Diabetes

 

Facebook

ஹெல்த்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ஐந்து வழிகள் - விரிவான தகவல்கள்

சர்க்கரை நோய் வந்த ஆண், பெண் யார் வேண்டுமானாலும் இந்தச் சிகிச்சையைச் செய்யத் தொடங்கலாம்.

மினு ப்ரீத்தி

மாத்திரைகளைவிட வேகமான மருத்துவம் இயற்கை வழியில் உள்ளது. அதுதான் ‘தாவர இன்சுலின்’. இந்தச் சத்து சில வகை மூலிகைகள் மூலம் நமக்கு கிடைக்கும். இதனால் நமக்கு மாத்திரை, ஊசி தேவைப்படாது. சர்க்கரை நோயாளிகளான டைப் 1 மற்றும் டைப் 2 பிரிவினர் பயன்படுத்தலாம். தொடர்ந்து செய்ய வேண்டிய மெனக்கெடுதல்தான் அவசியம். சுகர் கட்டுக்குள் வரவைக்க அதிவேகமான முறையில் செயல்படும் மூலிகைகள், காய்கள் உள்ளன. இந்த மூலிகைகள், காய்களை ‘சுகர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று சொல்வார்கள். இந்த வைத்திய முறைக்கு என்று சரியான முறை உள்ளது. அதன்படி செய்தால் பலன் உடனடியாகக் கிடைக்கத் தொடங்கும்.

சர்க்கரை நோய் வந்த ஆண், பெண் யார் வேண்டுமானாலும் இந்தச் சிகிச்சையைச் செய்யத் தொடங்கலாம். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கத் தொடர்ந்து 6 மாதங்கள் செய்ய வேண்டியதாக இருக்கும். இந்தச் சிகிச்சையை காலை நேர பசி வந்த பிறகுதான் தொடங்க வேண்டும். 7 மணி, 8 மணி என்ற குறிப்பிட்ட நேர அளவு கிடையாது. பசிக்காமல் இந்தச் சிகிச்சையைச் செய்யக் கூடாது.


ஒரு மாதம் ஒரு வைத்தியம் எனத் தொடரலாம். ஒரே மாதத்தில் 2 சிகிச்சையைச் செய்யக் கூடாது. அதுபோல, வாரம் வாரம் மாற்ற கூடாது. இந்தச் சிகிச்சையைத் தொடங்கிய பிறகு உணவுகளில் சில கட்டுபாடுகள் இருக்கும். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

Fruits 

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்

அத்திப்பழம்

பேரிக்காய்

கொய்யா

செங்காயான பப்பாளி

சில துண்டு ஆப்பிள் சாப்பிடலாம்.

திட உணவு எப்படி இருக்கலாம்?

சிறுதானிய இட்லி, தோசை

கருப்பு அரிசி அடை

மாப்பிள்ளை சம்பா அரிசி சோறு

கைக்குத்தல் அரிசி சோறு

சோயா குருணை சாதம்

கேழ்வரகு களி

பாசிப்பயறு

Fishes

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய அசைவம்

காடை

சிறு மீன்கள்

மத்தி, சங்கரா, நெத்திலி, கவல, காரப்பொடி, நெய்சுதும்பு

குழம்பு மீனாகச் சாப்பிடலாம்

நாட்டுக்கோழி நல்லது.

Junk Foods

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாதவை

டீ, காபியுடன் சர்க்கரை

பீசா, பர்கர், பாஸ்தா

பரோட்டா

மைதா பொருட்கள்

எண்ணெயில் பொரித்தவை

வறுவல் காய்கறிகள்

கிழங்குகள்

வெந்தயச் சூரண

முதல் மாதம் : முளைக்கட்டிய வெந்தயச் சூரண வைத்தியம்

முதலில் சூரணம் செய்வது எப்படி?

காலையில் 7 மணியளவில் ஒரு கிலோ வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்கவும். மாலை 5 மணிக்கு தண்ணீரை வடித்துவிட்டு, ஊறிய வெந்தயத்தைப் பஞ்சு நூலால் நெய்த துணியில் இருக்கமில்லாமல் முடிந்து, ஒரு பலகை மேல் வைக்கவும். அதன் மீது சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும். அன்று இரவு. மறுநாள் பகல். இரவு ஆக மொத்தம் 36 மணி நேரம் முளைகட்ட வேண்டும். மூட்டையை நகர்த்தவோ அசைக்கவோ கூடாது. 3வது நாள் காலையில் முடிந்த வெந்தயத்தை அவிழ்த்து பார்த்தால் 1 செமீ, நீளம் முளைத்திருக்கும். அப்படியே துணியை முளைக்கட்டிய வெந்தயத்தை ஃபேன் காற்றின் கீழ் பரப்பி 2 நாட்கள் உலரவைக்கவும். வெந்தய முளைப்புக் காற்றில் அதிகம் சிதறாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.

