வலிமையான எலும்புகளைப் பெற ஈஸி டிப்ஸ்! Twitter
ஹெல்த்

கைவலி, கால்வலி, முதுகுவலி : வலிமையான எலும்புகளைப் பெற ஈஸி டிப்ஸ்!

Antony Ajay R

மூட்டு வலி, முதுகு வலி, கால் உளைச்சல் எல்லாம் பெரியவர்களுக்கான நோயாக இருந்த காலம் மலை ஏறிவிட்டது. இளம் வயதிலேயே எலும்பு சம்பந்தமான நோய்களால் அவதிப்படுபவர்களை இப்போது பார்க்க முடிகிறது.

எந்த உடல் உழைப்பும் இல்லாத நம் வாழ்க்கை முறை அதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும் மாறியிருக்கும் உணவுப் பழக்கத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

வலிமையான எலும்புகளைப் பெறுவதற்கான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பற்றி இங்கு காணலாம்.

எலும்பு வலிமை என்றாலே கால்சியம் சத்து வேண்டும் என்பது குழந்தைக்குக் கூட தெரியும். ஆனால் கால்சியத்தை கிரகிக்க வைட்டமின் டி தேவை என்பது தெரியுமா?

கால்சியமும் வைட்டமின் டி -யும் சரியாக கிடைத்துவிட்டால் பிரச்னை இல்லை. வைட்டமின் டி கிடைக்க சூரிய ஒளி நம் மீது பட வேண்டியது அவசியம்.

அந்த வகையில் தினமும் காலையில் வீட்டை விட்டு வெளியில் வந்து நடப்பது சூரிய ஒளி நம் மீது பட உதவுவதோடு எலும்புகள் பலவீனமடையாமல் இருக்கவும் உதவும்.

கால்சியத் தேவைக்கு பால் சிறந்த உணவு. டீ, காபியாக இல்லாமல் சுத்தமான பால், மோர் தயிர் எடுத்துக்கொள்ளலாம். லாக்டோஸ் இண்டாலரன்ஸ் எனும் பால் ஒவ்வாமை இருப்பவர்கள் சோயா, கீரை, பீன்ஸ், பழச்சாறு சாப்பிட்டாலே ஒரு கிராம் (1000 மி.கி) கால்சியம் கிடைத்துவிடும். நம் உடலுக்கு ஒரு நாளுக்கு 1 - 1.3 மில்லி கிராம் கால்சியம் தேவை. உடல் பருமன் இருப்பவர்கள் கொழுப்பு சேருவதைத் தடுக்க பாலுக்கு பதிலாக இவற்றை பயன்படுத்தலாம்.

பூண்டு மற்றும் வெங்காயம் உணவில் சேர்த்துக்கொள்வது எலும்புகள் வலுவாக இருக்க உதவும்.

மீன் எலும்புக்கு வலு அளிக்கும் உணவாக இருக்கிறது. 100 மி.கி மீனில், 15 மி.கி கால்சியம் உள்ளது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட நெத்திலி, வஞ்சிரம், கட்லா உள்ளிட்ட மீன்களைச் சாப்பிடுவதன் மூலமாக எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது.

மீன் அளவு நண்டிலும் கால்சியம் இருக்கிறது. நண்டு உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதனால் தொடர்ந்து உட்கொள்வதைத் தவிர்க்கலாம்.

ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம். ஆட்டுக்கால் எலும்பு மஜ்ஜையில் கால்சியம் பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இதனைச் சாப்பிடுவதால் எலும்பு விரைவில் கூடும்.

சைவம் உண்பவர்களுக்கு இவற்றுக்கு மாற்றாக இருக்கிறது கொள்ளு. கொள்ளில், சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்தது. கேழ்வரகு, ராகி கஞ்சி போன்றவையும் எலும்புக்கு வலு சேர்க்கும்.

தவிர காய்கறிகள், பழங்கள், கீரைகளும் எலும்புக்கு வலு அளிக்கும். அவற்றைப் பார்பதற்கு முன்னர் கொஞ்சம் இவற்றைச் செய்யுங்கள்,

  • சோடா மற்றும் கோலா பானங்களை தவிர்த்தல்.

  • மது, புகை போன்றவைகளை அறவே ஒழிக்க வேண்டும்.

  • மின்தூக்கிகளை மறுத்துவிட்டு மாடிப்படிகளில் ஏறிச்செல்ல பழகுதல்.

  • ஓய்வு நேரங்களில் உட்கார்ந்தே இருக்காமல் பிடித்த விளையாட்டுகளை விளையாடுதல்.

  • கால் பந்து, கிரிக்கெட், பேட்-மிட்டன் போன்ற விளையாட்டுகள் உங்கள் எலும்புகளை வலுவாக்கி நோயற்ற வாழ்வைத்தரும் என்பது உறுதி.

பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருக்கும் பழங்களை உண்ணலாம். ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். அத்திப்பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளது. 100 மி.கி அத்திப் பழத்தில் 26 மி.கி கால்சியம் உள்ளது.

புரோகோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளைத் தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும். இதுதவிர கேரட், வெண்டைக்காய், வெங்காயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கீரைகளில் வெந்தயக் கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை ஆகியவற்றில் கால்சியம் உள்ளது. கீரைகளை இரவில் சாப்பிட்டாலோ, அசைவத்துடன் சேர்த்து சாப்பிட்டாலோ செரிமானத்தில் பிரச்னை ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் பேரீச்சம் பழங்களும் எலும்புகளுக்கு வலு சேர்க்க உதவும். இவற்றில் உடலுக்குத் தேவையான மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாதுஉப்புகள் உள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?