Health: டின்னர் சாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யக் கூடாது? Canva
ஹெல்த்

Health: டின்னர் சாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யக் கூடாது?

இரவு உணவு சாப்பிட்ட பின்னர், சில விஷயங்களை செய்யவேண்டாம் என அறிவுரைக்கப்படுகிறது. அவை என்னென்ன? இந்த பதிவில்...

Keerthanaa R

நமது உணவு சுழற்சியில், நாம் குறைவாக சாப்பிடவேண்டிய நேரம் என்றால் அது இரவு தான். சீக்கிரமாகவும் உணவருந்தி விட வேண்டும்.

ஆனால், நமது வாழ்க்கை முறையின் காரணமாகவே, இரவில் நாம் தாமதமாக சாப்பிடுகிறோம். குறிப்பாக அதிகமாக சாப்பிடுகிறோம். தாமதமாக உறங்குகிறோம். இப்படி லேட்டாக தூங்க நேர்ந்தால், சில சமயத்தில் பசி எடுக்கும். மீண்டும் சாப்பிடுவோம்.

இது நாளடைவில், நமது உடல்நலத்தை பாதிக்கும். தேவையற்ற நோய்கள் வருவதற்கு காரணமாக அமையலாம்.

இரவு உணவு சாப்பிட்ட பின்னர், சில விஷயங்களை செய்யவேண்டாம் என அறிவுரைக்கப்படுகிறது.

ஆகையால் இந்த பழக்கங்களை விட்டுவிடுவது நல்லது

காபி அல்லது டீ அருந்துவது

இந்த பழக்கம் உள்ளவர்களை நமது வீட்டிலேயே கூட பார்க்கலாம். தூங்கபோகும் முன்னர் காபி அல்லது தேநீர் அருந்துவார்கள்.

இந்த பானங்களில் கஃபைன் இருக்கும். இந்த அம்சம், நமது மூளையை சோர்வில் இருந்து புத்துணர்ச்சியடையச் செய்யும். ஆகையால், தூங்குவதற்கு முன் தேநீர் அல்லது காபி அருந்துவது உங்கள் தூக்கத்தை கெடுக்கலாம்.

மதுபானம்

இரவு உணவுக்கு பிறகு மதுபானம் அருந்துவதால் வாந்தி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகளை ஏற்படலாம். மேலும் மதுபானம் அருந்துவது நமது குடலுக்கும் ஆபத்து.

குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தானே?

அதிகபடியான வேலை

இரவு சாப்பிட்ட பிறகு அதிக பளு (மூளை பளு) உள்ள வேலைகளை செய்வதை தவிர்க்கலாம். ஸ்டிரெஸ் அதிகமாவதால், உடலில் கார்டிசாலின் அளவு கூடும். இது அதீத பசியை தூண்டிவிடும். இதனால் பசியை போக்க நாம் மீண்டும் சாப்பிடுவோம். சுகாதரமற்ற, அன்ஹெல்தி ஸ்நாக்குகளை சாப்பிடுவோம். இது நமது உடல்நலத்தை பாதிக்கும்

அதிகமாக சாப்பிடுவது

நமது இரவு உனவின் அளவு, மற்ற இரு வேளைகளை விட குறைவாகவே இருக்கவேண்டும். அதிகபடியான பசி காரணமாக, நமக்கு மிகவும் பிடித்த உணவு என்று கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவோம்.

ஒரு சிலர், ரிலாக்ஸாக சாப்பிடுவதே இரவில் தான் என, அதிகமாக சாப்பிடுவோம்.

ஆனால் இது தவறான செயல். அஜீரணம், வாந்தி, மலச்சிக்கல், உடல் பருமன், இருதயம் தொடர்பான பிரச்சினைகளை இது விளைவிக்கலாம்

உடற்பயிற்சி

இரவு உணவு சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்வது நமக்கு வாய்வு பிரச்னையை உண்டாக்கலாம். அப்படியே உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றால், குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளி விட்டு நாம் உடற்பயிற்சி மேற்கொண்டால், நல்லது.

அதே சமயத்தில், சாப்பிடும்போதும் சரி, சாப்பிட்ட பிறகும் சரி, அதிகமாக நாம் டிவி அல்லது ஃபோன் போன்ற டிஜிட்டல் ஸ்க்ரீன்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், இரவு நேரத்தில் காரமான உணவுகளை தவிர்ப்பதும் நல்லது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?