நம்மில் பலருக்கு தினமும் தயிர் சாப்பிடும் வழக்கம் இருக்கும், ஏதாவது ஒரு வழியில் அதனை சேர்த்து சாப்பிட்டு விடுவோம். நீங்கள் தினமும் தயிர் சாப்பிடும் நபராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது. குறிப்பாக இரவு நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்றால், கவனமாக படியுங்கள்!
இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக்கூடாது என்று சொல்லுகிறார்கள். ஏன் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தயிர் பல நன்மைகளைக் கொண்டிருக்கும் போது, அதை இரவு உணவிற்கு சாப்பிட வேண்டாம் என்று வீட்டில் உள்ளவர் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சளி பிடிக்கும் என்பதற்காக சிலர் சொல்வார்கள்.
ஆயுர்வேதத்தின் படி தயிர் இரவில் சாப்பிடுவதால் செரிமானம் கடினமாகும், கொழுப்பை அதிகரிக்கும்.
இரவில் தயிர் சாப்பிட்டால், அது வயிற்றில் கனத்தை ஏற்படுத்துகிறது. அதாவது செரிப்பதற்கு கடினமாக இருக்கிறது.
இது சளி உருவாவதற்கு வழிவகுக்கிறது.
நீரிழிவு, எடை அதிகரிப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
நீங்கள் இரவில் தயிர் சாப்பிடும் பழக்கம் கொண்டவராக இருந்தால், அதைத் தவிர்க்கவும். அதற்கு மாற்றாக மோர் குடிக்கலாம் என்கின்றனர்.
கல் உப்பு, கருப்பு மிளகு மற்றும் சீரகம் போன்ற மசாலாப் பொருட்களை சேர்த்து மோர் குடித்துவர உடலுக்கு நல்லது என்கின்றனர்.
தயிர் பற்றி நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் தயிரை பழங்களுடன் சேர்த்து உண்டால் ஒவ்வாமைகளைத் தூண்டும்.
தயிர் சாப்பிடவே கூடாது என்றில்லை. மதிய வேளையில் மிதமாக சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust