Green Magic

 

Facebook

ஹெல்த்

கிரீன் மேஜிக் : கீரைகளைச் சாப்பிட 14 காரணங்கள்

நமது டெய்லி டயட்டில் இடப்பெற வேண்டிய உணவுகளில் ஒன்று, கீரைகள். இவற்றை கிரீன் மேஜிக் எனச் சொல்லலாம். நம் உடலில் மேஜிக் போல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்த இடத்தில் உள்ளது.

மினு ப்ரீத்தி

நமது டெய்லி டயட்டில் இடப்பெற வேண்டிய உணவுகளில் ஒன்று, கீரைகள். இவற்றை கிரீன் மேஜிக் எனச் சொல்லலாம். நம் உடலில் மேஜிக் போல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்த இடத்தில் உள்ளது. ஹெல்தி டயட் பிளான் எனச் சொல்பவர்கள் கீரைகள் மட்டும் டீல்லில் விடவே முடியாது. கீரைகள் இல்லாமல் ஹெல்தி டயட் பிளான் அமைந்து விடாது. கீரைகள் பல வகை. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு சித்த மருத்துவர் தாம். குழந்தைகளும் சில பெரியவர்களும் கீரைகளைக் கண்டால் ஓட்டம் எடுப்பார்கள். சில முக்கியமான விஷயங்களை இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் ஏன் கீரைகளை அவ்வபோது சாப்பிட வேண்டும் என்ற காரணங்களைப் பார்க்கலாம்.

Digestion

1.தேங்கிய மலம் கழியும்

முன்னோர்கள் பரிசோதனையின் அடிப்படையிலும் உணவுக்குப் பயன்படுத்துவதற்கு எனப் பலவகைக் கீரைகளைத் தேர்வு செய்துள்ளனர். இதில் பல உணவுக்குச் சுவையூட்டுவதாகவும் சில உணவுக்கு நறுமண மூட்டுவதாகவும் பசியைத் தூண்டுவதாகவும் இருக்கின்றன. அதுபோல உணவுக் கீரைகள் அனைத்தும் உண்ண தூண்டும் கட்டமைப்பைக் கொண்டவனாகவும் எளிதில் செரிமானம் செய்து மலமாகக் கழிய கூடியனவாகவும் உள்ளன.

Weight will not increase 

2.அதிகம் சாப்பிட்டாலும் எடை கூடாது

கீரைகளில் கலோரிகள் மிகக் குறைவு. நீங்கள் அதிகளவில் அதை மட்டும் உணவாகச் சாப்பிட்டாலும்கூட எடை அதிகரிக்க மாட்டீர்கள்.

நார்ப்பொருள்

3.நார்ப்பொருள் அதிகம்

உணவாகப் பயன்படும் கீரைகளில் புரோட்டீன் சிறிதளவும் இல்லை. கொழுப்பு அதிகமாகவும் இல்லை. ஆனால், உடலுக்குத் தேவையான விட்டமின்களும் தாதுப்பொருட்களும் அதிக அளவில் உள்ளன. செரிமானச் சீராகச் செயல்பட நார்ப்பொருள் தேவை. அவை கீரைகளில் அதிகம் உள்ளன.

Goat and Bull

4.ஆடு, மாடுகள்தான் வழிகாட்டி

விட்டமின் கே, மெக்னீசியம், கால்சியம் ஆகியவை இருப்பதால் எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏற்றது. புல், கீரைகளைச் சாப்பிட்டே ஆடு, மாடு தனக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தன் உடல் மூலமே உருவாக்கி கொள்கிறது. ஆட்டை வெட்டினால் அதில் கொழுப்பு எப்படி வந்தது? வெறும் கீரையை சாப்பிட்ட ஆட்டின் உடலில் அவ்வளவு கொழிப்பிருக்க காரணம் என்ன? எல்லாம் கிரீன் மேஜிக்! ஆடும் மாடும் எந்த சப்ளிமென்ட் மாத்திரைகளையோ பவுடர்களையோ சாப்பிடுவது கிடையாது.

Blind

5.பார்வை இழப்பைத் தவிர்க்கலாம்

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் விட்டமின் ஏ குறைபாடு அதிகம். பார்வை இழப்புகளும் தொடர்ந்து வரும் பிரச்சனை.இதனால் உணவில் கீரைகளை அதிகம் சேர்ப்பதால் இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Type 2 Diabetes

6.டைப் 2 நோய் வராமல் தடுக்கும்

சில ஆய்வறிக்கைகளில் கீரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதைத் தடுக்க முடியும் என்கின்றனர். ஒருநாளைக்கு ஒரு கப் சாப்பிட்டாலுமே 9% சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.

Cancer

7.புற்றுநோய்களைத் தடுக்கும்

கார்டினாய்ட்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், ஃப்ளேவனாய்ட்ஸ் ஆகியன கீரைகளில் இருப்பதால் பெரும்பாலான புற்றுநோய்கள் வராது.

