தாய்ப்பால் Twitter
ஹெல்த்

தாய்ப்பால் குறித்து இளம் தாய்மார்களுக்கு இருக்கும் கேள்விகளும்... சந்தேகங்களும்!

தாய்ப்பால் கொடுப்பதால் தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள், தேவையான அளவு பால் சுரக்க டிப்ஸ், வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் தொடர்பாக இருக்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் டாக்டர். நித்யா ராமச்சந்திரன்

Priyadharshini R

குழந்தைகளுக்கு குறைந்தது முதல் ஆறு மாதம் வரையாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

பிறந்த குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக மட்டுமே கிடைக்கிறது.

தற்போது இருக்கும் இளம் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது குறித்த கேள்விகளும், சந்தேகங்களும் அதிகமாகவுள்ளது.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள், தேவையான அளவு பால் சுரக்க டிப்ஸ், வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் தொடர்பாக இருக்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் டாக்டர். நித்யா ராமச்சந்திரன்

1. இளம் தாய்மார்களின் சந்தேகங்கள்: தாய்ப்பால் சரியாக வருகிறதா? குழந்தைக்கு வயிறு நிறைகிறதா?

முதலில் இளம் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது மன உறுதி கொள்ள வேண்டும்.

வீட்டில் இருக்கும் சிலர் குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றவில்லை, அதனால் தான் குழந்தை அழுகிறது என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மையில்லை

உண்மையாகப் பால் குறைவாக உள்ளது என்றால், சில அறிகுறிகள் உள்ளன. அதை குழந்தைகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

-->குழந்தை சரியாக சிறுநீர் கழிப்பது

--> குழந்தை சரியாக மலம் கழித்தல்

-->சரியான எடையில் குழந்தை இருத்தல்

இவை அனைத்தும் பால் அளவு சரியாக இருப்பதற்கான அறிகுறியாகும்.

2. நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா?

தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால் அந்த குழந்தைக்கு சர்க்கரையின் அளவு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அந்த குழந்தை அவசர பிரிவில் வைத்து ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒரு முறையும் சர்க்கரையின் அளவு கண்காணிக்கப்படுகிறது. சர்க்கரையின் அளவு குறைந்தால் குழந்தைகளால் அழ முடியாது என்பதால் தொடர்ந்து குழந்தை கண்காணிக்கப்படுகிறது.

3.தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்/சாப்பிடக்கூடாது?

பூண்டு அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்தல், வெந்தயம், நெய், முருங்கை கீரை, தண்ணீர் அதிகம் குடித்தல் தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தண்ணீர் கொடுத்தால் தொப்பை வந்துவிடும் என்பதெல்லாம் நம்மில் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. ஆனால் இவை முற்றிலும் தவறான கருத்துகள் என்றார் மருத்துவர் நித்யா

4.தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், பசும்பால் கொடுக்கலாமா?

குழந்தைக்கு ஒரு வருடம் ஆகும்வரை தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த பாலும் கொடுக்கக் கூடாது!

அப்படி தாய்ப்பால் சரியான நேரத்தில் கொடுக்க முடியவில்லை என்றால் நீங்கள் ஃபார்முலா பால் கொடுக்கலாம்.

5.குழந்தை பிறப்பிற்குப் பின் தாய்மார்களின் மனநிலை

இளம் வயதில் அதாவது 23 வயதில் குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு சற்று மனச்சோர்வு ஏற்படலாம்..

துணை ஆதரவின்மை, பயம் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் மனச்சோர்வு தாய்ப்பால் சுரக்கும் தன்மையைக் குறைக்கும்

6. தோலோடு தோல் உரசல் நல்லதா?

பொதுவாக தாய்மார்கள் தங்கள் மேலே குழந்தைகளை வைத்துக்கொள்வார்கள்.. ஆனால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அவ்வாறு செய்தால் குழந்தகளுக்கு சூடு தங்கிக்கொள்ளும் என்பார்கள்!

ஆனால் அது உண்மையல்ல. குழந்தை எந்த அளவிற்குத் தாயுடன் இருக்கிறதோ அந்த அளவிற்கு இருவருக்குமிடையேயான பிணைப்பு அதிகரிக்கும், பாலும் அதிகம் சுரக்கும்

இவ்வாறு பிறந்த குழந்தை பற்றியும் இளம் தாய்மார்கள் பற்றியும் பல நம்பிக்கைகள் இருக்கும். அவற்றை முழு வீடியோ பார்த்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?