Food Medicine

 

Facebook

ஹெல்த்

உணவு மருத்துவம் : ஒவ்வொரு நோய்க்கும் ஒரு உணவால் தீர்வு !

மருந்துகளைச் சாப்பிட யாருக்குதான் பிடிக்கும். அதனால், நமக்கு உணவுகளே மருந்தாக இருக்கிறது. உணவுகள் மூலம் உடல் பிரச்சனைகள் சரியானால் அதுவே சிறப்பான விஷயம்தான்.

மினு ப்ரீத்தி

மருந்துகளைச் சாப்பிட யாருக்குதான் பிடிக்கும். அதனால், நமக்கு உணவுகளே மருந்தாக இருக்கிறது. உணவுகள் மூலம் உடல் பிரச்சனைகள் சரியானால் அதுவே சிறப்பான விஷயம்தான். அன்றாடம் பயன்படுத்தும் உணவுகள் இந்தத்த நோய்களுக்குத் தீர்வாகும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு உணவை சாப்பிட்டே ஒவ்வொரு நோய் தொந்தரவுகளையும் குணப்படுத்தலாம். இது இயற்கை நமக்குக் கொடுத்த உணவு லிஸ்ட். இயற்கை நமக்கு நிறைய ஆப்ஷன்ஸ் கொடுத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாமே…

Skin

ஒரு உணவு மருத்துவம்… பல பிரச்சனைகளுக்கு 80+ உணவு வகைகள்…

1.சருமம்

முகம் அழகாக இருக்க, தோல் மினுமினுப்பாக இருக்கத் திராட்சை

சொறி, சிரங்குகளைக் குணமாக்க குப்பைமேனி

தோல் நோய்களைக் குணமாக்க கோதுமைப்புல்

உடல் பொன் போல மின்ன பொன்னாங்கண்ணி

சொறி, சிரங்கு குணமாகப் புங்கம்

Cancer 

2.புற்றுநோய்

புற்றுநோய் செல்களை அழிக்க முள் சீத்தாப்பழம்

புற்றுநோய் வராமல் இருக்க மதுரக்கீரை

மணத்தக்காளி

3.புண்கள் சரியாக

வாய்ப்புண்கள், குடல்புண்களைக் குணப்படுத்த மணத்தக்காளியும் மணத்தக்காளி கீரையும்

குடல்புண்களைக் குணமாக்க வெண்பூசணிக்காய்

வாய் புண், வயிற்றுப்புண் குணமாகத் தேங்காய்

வாழைத்தண்டு

4.சிறுநீரகங்கள் தொடர்பானவை

சிறுநீர் குறைபாடுகளைப் போக்க பீர்க்கங்காய்


சிறுநீரகக் கற்களைக் கரைக்க வாழைத்தண்டு


சிறுநீர் பெருக்கக் கல்யாண முருங்கை


நீர்க்கடுப்பு நீங்க சிலோன்பசலை, பெருநெருஞ்சில்


சிறுநீர் குறைகள் சீராகச் சுண்டைக்காய்


சிறுநீர் தொடர்பான குறைகள் தீர பசலைக்கீரை

முடி

5.முடி

முடி நரைக்காமல் இருக்கக் கல்யாண முருங்கை (முள் முருங்கை)

முடி உதிர்வதைத் தடுக்கப் புடலங்காய்

முடி அடர்த்தியாக வளர செம்பருத்தி

தலைப்பொடுகு குணமாகப் பொடுதழை

பாகற்காய்

6.சர்க்கரை நோய்

சர்க்கரை நோயைக் குணமாக்க அரைக்கீரை

சர்க்கரை நோய் நீங்க முள்ளங்கி

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பாகற்காய்

சளி

7.சளி தொடர்பானவை

உடற்சூடு, பசியின்மை நீங்க எலுமிச்சம் பழம்

சளி, பசியின்மை நீங்க இலந்தைப்பழம்

மார்ப்புச்சளி, இருமலைக் குணமாக்க தூதுவளை

மார்புச்சளி நீங்குவதற்குச் சுண்டைக்காய்

இருமல், மூக்கடைப்பு நீங்க கற்பூரவல்லி

சளி சரியாகக் குப்பைமேனி

ஆஸ்துமா, சளிக்கு தூதுவளை

மூக்கில் நீர் வடிதல், சளி நிற்க முசுமுசுக்கை

ஆஸ்துமாவை குணமாக்க கருத்துளசி

கண்கள்

8.கண்கள்

கண் பார்வை தெளிவாக கேரட், கொத்தமல்லி, கறிவேப்பிலை

கண் புறை எனும் கேட்ராக்ட் சரியாகத் தேங்காய்ப்பால்

பார்வை திறனுக்குப் பொன்னாங்கண்ணி

கண் வலி நீங்க அடுக்கு நந்தியாவட்டைப்பூ

பார்வை திறன் அதிகரிக்கப் பாதாம் பருப்பு

வலி

9.வலி

தலைவலி மறைய நொச்சி இலையை அரைத்துத் தடவவும்

தலைவலி நீங்க தும்பை

மூட்டு வலியைக் குணமாக்க முட்டைக்கோஸ்

உடல் வலி தீருவதற்கு நொச்சி இலை போட்டுக் காய்ச்சி குளிக்கவேண்டும்

வாத வலிகள் குணமாக நொச்சி இலையைக் கொதிக்க வைத்த நீரைக் கொண்டு ஒத்தடம் தரவேண்டும்.

