மூலிகை வைத்தியம் Twitter
ஹெல்த்

Weight loss drink : கொழுப்பைக் கரைப்பதில் நம்பர் 1 மூலிகை!

மினு ப்ரீத்தி

எவ்வளவோ முயற்சி செய்தும் வெயிட்லாஸ் (Weight Loss) ஆகவில்லை எனக் கவலைப்படுபவர்கள் ஏராளம். வெயிட்லாஸ் ஆவது உறுதி. இந்த ஒரு டிரிங்க் உங்கள் உடலின் கொழுப்பைக் கரைப்பதோடு மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். 2 இன் 1 வேலையைச் செய்கிறது. இந்தப் பானம் சில கோயில்களில் பிரசாதமாகவும் தரப்படும். இப்போது கண்டுபிடித்து விட்டீர்களா? அது என்ன பொருள் என்று… எனினும், இந்த உணவுப் பொருளை அதாவது மூலிகை என்றும் சொல்லலாம். கேரளத்தில் மிகப் பிரபலம். சித்த மருத்துவர்கள் இதை மூலிகை என்றே சொல்வார்கள். பல நோய்களுக்கு மருந்தாகச் செயல்படும். அதாவது கொழுப்பைக் கரைப்பதில் நம்பர் 1 மூலிகை.

உடல்பருமனைக் குறைக்கும் வெயிட்லாஸ் டிரிங்க் ரெசிபி (Weightloss reciepe)

தேவையான பொருட்கள்

ஒன்றே ஒன்று தான்… அதுதான்…

கொடம்புளி – 1 இன்ச்

கடையில் கொடம்புளி எனக் கேட்டு வாங்குங்கள். கேரள மக்கள் இந்தக் கொடம்புளியில்தான் சமையல் செய்வார்கள். மீன் குழம்புகூட கேரள மக்கள் இந்தக் கொடம்புளியில்தான் செய்வார்கள். சுவையானது… மருத்துவக் குணமுடையது. நாம் பயன்படுத்தும் புளி உடலுக்கு கேடு. ஆனால், இந்தக் கொடம்புளி பல மருத்துவப் பலன்களைக் கொண்டது…

கொடம்புளி

எப்படிச் செய்வது?

கொடம்புளியை ரெசிப்பியை தயாரிப்பதற்கு முன், கொடம்புளியை நன்றாகக் கழுவ வேண்டும்.

இரவு நேரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரில், கழுவிய கொடம்புளியை போட்டு ஊறவைக்க வேண்டும்.

மறுநாள் காலையில், அதை எடுக்கவும். பின், அதனை மண் பானையிலோ ஸ்டீல் பாத்திரத்திலோ 3 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

இந்த 3 கப் தண்ணீரில் ஊறவைத்த கொடம்புளியும் அதன் தண்ணீரையும் ஊற்ற வேண்டும்.

இவற்றை அடுப்பில் வைத்துக் கொதிக்கும் வரை காத்திருக்கவும். பின்னர் கொதி வந்த பிறகு, மிதமான அளவு தீயில் வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வையுங்கள்.

மிதமான அளவு தீயிலே 5 நிமிடங்கள் வரை இந்தத் தண்ணீரை அப்படியே வைத்து அடுப்பை அணைத்து விடவும்.

இந்தக் கொடம்புளி தண்ணீர் இளஞ்சூடாக ஆற வேண்டும்.

பின்னர் இந்தக் கொடம்புளி தண்ணீரைக் கண்ணாடி ஜாரில் ஊற்றி வைக்கவும். பிளாஸ்டிக், செம்பு, மற்ற பாத்திரங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் இதனின் தன்மையில் மாறுபாடுகள் நடக்கும்.

கொடம்புளி

எப்படிக் கொடம்புளி டிரிங்கை பருகுவது?

காலையில் உங்களுக்கு எந்த நேரத்தில் பசி வருகிறதோ அந்த நேரத்தில் இந்தத் தண்ணீரைப் பருகவேண்டும். 6 மணியோ, 8 மணியோ, 11 மணியோ உங்களின் பசியை வைத்து நேரத்தைத் தீர்மானியுங்கள். ஆனால், இதுதான் உங்களின் முதல் உணவாக இருக்க வேண்டும்.

நாம் தயாரித்து வைத்த கண்ணாடி ஜாரிலிருந்து ஒரு டம்ளர் அளவுக்குக் கொடம்புளி தண்ணீரை எடுத்துக் கொள்ளவேண்டும். காலை உணவு பழங்களாக இருக்க வேண்டும். இட்லி, தோசை, பூரி, உப்புமா போன்ற டிபனாக இருக்கக் கூடாது.

பழங்களைச் சாப்பிடுவதற்கு முன், அரை மணி நேரத்துக்கு முன்பாகவே அதாவது பசி வந்த உடனேயே இதைக் குடிக்க வேண்டும்.

அதுபோல மதியத்தில் எப்போது பசிக்கிறதோ, 2 மணியோ 3 மணியோ உங்களின் பசி நேரத்தில், ஒரு டம்ளர் அளவுக்குக் குடிக்க வேண்டும். மதிய உணவு 50 % காய்கறி 50% சாதமாக இருக்கலாம்.

இரவு உணவு 2 பழங்களோ அல்லது 1-2 இட்லியாக அல்லது வேகவைத்த 50-70 கிராம் காய்கறி சாலடாக இருக்கலாம். இரவு 7 மணியோ அல்லது 8 மணியோ லேசான பசியைப் பொறுத்துத் தீர்மானிக்கவும். இரவு லேசான உணவு சாப்பிடுவதற்கு முன்பே, அதாவது அரை மணி நேரத்துக்கு முன்னரே இந்தக் கொடம்புளி டிரிங்க் ஒரு டம்ளர் அளவுக்குக் குடித்து விட வேண்டும்.

கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டியவை

பசித்த பிறகு இந்தக் கொடம்புளி டிரிங்க் குடிப்பதாலேயே பலன் கிடைக்கும்.

பசிக்காமல் குடித்தால் பலன் கிடைக்காது.

தொடர்ந்து 3 மாதத்துக்கு இந்தக் கொடம்புளி டிரிங்கை செய்து குடித்து வர வேண்டும்.

மிக முக்கியமாகக் காய்கறிகள், பழங்களும் தினமும் சாப்பிட வேண்டும்.

வெறும் சாதம், இட்லி, தோசையைச் சாப்பிட்டுக்கொண்டு இந்த டிரிங்கை குடித்தால் பலன் கிடைக்காது.

இரவு 9 மணிக்குத் தூங்க வேண்டியது முக்கியம். ஏனெனில் நீங்கள் தூங்கும் நேரத்தில்தான் கொழுப்பை, கழிவைக் கரைக்க வெளியேற்றக் கல்லீரலும் பித்தப்பையும் மற்ற ஹார்மோன்களும் ஓயாமல் வேலை செய்யும். வெயிட்லாஸ் பயணத்துக்கு தூக்கம் அவசியம்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?