Soda Twitter
ஹெல்த்

’சோடா’ குடித்தால் பக்கவாதம் வருமா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

உலகச் சுகாதார நிறுவனமும் இந்த ரசாயனங்களைப் பற்றி இன்னும் நிறையப் புரிந்து கொள்ள மதிப்பீடு செய்து வருகிறது. எந்த மாதிரியான கெடுதல்களை ஏற்படுத்தும்? இதைத் தவிர்க்கலாமா போன்ற மதிப்பீடுகளை WHO செய்து வருகிறது.

மினு ப்ரீத்தி

பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், செயற்கையான இனிப்புகள் அதாவது artificial sweeteners’ என்று சொல்லக்கூடிய இனிப்புகளைச் சேர்த்து தயாரிக்கும் உணவுகள், பானங்கள் பாதுகாப்பானது அல்ல என்றும், இவற்றைச் சாப்பிடுவதாலும், பருகுவதாலும் இதயப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு ஆய்வின் பகுதியாக, ஆராய்ச்சியாளர்கள் ஒன்பது ஆண்டுகளாக 103,000 பெரியவர்களைக் கண்காணித்து வந்தனர். மேலும் ஒவ்வொரு நாளும் calorie-free sweeteners உட்கொள்பவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து ஒன்பது சதவீதம் (9%) அதிகம் என்று ‘டைம்ஸ் யுகே’ தெரிவித்துள்ளது.

குறைந்த சர்க்கரை கொண்ட ஃபிஸி பானங்களில் (low-sugar fizzy drinks) பயன்படுத்தப்படும் ‘அஸ்பார்டேம்’ (aspartame) என்ற மூலப்பொருளை சாப்பிடுபவர்களுக்கு அல்லது குடிப்பவர்களுக்குப் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்குமாம். மேலும், மற்றவர்களைவிடச் செயற்கையான fizzy drinks குடிப்பவர்களுக்குப் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 23% அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்கள், ஒரு நாளைக்கு சராசரியாக 43mg இனிப்புகளை (sweeteners) உட்கொண்டனர் எனத் தெரிய வந்துள்ளது. அதாவது, இது ஒரு டேபிள் டாப் இனிப்பு (table-top sweetener) அல்லது 100ml டயட் சோடா பாக்கெட்டுக்கு சமமானது.

செயற்கை இனிப்புகளில் சுக்ரோலோஸ் (sucralose), அஸ்பார்டேம் (aspartame) உள்ளன. இது சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பானது. வெள்ளையாக இருக்கும்.

எந்த ஒரு வாசனையும் இதில் வராது. அவற்றில் கலோரிகள் இல்லை என்றாலும், செயற்கை இனிப்புகள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், செயற்கை பானங்கள், செயற்கை உணவுகளை உட்கொள்வதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளனர்.

இந்த ஆய்வில் சொன்னது என்னவென்றால், "தினமும் மில்லியன் கணக்கான மக்களால் உட்கொள்ளப்படும் உணவுகளில், பானங்களில் உள்ள உணவு சேர்க்கைகள் (food additives) சர்க்கரைக்கான மாற்றுப் பொருள் அல்ல. இது ஆரோக்கியமானதோ, பாதுகாப்பானதோ, சர்க்கரைக்குப் பதிலாக இதைச் சாப்பிடலாம் எனப் பரிந்துரைக்கும் அளவுக்கு நல்ல உணவுப் பொருளோ அல்ல."

குளுக்கோஸைத் தாங்கும் உடலின் திறன்களை இந்த மாதிரியான செயற்கை இனிப்புகள் தடுக்கலாம். இன்சுலின் போன்ற ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம். குடல் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியத்தைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். உலகச் சுகாதார நிறுவனமும் இந்த ரசாயனங்களைப் பற்றி இன்னும் நிறையப் புரிந்து கொள்ள மதிப்பீடு செய்து வருகிறது. எந்த மாதிரியான கெடுதல்களை ஏற்படுத்தும்? இதைத் தவிர்க்கலாமா போன்ற மதிப்பீடுகளை WHO செய்து வருகிறது.

இந்தச் செயற்கை இனிப்புகளைப் பற்றி ஒட்டுமொத்தக் கண்ணோட்டத்தைப் பெற கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் சிலர் கூறுகிறார்கள். நட்ஸ், விதைகள், பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள் ஆகியவை ஆரோக்கியமான உணவுகள். செயற்கை உணவுகளைத் தவிர்த்துவிட்டு இதுபோன்ற இயற்கை உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. தண்ணீர் தாகம், வெயில் காலம், ஏதாவது திரவமாகக் குடிக்கலாம் எனத் தோன்றும்போது இளநீர், கரும்பு சாறு, பழச்சாறுகள் போன்றவற்றைக் குடிப்பது இன்னும் நல்லது. இந்த மாதிரியான ஃபிஸி பானங்களைக் குடிப்பதைவிட இயற்கையாகக் கிடைக்கும் உணவுகள் சத்தானவை; பாதுகாப்பானவை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?