கீல்வாதம், மூட்டுவலி நீங்க வாதநாராயணன் கொன்றை

வாதம் நீங்க தூதுவளை

பல் வலி, பல் சொத்தை நீங்க தும்பை

வயிற்று வலி, மந்தம், வயிற்றுப் பொருமல் தீர சோற்றுக்கற்றாழை, பிரண்டை

மூட்டு வலி, வாதம் குணமாக முடக்கறுத்தான் கீரை

காது வலி குணமாகப் பிரண்டை

வாயுத் தொல்லையில் இருந்து விடுபட வெந்தயக்கீரை

அம்மான் பச்சரிசி

10.வயிற்றுப் பூச்சிகள் நீங்க

வயிற்றுப் பூச்சிகள் ஒழிய, ஒரு தேக்கரண்டி பப்பாளி விதையை அரைத்துப் அரைக்குவளை வெந்நீரில் கலந்து தூங்கும் முன் மூன்று நாட்கள் குடிக்கவும்

நுண் புழு ஒழிய வேம்பு

குடற்புழு நீங்க பொன்னாவரை

வயிற்றுப் பூச்சி நீங்க அம்மான் பச்சரிசி

ரத்த அழுத்தம்

11.ரத்த அழுத்தம்

ரத்தக்கொதிப்பு சீராக முருங்கை

ரத்த அழுத்தத்தைச் சீராக்க துளசி இலைகள்

ரத்தக்கொதிப்புக் குணமாக அருகம்புல் சாறு

ஆண்மைக்குறைவு

12.குழந்தையின்மை குறைபாடுக்கு

தாது விருத்திக்கு, மலட்டுத்தன்மை நீங்க பேரீச்சை

ஆண்மைக்குறைவு நீங்க முருங்கை

மாதவிலக்கு

13.பெண்கள் பிரச்சனைகள்

மாதவிலக்கு கோளாறுகளைச் சீர்செய்ய ஆவாரம்பூ

வெள்ளைப்படுதல் நீங்க சிலோன்பசலை, பெருநெருஞ்சில்

மாதவிடாய் சீராக மிளகு, மணத்தக்காளி கீரை

ரத்தம்

14.ரத்தம்

ரத்தத்தைச் சுத்தமாக்க அருகம்புல் சாறு

ரத்தசோகை குணமாக மாதுளைப்பழம்

ரத்தத்தைத் தூய்மையாக்க திராட்சை

ரத்தத்தைச் சுத்தப்படுத்திப் பப்பாளி, பலாப்பழம்

ரோஜா

15.உடல் சூடு தணிய

குளிர்ச்சி உண்டாக ரோஜா

உடல் வெப்பம் குறைய வெந்தயம்

உடற்சூட்டைத் தணிக்கத் தக்காளி

நரம்புகள்

16.நரம்புகள்

நரம்புகள் நலமடையக் கொத்துமல்லிக் கீரை

நரம்புகள் வலுவடையச் சேப்பங்கிழங்கு

மலச்சிக்கல்

17.மலச்சிக்கல்

மலமிளக்க கல்யாண முருங்கை

மலச்சிக்கலைப் போக்க கொய்யாப்பழம்

மலத்தில் உள்ள நுண்கிருமிகள் அழிய சுரைக்காய்

மூல நோயைக் குணப்படுத்த சப்போட்டா பழம்

ரத்தப்போகை நிறுத்த துத்தி

இதயம்

18.இதயம்

மாரடைப்பு நீங்க மாதுளம்பழம்

இதயப் படபடப்பைக் குறைக்கக் கொய்யா பழம்

அன்னாசிப்பழம்

19.மற்றவை

தொற்று நோய்கள் வராமல் தடுக்க நெல்லிக்காய்

ஈறுகள் வலுப்பெற பீன்ஸ்

மஞ்சள் காமாலையைக் குணமாக்க கீழாநெல்லி

பல் கூச்சம் நிற்க புதினா

செரிமானம் சீராக இருக்க அன்னாசிப்பழம்

அசதியை போக்க பேரீச்சம் பழம்

நினைவாற்றலை அதிகப்படுத்த வல்லாரைக்கீரை

வியர்வை பெருக்கத் திருநீற்றுப்பச்சிலை

வீக்கத்தைக் கரைக்க ஆமணக்கு

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?