பரிவர் விகாஸ் என்ற மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஒடிசாவில் புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு இலவசமாக காண்டம் மற்றும் கருத்தடை மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பொருட்களின் தொகுப்பு (கிட்) நயி பஹல் அல்லது நபதம்பதி என்று அழைக்கப்படுகிறது. அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர்களால் இந்த பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
பாதுகாப்பான உடலுறவு, குடும்பகட்டுப்பாடு மற்றும் குழந்தை பிறப்பு இடைவெளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இந்த கிட் உடன் இதிலிருக்கும் பொருட்களின் விவரங்கள், உபயோகிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்படும்.
ஒவ்வொரு கிட்டிலும், இரண்டு துண்டுகள், நகவெட்டி, கண்ணாடி, சீப்பு, கைக்குட்டை, ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் மற்றும் திருமண பதிவு படிவம் ஆகியவை கொடுக்கப்படுகிறது.
இது குறித்து சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் பிஜய் பனிக்ரஹி, "மாநில அரசு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த தொகுப்பை வழங்கி வருகிறது" என்று கூறியிருக்கிறார்.
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை புறக்கணித்து வரும் புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கும் இந்த திட்டம், கிராமம்/நகரம் பாகுபாடின்றி அனைத்து இடங்களிலும் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust