Health: அடிக்கடி தலைவலி வருகிறதா? இந்த பழக்கங்களை பின்பற்றுங்கள் ! Canva
ஹெல்த்

Health: அடிக்கடி தலைவலி வருகிறதா? இந்த பழக்கங்களை பின்பற்றுங்கள்!

அதிக நேரம் கணினி, கைப்பேசி போன்ற திரைகளை பார்ப்பதனால் பலருக்கு ஏற்படும் முக்கிய பிரச்னை தலைவலி. தலைவலி ஏற்பட்டால் இந்த வழிமுறைகளை பின்பற்றிப்பாருங்கள்

Keerthanaa R

மாறிவரும் டெக் உலகில், மனிதர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடனடியாக தாக்கம் இல்லாவிட்டாலும், நாளடைவில் மருந்தே உணவு என்ற நிலைக்கு, மிக இளம் வயதிலேயே நாம் தள்ளப்படுகிறோம்.

அதிக நேரம் கணினி, கைப்பேசி போன்ற திரைகளை பார்ப்பதனால் பலருக்கு ஏற்படும் முக்கிய பிரச்னை தலைவலி. தலைவலி ஏற்பட்டால் இந்த வழிமுறைகளை பின்பற்றிப்பாருங்கள்

லாவண்டர் எண்ணெய்:

ஆராய்ச்சிகளின்படி, லாவண்டர் ஆயில் மைக்ரேன் தலைவலியிலிருந்து நிவாரணம் கொடுக்கிறது. நேரடியாக முகர்ந்து பார்ப்பதோ, அல்லது நெற்றியில் தடவிக்கொள்வதோ சிறந்த தீர்வாக இருக்கும்

பெப்பர் மிண்ட் எண்ணெய்:

தலைவலிக்கு மற்றுமொரு மருந்து பெப்பர் மிண்ட் எண்ணெய். இதில் உள்ள கெமிக்கல் மெத்தனால், மைக்ரேன் தலைவலி வருவதை தடுக்கும். அவ்வப்போது வரும் சாதாரண தலைவலியையும் இது தடுக்கிறது

இஞ்சி:

தலைவலியின்போது சிலருக்கு வாந்தி வரலாம், அல்லது வருவது போன்ற உனர்வு ஏற்படலாம். இந்த வாந்தி வருவது போன்ற உணர்வை தடுக்க உதவுகிறது இஞ்சி. மைக்ரேனுக்கும் இது நல்ல தீர்வு என்று கூறப்படுகிறது

யோகாசனம்:

தலைவலி மட்டுமல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க தினமுமே யோகாசனம் செய்வது அவசியமாகிறது. மூச்சுப் பயிற்சி, தியானம், ஆசனங்கள் ஆகியவை மைக்ரேன் தலைவலி ஏற்படுவதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

மெக்னீசியம் அதிகமுள்ள உணவுகள்

தலைவலி ஏற்பட முக்கிய காரணம், உடலில் மெக்னீசியம் அளவு குறைவாக இருப்பது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால், மெக்னீசியம் உள்ள உணவு வகைகள், உதாரணத்திற்கு பாதாம், எள்ளு, சன் ஃபிளவர் விதைகள், முந்திரி ஆகியவற்றை எடுத்துக்கொள்வது சாலச்சிறந்தது

தண்ணீர்

யோகாசனம் எப்படி நம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதோ, அதே போல தேவையான அளவு தண்ணீர் உடலில் இருப்பது அவசியம். தண்ணீரின் அளவு உடலில் குறைந்தால் தலைவலி வரலாம். அதனால், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

 Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

 Follow us on:

 Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

 Nalam 360 : https://www.facebook.com/Nalam360

 Newsnow: https://www.facebook.com/GenZSense

 TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

 Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?