இரவு உறங்கும் முன் எந்தெந்த பழங்கள் சாப்பிடலாம்? canva
ஹெல்த்

இரவு உறங்கும் முன் எந்தெந்த பழங்கள் சாப்பிடலாம்?

இந்த இந்த நேரத்தில் பழங்களை சாப்பிட்டால், உடலுக்கு இந்த சத்துக் கிடைக்கும். இரவு நேரங்களில் சாப்பிடக் கூடிய சில பழங்களும் உண்டு. அவற்றைக் குறித்து இங்கு காணலாம்

Keerthanaa R

பழங்கள் இயற்கையாக நம் உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்கக்கூடியவை. பழரசமாக அருந்துவதை விட, பழங்களை மென்று உண்பதால், அதில் உள்ள சத்துக்கள் நமக்கு அதிக ஆற்றலை வழங்கும்.

மருத்துவர்களிடம் முறையாக கேட்டறிந்துக் கொண்டு, பழங்களை நாம் தினசரி சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த இந்த நேரத்தில் பழங்களை சாப்பிட்டால், உடலுக்கு இந்த சத்துக் கிடைக்கும். இரவு நேரங்களில் சாப்பிடக் கூடிய சில பழங்களும் உண்டு. அவற்றைக் குறித்து இங்கு காணலாம்

வாழைப்பழம்:

வழக்கமாக காலை உணவுடன் சாப்பிடப்படும் வாழைப்பழங்களை, இரவிலும் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.இதிலுள்ள மெக்னீசியம் நம் தசைகளை தளர்த்தி, ரத்த அழுத்ததை குறைத்து சீராக்கி, நல்ல உறக்கம் வர வழிவகுக்கிறது

அன்னாசி பழம்:

இது இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மையை தவிர்க்க உதவுகிறது. உடல் களைப்படையாமல் பார்த்துக்கொள்ளும் பைனாப்பிள் பழம், உடலில் உள்ள மெலடோனின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது

ஆரஞ்சு:

பல நற்குணங்களை கொண்டது ஆரஞ்சு பழம். இதிலுள்ள வைட்டமின் சி, நாற்சத்து உடலில் மெலடோனின் அளவை அதிகரிக்கிறது. மேலும் சீரான துக்கத்தை பெறவும், தூக்கத்தின் நேரத்தையும் அதிகரிக்க இது உதவுகிறது

தக்காளி:

பொதுவாக சாலட்களில் தக்காளிகளை நாம் பச்சையாக சாப்பிடுவோம். தக்காளியுள்ள லைகோபேன் எனப்படும் Phytonutrient - தாவர ஊட்டச்சத்துக்கள் உறக்கத்தை மேம்படுத்துகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?