நம்மில் பலருக்கு பற்களில் கூச்சம் ஏற்படும். இதனால் அவர்களால் சரியாக சாப்பிட முடியாத நிலை உருவாகும். சூடாகவோ கூலாகவோ எதையும் குடிக்க முடியாது.
இவ்வளவு ஏன் சிலருக்கு அதிகமாக பல் வலி இருந்தால் தலைவலியே வந்துவிடும்.
அதிலும் குறிப்பாக இந்த குளிர்காலத்தில் நம்மில் பலருக்கு பல் வலி ஏற்படும்.
அதனை வீட்டில் இருந்தே எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.
சென்ஸிடிவ் பற்களுக்கு சிறந்த முதலுதவி இந்த உப்பு நீரை சொல்லலாம்.
உப்பில் உள்ள ஆன்டி செப்டிக் தன்மை பற்களில் இருக்கும் அழற்சியை குறைக்க பயன்படுகிறது.
பற்களில் உள்ள வலியை குறைக்க தினமும் இரண்டு முறை உப்பு தண்ணீர் கொண்டு வாயை கொப்பளித்து வரலாம்.
சில சமயங்களில் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு வலியை கொடுக்கும்.
அந்த புண் ஆறுவதற்கும், வலிகளை குறைக்கவும், வீக்கத்தை குறைக்கவும் தேன் உதவுகிறது.
வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து வாயை கொப்பளித்து வரலாம்.
மஞ்சளில் குர்குமின் என்ற அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது வாயில் உள்ள புண்களை ஆற்ற உதவுகிறது.
சூடான தண்ணீரில் மஞ்சளை கலந்து கொப்பளித்து வர வழி குறையும்.
க்ரீன் டீயை மவுத்வாஷாக கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை என வாயை கொப்பளித்து வரலாம்.
இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlus