நவீன உணவுப் பழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது குளிர்பானங்கள். இந்த குளிர்பான நிறுவனங்கள் மக்களை ஈர்ப்பதற்காக பல வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன.
அவற்றில் ஒன்று தான் குறைந்த கலோரிகளைக் கொண்ட இனிப்புகளைப் பயன்படுத்துவது. இதற்காக மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள, சர்கரையை விட 200 மடங்கு இனிப்பான அஸ்பார்டேம் என்ற இனிப்பை பயன்படுத்துகின்றனர்.
டயட் கோக், ஜீரோ கோக், பெப்சி மேக்ஸ், 7அப் ஃப்ரீ உள்ளிட்ட குளிர்பானங்கள் சில டூத் பேஸ்ட்கள், சில நிறுவனங்கள் தயிரில் கூட இதனைப் பயன்படுத்துகின்றன.
6000த்துக்கும் மேற்பட்ட பொருட்களில் பயன்படுத்தப்படும் அஸ்பார்டேம் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார அமைப்புக் கூறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு ஒரு உணவுப் பொருள் பற்றிய ஆராய்ச்சியில்,
புற்று நோயை ஏற்படுத்தும்
புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான காரணமாக இருக்கலாம்
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்
புற்றுநோயை ஏற்படுத்தலாம் என வகைப்படுத்த முடியாது.
இதில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும் என்ற வகைப்பாட்டில் வருவது, இந்த பொருள் பாதுகாப்பானதா இல்லையா என்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.
அஸ்பர்டேமை பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான அளவுக்குள் தான் உபயோகிக்கின்றனர். ஆனால், இது கொஞ்சள் அளவுக்கு மீறும் போதும் மோசமான விளைவை ஏற்படுத்தலாம்.
ஒரு மனிதன் ஒரு நாளில் தனது உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 40 மில்லி கிராம் என்ற அளவில் ஆஸ்பர்டேமை பயன்படுத்தலாம் என உலக சுகாதார மையம் கூறுகிறது.
1965ம் ஆண்டு காயங்களுக்கு மருந்துகண்டுபிடிக்கும் முயற்ச்சியில் இருந்த ஒரு ஆராய்ச்சியாளரால் தவறுதலாக கண்டுபிடிக்கப்பட்டது அஸ்பார்டேம்.
1980ல் பயன்பாட்டுக்கு வந்தது முதல் பல வகைகளில் அது பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust