Food  Twitter
ஹெல்த்

உணவில் ஆறுசுவை : எந்தச் சுவையில் என்ன இருக்கிறது?

அறுசுவை உணவு என அடிக்கடி பலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆறு வகையான சுவை உணவிற்கு அடிப்படையாகக் கருதப்படுகிறது. ஆனால் அறுசுவை உணவில் என்னென்ன சுவைகள் அடங்கி உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

மினு ப்ரீத்தி

முதல் பகுதியில் துவர்ப்பு, உப்பு, இனிப்பு பற்றிப் பார்த்தோம். இந்தப் பகுதியில் மீதம் உள்ள சுவைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

புளிப்பு

சில உணவுகளில் சுவை வெளிப்பட்டுத் தோன்றும் அப்படியே வைத்திருந்தால் புளித்துக்கொண்டே வரும். கொழகொழப்பு உடைய உணவுகள் புளிப்பு எனக் கொள்ளலாம்.

புளிப்பு அதிகரித்தால் நோய்கள் பல வரலாம். அதில் பழங்களின் புளிப்பு நன்மையே செய்யும். இவை அமிலம் அல்ல… என்சைம்கள், நொதிகள், செரிமான நீர்கள் எனலாம்.

எலுமிச்சம் பழம் - புளிப்பு, தோலில் கசப்பு இருக்கும்

தக்காளி பழம்

மாம்பழம், காய்

புளி - காய், பழம்

வாழைப்பழம்

பலாப்பழம்

பனம் பழம்

வெள்ளரிப்பழம்

முலாம் பழம்

நாவல் பழம் ஆகியவற்றில் இனிப்பு, புளிப்பு கலந்துள்ளது.

Rice

அரிசியில், பச்சரிசியை விடப் புழுங்கலரிசியில் சிறிது புளிப்பு குறைவு.

கம்பு, தினை, சோளம் ஆகியவற்றில் - புளிப்பு, கசப்பு கலந்துள்ளது

கேழ்வரகு, கோதுமையில் - புளிப்பு, காரம் கலந்து உள்ளது.

உளுந்து, பயறு, துவரை, பாசிப்பருப்பு, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகிய பருப்புகளில் புளிப்பு உள்ளது. இதனுடன் வாயுத்தன்மையும் உள்ளது.

பூசணிப்பருப்பு நன்மையே செய்யும். வாதுமை பருப்பும் ( பாதாம்) நல்லது.

முந்திரி பருப்பு - கசப்பு, இனிப்பு, புளிப்புக் கலப்பு

வேர்க்கடலை - புளிப்பு, கசப்பு

கடலைப்பருப்பு - புளிப்பு, காரம் கலந்தது

வாழைக்காய்

அவரை

பீன்ஸ், டபுள் பீன்ஸ்

வெண்டைக்காய்

கொத்தவரை

மாங்காய்

நார்த்தங்காய்

சீமை களாக்காய் - புளிப்பு கலந்தவை

புளியாரைக்கீரை

புளிச்சக்கீரை

பசலைக்கீரை

பருப்புக் கீரை - உப்பு, புளிப்பு

சேனை, உருளை, ஆள்வள்ளி, சர்க்கரைவள்ளி, பனங்கிழங்கு அனைத்தும் புளிப்பு, இனிப்பு கலந்தவை

தயிர், மோர், வெண்ணெய், நெய், பால், இட்லி, தோசை, ஊத்தப்பம், பரோட்டா, பொங்கல், வடை, பஜ்ஜி, டால்டா, ரீபைண்ட் எண்ணெய், பேக்கரி உணவுகள் ஆகியவை புளிப்பு அதிகம். வாயுவும் அதிகம். வயிற்றில் புளித்துக் கொண்டே போகும். வாயுவை சேர்க்கும்.

கசப்பு சுவை

நரம்பு மண்டலத்துக்கு நல்லது சேர்க்கும். வாசனை உள்ள உணவுகள், கசக்கி நீரிலோ நெருப்பிலோ போட்டால் வாசனை தரும். இவற்றை கசப்பு தன்மை எனக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி, பிராணாயாமம், வெயிலில் விளையாடுவது - கசப்புப் பலன்களைத் தரும்.

