தொப்பை Twitter
ஹெல்த்

ஒவ்வொரு இஞ்ச் தொப்பையும் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் - தொப்பையைக் குறைப்பது எப்படி?

ஒருவருக்கு கூடுதலாக இருக்கும் தொப்பை 10% வரை இதய செயலிழப்புகளுக்கு வழிவகுக்கிறது என்கிறது ஆய்வு.

Antony Ajay R

பார்சிலோனாவில் உள்ள ஐரோப்பிய இதயவியல் சங்கம் (European Society of Cardiology) அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது,

அதன் படி, ஒருவருக்கு கூடுதலாக இருக்கும் தொப்பை 10% வரை இதய செயலிழப்புகளுக்கு வழிவகுக்கிறது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு 13 ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வு அதிக உடல் பருமன் கொண்டவர்கள் இதய பாதிப்புக்கு ஆளாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நேரடியாக கூறியிருக்கின்றன.

அதிக எடை என்பதை விட இடுப்பில் அதிக கொழுப்பு (தொப்பை) இருப்பவர்கள் தான் இதய செயலிழப்புக்கு ஆளவர் என்று கூறுகிறார் ஆய்வாளர்.

தலைமை ஆய்வாளர் அயோடிபுபோ ஓகுந்தடே ( Dr Ayodipupo Oguntade) மோசமான உணவுப்பழக்கம், தூக்கமின்மை மற்றும் உடல்பயிற்சியின்மை ஆகிய காரணங்களால் வயிற்று பகுதியில் உருவாகும் கொழுப்பு (தண்டு கொழுப்பு - Trunk Fat ) இதய செயலிழப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று உறுதிபடுத்தியுள்ளார்.

அதிக பிஎம்ஐ இருக்கும் நபரை விட அதிக தொப்பை இருக்கும் நபருக்கு இதய செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு 3.21 மடங்கு அதிகமாம். உடலில் மற்ற இடங்களில் கொழுப்பு படிவதை விட தொப்பை விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தான் முக்கியம்.

Fat

ஏன் தொப்பை வருகிறது?

உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல்

அதிக சர்கரை மற்றும் கொழுப்பு உள்ள பொருட்களை உண்ணுதல்

மது அருந்துதல் (பீர் என்றாலும்)

ஆகியவை தொப்பைக்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. தவிர, கர்ப்ப காலம், தைராய்டு, பிசிஓடி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், கற்பகால ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு தொப்பை ஏற்படலாம். ஒருவருக்கு அதிகபட்சமாக 34இஞ்ச் இடுப்பு இருக்கலாம். அதற்கு மேல் அதிகரித்தால் அது தொப்பை தான்!

தொப்பை குறைய என்ன செய்யலாம்?

தொப்பை குறைக்க உடலுழைப்பை அதிகப்படுத்த வேண்டியது அவசியம். வாக்கிங் செல்வதை அதிகரிப்பது, லிஃப்டுக்கு பதிலாக மாடி படியை உபயோகிப்பது போன்றவை தொப்பையைக் குறைக்க உதவும்.

கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களைச் சரிசெய்ய தாய்ப்பால் கொடுப்பது உதவும். தாய்ப்பால் கொடுப்பதால் மட்டுமே தொப்பை குறையும் என்று சொல்ல முடியாது. அதனுடன் ஆரோக்கியமான உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் மேற்கொண்டால் தொப்பை குறையும்" என்றார்.

தொப்பையை குறைப்பதற்கு என்று கார்பாக்ஸிதெரபி என்ற சிகிச்சை முறை இருக்கிறது.

வாக்கிங்கை விட வலிமையாக தொப்பையைக் குறைக்க சில பிரத்யேக பயிற்சிகள் இருக்கிறது.

உடல் பயிற்சிகள் மட்டுமல்லாமல் யோகா பயிற்சிகள் மூலமாகவும் தொப்பையைக் குறைக்கலாம்.

கொள்ளு, கேழ்வரகு, வறுபயறுகள், கல்யாண முருங்கைத்தழை
கொடம்புளி என சில உணவுகள் கொழுப்பை குறைப்பதில் ஸ்பெஷலிஸ்டுகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?