஆகிய மூன்றும் சீராக இருக்க வேண்டியது அவசியம். அதிக நாட்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?