வேப்பம் பழம்

தேன் - உடலுக்குக் கசப்பு, நாக்குக்கு இனிப்பு

கம்பு, தினை - புளிப்பு, கசப்பு

தேங்காய், வேர்க்கடலை, எள், கடுகு, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துகளும் இவற்றின் நன்மைகளும் கசப்பு சுவை சார்ந்தவை

தேங்காய் எண்ணெய் - புளிப்பு, கசப்பு

கடலை எண்ணெய் - புளிப்பு, கசப்பு

மிதி பாகற்காய் - கசப்பு

கொம்பு பாகற்காய் - புளிப்புக் கலந்தது

முருங்கைக்காய் - கசப்பு, புளிப்பு

கத்திரிப் பிஞ்சு

கத்திரிக்காய் - காரம் கலப்பு, கசப்பும்

சுண்டைக்காய் - கசப்பு, காரம் கலப்பு

பசலைக் கீரை

தூதுவளைக்காய்

ஆவாரம்பூ

முருங்கைப்பூ - புளிப்பு, கசப்புக் கலப்பு

வேப்பம்பூ

வல்லாரைக் கீரை

தூதுவளைக் கீரை

கொத்தமல்லி

முருங்கைக் கீரை - உப்பு, கசப்பு

அகத்திக் கீரை - உப்பு, கசப்பு

குப்பைக் கீரை - உப்பு, கசப்பு

வெந்தயக்கீரை - உப்பு, கசப்பு

துத்தியிலை - உப்பு, கசப்பு

பொன்னாங்கண்ணி கீரை - ஆறு சுவையும் கலந்தது

கரிசலாங்கண்ணி - துவர்ப்பு, உப்பு, கசப்பு

கறிவேப்பிலை - கசப்பு, துவர்ப்பு

முசுமுசுக்கை இலை - காரம், கசப்பு

முடக்கொற்றான் - மலம் கழிக்க உதவும்

வேப்பிலை

வெந்தயம் - உப்பு, புளிப்பு, கசப்புக் கலந்தது

பூண்டு, சீரகம், சோம்பு, கடுகு, பெருங்காயம், கசகசா, ஓமம், வெற்றிலை - துவர்ப்பு, புளிப்பு, கசப்புக் கலந்தது.

காபி, தேனீர் பால் சேர்க்காதது - கசப்பு. இதில் பால், சர்க்கரை சேர்த்தால் புளிப்பாகும். உடலுக்கு கெடுதி.

காரம் சுவை

சிலவற்றில் சுவை வெளிப்பட்டுக் காணப்படும். எவ்வளவு இடித்தாலும் மாவாக மசியாத பகுதிகளை உடையனவாக இருக்கும். நார் உடையதாகவும் இருக்கும். இவற்றைக் கசப்பு எனப் பிரிக்கலாம்.

மிளகு

இஞ்சி, சுக்கு

மிளகாய்

கருணைக்கிழங்கு

கோதுமை

பொரித்த கடலை

அறுகீரை / அரைக்கீரை - மலச்சிக்கல் தீர்க்கும். தினம் சாப்பிட ஏற்றது.

சிறு கீரை

வேளைக்கீரை

கலவைக் கீரை - கசப்பு, உப்பு, காரம் கலந்தது.

ஆறு சுவைகளையும் இரண்டு பகுதிகளாகப் பார்த்தோம். இதில் உப்பில்லாமல் உண்டு பழகியவர்களுக்கு நோய்கள் வராது. உடலில் உப்புக் குறைந்தால் சூடு குறையும். உடல் வெப்பம் அதிகம் ஆகாது.

அனைத்து உணவையும் மென்று விழுங்குதல் வேண்டும். மெல்லாது விழுங்கினால், அறுசுவை உணவின் சத்துக்கள் வீணாகும். செரிமான உறுப்புகளுக்கு அதிக வேலை உண்டாகும். அஜீரணம் வரும். மந்தம் உண்டாகும்.

புளிப்பு சார்ந்த உணவுகள், இட்லி, தோசை, தயிர், அரிசி, பருப்புகள் ஆகியவை. அதாவது மிக மிக அதிகம் கொண்ட உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?