பிறகு, இந்த வெந்தயத்தை அகலமான தட்டில் பரப்பி மெல்லிய துணியால் மூடி காயவைக்கவும். நேரடியாக வெய்யில் படக்கூடாது. இப்படி உலர்ந்த பின் உலர் அரவை கருவியில் போட்டு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும். இந்த முளைக்கட்டிய வெந்தயப் பொடியில் ‘தாவர இன்சுலின்’ எனப்படும் ‘4-ஹைட்ராக்ஸி ஐசோலூசின்’ நிரம்பி இருப்பதால் இது சர்க்கரை நோய் வகை 1 மற்றும் வகை 2 சார்ந்த நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகும். மருந்தாகும்.

இந்த வெந்தயச் சூரணத்தைச் சாப்பாட்டுக்கு 10 நிமிடம் முன் ஒரு மேசைக்கரண்டி அளவு வெந்நீரில் நன்கு கரைத்து 5 நிமிடம் வைத்திருந்தால் தளதளவென கூழ் போல் இருக்கும். அப்படி சாப்பிடுவது சிறந்தது. குளிர்ச்சி உண்டானால் உடலுக்கேற்ப வெந்தய சூரணத்தின் அளவைக் குறைத்து சரி செய்து கொள்ளவும்.

சளி, சைனஸ் தொல்லை இருந்தால் வெந்தய சூரணத்தை நல்ல சூடான நீரில் கரைத்து காபி, டீ குடிப்பதை போல் குடித்தால் தொந்தரவு ஏற்படாது.

36 மணி நேரம் முளைக்கட்டிய வெந்தயத்தை அப்படியே மென்று பச்சையாகச் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். சூரணமாக மேலே சொன்ன முறையிலும் சாப்பிடலாம். எப்படிச் சாப்பிட்டாலும் மூன்று வேளையும் உணவுக்கு முன் சாப்பிட வேண்டும்.

வெந்தயத்தில் உள்ள கரையும் நார்ச்சத்துக் குடலில் இருந்து சர்க்கரை சத்தும் கொழுப்பு சத்தும் ரத்தத்தில் அதிகமாக உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது. கரையா நார்ச்சத்து மலச்சிக்கலை அகற்ற உதவுகிறது.

வெண்டைக்காய்

இரண்டாவது மாதம் : வெண்டைக்காய் வைத்தியம்

கப்பில் குடிநீரில் 8 வெண்டைக்காயை பிளந்து அந்தத் தண்ணீரில் மூழ்கும்படி மூடி இரவு முழுக்க விட்டுக் காலையில் பார்த்தால், வெண்டைக்காயிலிருந்து கசிந்த வழவழப்பான நார்ச்சத்து தண்ணீரை குழகுழப்பாக மாற்றி இருக்கும். காலையில் எப்போது பசிக்கிறதோ அப்போது உணவு சாப்பிடும் 10 நிமிடம் முன் இந்த வெண்டைக்காய் தண்ணீர் குடித்துவிட்டு வெண்டைக்காயை மென்று விழுங்கவும். இயற்கையான முறையில் சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும். இந்த வெண்டைக்காய் வைத்தியத்துக்குப் பிறகு அளவாக உணவை சாப்பிட வேண்டாம்.

பாகற்காய்

மூன்றாவது மாதம் : பாகற்காய் வைத்தியம்

சர்க்கரை நோயாளிகள் கசப்பான உணவுகளைச் சாப்பிடுவது மிகவும் நல்லது. 25-50 கிராம் எடையுள்ள பாகற்காயை ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்து ஜூஸாக தயாரித்துக் காலையில் உணவுக்கு முன் குடிக்கவும்.

நெல்லிக்காய்

நான்காவது மாதம் : நெல்லிக்காய் வைத்தியம்

துவர்ப்பு சுவை சர்க்கரை நோயை போக்கும். இரண்டு நாட்டு நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி சாறு எடுத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும். நான்காவது மாதம் சர்க்கரை நோய் இடம் தெரியாமல் போகும்.

நூக்கல்

ஐந்தாவது மாதம் : நூக்கல் வைத்தியம்

100 கிராம் அளவு நூக்கலை பொடித்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து சாறெடுத்து உணவுக்கு முன் மூன்று வேளையும் சாப்பிடுவது சர்க்கரையைக் குறைக்கும். மாத்திரைகளைவிட வேகமாகக் குறைக்கும்.

இதன் பிறகு சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்துவிடும். 6வது மாதம் முதல் வெறும் வெந்தயச் சூரணத்தையோ அல்லது வெண்டைக்காய் அல்லது நூக்கல் அல்லது நெல்லிக்காய் அல்லது பாகற்காய் போன்ற ஏதேனும் ஒரு முறையை அவரவர் வசதிக்கு ஏற்ப பின்பற்றலாம். ஒரு முறையைப் பின்பற்ற அலுப்பு இருந்தால் வெவ்வேறு முறையை மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம். இனி உங்களுக்கு மாத்திரைகளோ ஊசிகளோ அவசியமில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?