சிறுநீர் Twitter
ஹெல்த்

பீர் போல நுரை நிரம்பிய சிறுநீர் : என்ன காரணம்? - முழுமையான விளக்கம்

சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு லேயர் அளவுக்கு லேசாக நுரை தேங்கியிருந்தால் அது இயல்புதான். பயப்பட வேண்டிய அவசியமில்லை. அது தானாக மறைந்துவிடும்.

மினு ப்ரீத்தி

நீங்கள் கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழித்த பின்பு, உங்களது சிறுநீர் நுரை ததும்பிய பீர் போல் காணப்படுகிறதா? அப்படித் தெரிந்தால் எதனால் இதுபோல் சிறுநீர் வெளியேறுகிறது. இது நார்மலா? எதாவது பெரிய உடல் தொந்தரவின் அறிகுறியா? பார்க்கலாம் விரிவாக…

நிரம்பிய சிறுநீர் பை

உங்களது சிறுநீரகப் பை, சிறுநீரால் முழுக்க நிரம்பி இருந்து, நீங்கள் வேகமாகச் சிறுநீரைக் கழித்தாலும் நுரையுடன் கூடிய சிறுநீர் வெளியேறக்கூடும். சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு லேயர் அளவுக்கு லேசாக நுரை தேங்கியிருந்தால் அது இயல்புதான். பயப்பட வேண்டிய அவசியமில்லை. அது தானாக மறைந்துவிடும். நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல், அடக்கி வைத்து யூரினரி பிளாடர் ஃபுல்லாகிய பின் சிறுநீர் கழித்தாலும் நுரையுடன் வெளியேறலாம்.

டாய்லெட் கிளீனர் கெமிக்கல்ஸ்

டாய்லெட்டில் கெமிக்கல்கள் ஊற்றி கழுவிய பின்னர், நீங்கள் டாய்லெட்டை பயன்படுத்தியிருந்தால் நுரை உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதற்கும் உங்கள் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீருக்கு எந்தத் தொடர்பு இல்லை.

நீண்ட காலமாக உண்ணும் மருந்துகள்

தொடர்ந்து ரசாயன மருந்துகளை நீண்ட காலம் உட்கொண்டாலும் சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனாலும் நுரை நிரம்பிய சிறுநீர் வெளியேறலாம்.

உடலில் வறட்சி

உடலுக்குத் தேவையான தண்ணீரை உடலானது தாகம் மூலமாகக் கேட்கும். தாகம் தீரத் தண்ணீர் குடித்தாலே போதுமானது. தாகம் இல்லாதபோது தேவையில்லாமல் தண்ணீர் பருகுவதைத் தவிர்க்க வேண்டும். தாகம் இருந்தும் தண்ணீர் பருகாமலிருந்தால், உடலில் வறட்சி ஏற்படலாம். டீஹைட்ரேஷன் வர வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் வெளியேற்றும் சிறுநீர் கொஞ்சம் கான்சன்ட்ரேட்டட் நிலையில் இருக்கும். இயல்பாக இருக்கும் நிறத்தைவிடச் சற்று அடர்த்தியான நிறமாக மாறி இருக்கலாம்.

ஆற்றல் குறைபாடு

அடிக்கடியோ அல்லது தினமுமே நீங்கள் எப்போது சிறுநீர் கழித்தாலும் அதிகளவு நுரையுடன் சிறுநீர் போகிறது என்றால், உடலில் ஏதேனும் தொந்தரவுகள் இருக்கலாம். சிறுநீரகங்களின் ஆற்றல், இயக்கம் குறைந்து இருக்கலாம். அதற்கு என்ன காரணம் என மருத்துவரின் ஆலோசனை வழியில் சிகிச்சை பெறுவது நல்லது.

சிறுநீரில் புரோட்டீன்

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருந்து, அதை உங்களது சிறுநீரகங்கள் வடிகட்டி எடுக்கச் சிரமம் ஏற்படலாம். ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமாக இருக்கக் கூடும். குளுக்கோஸூம் புரோட்டீன் மாலிக்குல்ஸூம் சிறுநீரிலும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனாலும் உங்களுக்கு நுரை ததும்பிய சிறுநீராக வெளியேறலாம்.

ரத்தத்தில் புரோட்டீன்கள் உள்ளன. அவை எலும்புகள் மற்றும் தசைகளை உருவாக்கவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், உடலில் திரவங்களைச் சமநிலைப்படுத்தவும் உதவுகின்றன. ரத்தத்தில் உள்ள முக்கியப் புரோட்டீன், அல்புமின். உங்கள் சிறுநீரகங்கள் உங்கள் ரத்தத்திலிருந்து கூடுதல் கழிவுகள், திரவத்தை அகற்றும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள புரோட்டீன், பிற ஊட்டச்சத்துக்களை ரத்த ஓட்டம் மூலமாக உடலில் கடக்கச் செய்கின்றன.

சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்போது, சில புரோட்டீன் மூலக்கூறுகள் சிறுநீரில் வெளியேறும். சிறுநீரில் உள்ள புரோட்டீனை - புரோட்டினூரியா அல்லது அல்புமினுரியா என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி வெளியேறினால் சிறுநீரகத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதற்கான அறிகுறி இது.

அதிக புரோட்டீன் உணவு

நீங்கள் தேவைக்கும் அதிகமான அளவில் புரோட்டீன், அசைவ உணவுகள் சாப்பிடுகிறீர்களா எனக் கவனியுங்கள். இதனாலும் சிறுநீர் நுரையுடன் வெளியேறலாம். அசைவம் அதிகம் உள்ள டயட்களைப் பின்பற்றினாலும் இந்தப் பிரச்சனை வரலாம்.

சிகரெட், ஆல்கஹால்

அதிகளவில் சிகரெட் பிடித்து, ஆல்கஹால் குடித்துப் பாழாகிப்போன சிறுநீரகங்களும், கல்லீரலும்… மிக மோசமான நிலையில் இருந்தாலும் இப்படியான பீர் போல நுரைத்து வெளியேறும் சிறுநீர் வெளியேறலாம்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். செரிமானத் தொந்தரவுகள் உங்களுக்குக் கட்டாயமாக இருந்திருக்கக்கூடும்.

தைராய்டு ஹார்மோன்

தைராய்டு ஹார்மோனுக்கு சிறுநீரகங்களுக்கும் நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. மனபிரச்சனைகளில் இருப்போருக்கு இவை இரண்டும் ஒன்றாகவே பாதிக்கக்கூடும். செரிமானத் தொந்தரவுகள் நீண்ட காலம் இருந்தாலும் ஹார்மோன்கள் பாதிக்கும். இதனாலும் நுரை நிரம்பிய சிறுநீர் வெளியேறலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?