Stomach Problems

8.பிளோட்டிங் பிரச்சனைக்கு பெஸ்ட்

வயிறு உப்புசம் பிரச்சனைகளுக்கு ஹார்மோன்ஸ் பிரச்சனைகளுக்கு வயிற்றில் தொற்றுப் பிரச்சனைகளுக்குச் செரிமானத் தொந்தரவுகளுக்கு கீரைகளைச் சாப்பிடுவதால் விரைவில் குணமாகும்.

glowing skin

9.இயற்கையாகவே அழகான சருமம்

பீட்டாகரோட்டின் சத்துகள் கீரைகளில் இருப்பதால் இயற்கையாகவே சருமம் பொலிவாகும். பரு, மரு இல்லாத அழகான ஸ்கின் கிடைப்பது உறுதி.

Stress Relief

10.மூட் எலிவேட்டர் - ஸ்ட்ரெஸ் குறையும்

தற்போது கீரையை ஸ்மூத்திக்கு பயன்படுத்தி ஜூஸாக குடிக்கும் பழக்கமும் தொடர்ந்து வருகிறது. டோபாமைன், செரோடொனின் ஆகியவை நியூரோடிரான்ஸ்மிட்டர்கள். இந்தச் சத்துக்கள் கீரைகளில் உள்ளதால் நமது மூட் எலிவேட்டராக செயல்படும். ஸ்ட்ரெஸ் குறையும்.

நச்சுத்தன்மை 

11.நச்சுக்களை நீக்கும்

கீரைகளில் உள்ள பச்சையம், கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்திக்கு உறுதுணையாக உள்ளதால், கல்லீரல் நச்சுக்கள் நீக்கவும் பயன்படுகிறது.

நரம்பு மண்டலம் 

12.ஹெல்தி நரம்புகள்

இளம் தளிரான கீரைகளில் ஃபோலெட் சத்துகள் அதிகமாக இருக்கும். இது நரம்பு மண்டலத்தை ஆரோக்கியப்படுத்தும்.

Kids and Ladies special

13.கிட்ஸ் அண்ட் லேடிஸ் ஸ்பெஷல்

அனைத்து தரப்பினருக்குக் கீரைகள் சிறந்த உணவு என்றாலும் வளரும் பிள்ளைகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கீரைகள் அவசியம். அடிக்கடி சாப்பிட வேண்டிய உணவு.

ரத்தசோகை

14.ரத்தசோகை நீங்கும்

கீரைகளில் இரும்புச்சத்து குறிப்பிடத்தக்க வகையில் உள்ளதால் ரத்தசோசையினர் சாப்பிட ஏற்றது. இந்திய மக்கள் மத்தியின் காணப்படும் ரத்தசோகை பிரச்சனைக்குக் கீரைகள் மருந்தாகவே பயன்படும். உணவே மருந்தாகும்.

எவ்வளவு சாப்பிடலாம்?

பொதுவாகத் தினமும் எதாவது ஒரு கீரையை 100-150 கிராம் வரை உணவில் சேர்த்துக்கொள்வது அதிகப் பயன் தரும். தினமும் சாப்பிடுவது அலுப்பைத் தரும்தான். அது உண்மையே. ஆனால், வாரத்தில் 2-3 முறை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும்.

எப்படிச் சாப்பிடலாம்?

உண்ணுவதற்கான கீரைகள் அனைத்தும் தோட்டத்தில் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. காட்டுச் செடியாக வளரும் சில தாவரங்களும் கீரையாகப் பயன்படுத்தப்படுகின்றன.அனைத்தும் காய்கறி சந்தைகளில் கிடைக்கும்.

பொதுவாக கீரைகளைப் பறித்தவுடன் புதிதாக இருக்கும்போதே சமைத்து சாப்பிடுவது நல்லது. ஃப்ரெஷ் கீரைகள்தான் பெஸ்ட். வாடிபோனால் கீரைகளில் உள்ள சத்துக்கள் விரையமாகும்.

கீரைகளைப் பொதுவாகப் பச்சடியாகவோ சூப்பாகவோ பருப்புடன் சேர்த்து சாம்பார் மற்றும் கூட்டு என்றோ, பொரியல், அவியல், மசியல் என்றோ சமைத்துச் சாப்பிடலாம். இப்போது ஸ்மூத்திஸ்க்கும் பயன்படுகிறது.

கீரையை வேகவைக்க நீர் ஊற்றக்கூடாது. கீரைகளிலே நீர் இருக்கும், நாம் நன்றாக கழுவியதால் அந்த நீரே போதுமானது. அதிக நேரமும் கீரைகளை வேக வைக்கக் கூடாது. சத்துக்கள் விரையமாகும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?